Friday, July 22, 2016

Punalur - Shenkottai Bg work

punalur - shencottai  Bg work

edapazhayam.....
செங்கோட்டை– புனலூர் அகல பாதை பணி இந்த ஆண்டில் முடிவடையும்:  

செங்கோட்டை–புனலூர் அகல ரெயில் பாதை பணிகள் இந்த ஆண்டுக்குள் முடிவடையும் என்றும், இந்த ஆண்டில் ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. செங்கோட்டை ரெயில் நிலையத்தில் புதிதாக முன்பதிவு மையம், பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

இதுதவிர மேலும் சில மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலம் புனலூர் வரை மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகற்றிவிட்டு, அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்ய தெற்கு ரெயில்வே பொது மேலாளர், தமிழக–கேரள மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களில், #செங்கோட்டைபுனலூர் #அகல ரெயில் பாதை திட்டமும் ஒன்றாகும். 

இந்த திட்டத்துக்கான பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. ஆரம்பத்தில் இந்த திட்டப்பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்ற நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் தற்போது வேகமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்குள் பணியை முடிக்க இலக்கு நிர்ணயித்து வேலைகள் நடைபெற்று வருகிறது. தற்போது 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment