———————————————————
சமீபத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து அதன்மூலம் வெள்ளமாக வந்த டிஎம்சி தண்ணீர் வீணாக வங்க கடலில் சென்றுவிட்டது, இதை பாதுக்காக்கவும் தடுத்து நிறுத்தவும் தடுபணைகள் இல்லாமல் இருப்பதுதான் காரணம். குறிப்பாக ஜுன், ஜூலை ஆகஸ்ட் மற்றும் செம்டம்பர் மாதங்களில் தென்மேற்கு பருவமழை, அக்டோபர், நவம்பர், டிசம்பர் வடகிழக்கு பருவமழை பெய்கிறது. இந்த மழையினால் கிடைக்கும் தண்ணீரை பாதுகாத்து பயன்படுத்தாமல் வீணாக கடலுக்கு செல்லும் நிலைதான். சமீபத்தில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த 7 நாள்களாக பலத்த மழை பெய்தது. இதையடுத்து அணைகளுக்கு தொடர் நீர்வரத்து அதிகரிப்பால் 5ஆவது நாளாகதாமிரபரணியில்வெள்ளப்பெருக்கு.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை நவம்பரில் தொடங்கியது. ஆனால் பரவலாக மழை இல்லை. இந்நிலையில் ஜன. 8 ஆம் தேதி முதல் வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக மழை இருந்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பொழிவு இருந்தது.
இதையடுத்து மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து 7ஆவது நாளாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, கடனாநதி, ராமநதி உள்ளிட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரித்து அணைகளிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டது. தொடர்ந்து பெய்த மழையால் அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு 50 ஆயிரம் கன அடியைத் தாண்டியது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நெல்லை வட்டாத்தில் கடுமையான மழை. கடந்த 1992-ல் கடுமையான மழை தாமிரபரணி வெள்ளப் பெருக்கு அதனால் அப்போது 20-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இறந்தனர், 1000 கணக்கானப் பயிர்கள் நாசமாகியின. அதன் பின் 29 ஆண்டுகள் கழித்து கடுமையான மழை அந்த வட்டாரத்தில். தாமிரபணியில் கடும் வெள்ளம் வங்க கடல் முகத்துவாரம் புன்னக்காயல் தண்ணீரால் சூழ்ந்து தனித்தீவாக காட்சியளித்தது, பேருந்து போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக ஜனவரி மாதம் மார்கழி, தை மாதத்தில் கடும் குளிர் இருக்கும், மழை பெய்துவதில்லை. பனியும் குளிரும் மாறி இப்பொது கடந்த ஜனவர் 8 தேதி தொடங்கிய மழை ஒரு வாரம் காலம் கடுமையாக பெய்தது. மாஞ்சோலையில் 512 மிலி மழை பதிவானது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு 1300 மிலி மழை பெய்ததாக தகவல். இன்றைக்கு கால சூழ்நிலைகள் மாறிவருகின்றன. கிளவுட் பஸ்டர் என்ற மேக சூழற்சி வெடிப்பு வானத்தில் ஏற்பட்டது தான் இந்த சூழலுக்கு காரணம் என்று வானிலை நிபுணர்கள் சொல்கின்றனர்.
இந்த மழையினால் பாபநாசம், சேர்வலாறு, கடனா நதி, ராம நதி, சித்தாறு அங்குள்ள 12 அணைகள் நிரம்பி தண்ணீரை திறந்துவிடப்பட்டதால் தாமிரபரணியில் பெரும் வெள்ளம். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 90 கன அடி தண்ணீர் சென்றது, இந்த தண்ணீர் ஸ்ரீ வைகுண்ட அணை வரை பாதுகாக்கப்பட்டால் நமக்கு பயன்பாட்டுக்கு இருக்கும், அதை தாண்டிவிட்டால் புன்னகாயல் முகத்துவாரம் சென்றுவிடும், இந்த வகையில் கடும் மழையினால் 70 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றுவிட்டது.
முல்லை பெரியாறு, காவிரி, சிறுவாணி, பாலாறு போன்ற நதிதீரங்களில் 10 முதல் 20 டிஎம்சி தண்ணீருக்கே போராடுகிறோம், ஆனால் தாமிரபரணியில் 70 டிஎம்டி தண்ணீர் விரயம் ஆகிவிட்டது. சரியான திட்டங்கள் இல்லை. அரிநாயகிபுரம் மானூர் கால்வாயை செப்பனிட்டு இருக்கலாம். அது நடைமுறைப்படுத்தவில்லை, அப்படி செப்பனிட்டு இருந்தால் மானூர் குளம் நிரம்பி குங்களூர் மூலமாக தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் நீர்த்தேக்கத்துக்கு தண்ணீரைக் கொண்டு சென்று இருக்கலாம். அதுமட்டுமல்ல ஸ்ரீ வைகுண்டம் சாத்தாகுளம், சடையநேரி வாய்க்கால் பழுது பார்த்திருந்தாலோ அல்லது மருதூர் மேல்கால் பெருங்குளம் ஆறுமுக மங்கலம் கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்த வெள்ள நீரை பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கலாம். அதுமட்டுமல்ல பல குளங்கள், நீர் நிலைகள் குறிப்பாக கடப்பா குளம், எழுத்தாளர் மாதவய்யா ஊர் பெருங்குளம் 50 மேற்பட்ட குளங்கள் தூர்வாரப்டவில்லை. இன்றைக்கு வீணாய் போன 70 டிஎம்சி தண்ணீரால், 50 ஆயிரம் ஏக்கர் திருநெல்வேலி நகரத்தின் கீழ் பகுதி வட்டாரத்தில் தூத்துக்குடி மாவட்டம் பலம் பெற்று இருக்கும். இதற்கு மத்தியில் தாமிரபரணி விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பாறு, இணைக்கும் திட்டத்தையும் தமிழக அரசு அடிக்கல் நாட்டியது. இருப்பினும் சரியாக பாதுகாக்கப்படாத குறுகாணி, முக்காணி, வாழவல்லான் தடுப்பணைகள் இருந்தும் போதுமானதாக இல்லை.
இந்த வெள்ளப்பெருக்கில் கிடைக்கும் தண்ணீரை திட்டமிடப்பட்ட தாமிரபரணி கருமேனி ஆறு, நம்பியாறு இணைப்பிலும் பாதுகாத்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.

No comments:
Post a Comment