Wednesday, February 10, 2021

#காட்டுப்பள்ளி_துறைமுகம்


———————————————————
சென்னைக்கு அருகில் காட்டுப்பள்ளி துறைமுகம் 330 ஏக்கரில் அமைந்துள்ளது. அதை 6110 ஏக்கரில் விரிவாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 1515 ஏக்கர் தமிழக அரசின் TIDCO நிறுவனத்திற்கு சொந்தமானது. மேலும் 1967 ஏக்கர் கடலை ஒட்டிய பகுதியாகும். தனியாரிடமிருந்து 2291 ஏக்கர் கையகப்படுத்த வேண்டும். இந்நிலையில் இத்துறைமுகம் விரிவாக்கப்பட்டால் இப்பகுதியில் உள்ள கொற்றலை ஆற்றில் கடல் நீர் ஆற்று நீரோடு கலந்து விடும். திருவள்ளூர் சென்னை மாவட்டத்திற்கு இது ஆபத்தானதும் கூட. அதேபோல கிருஷ்ணப்பட்டிணம் துறைமுகம் விரிவாக்கம் செய்யும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டத்திற்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் மறுதேதி குறிப்பிடபடாமல் ஒத்திவைத்தனர்.

கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு வடக்கே 300மீ தொலைவிற்கு கடலரிப்பு நிகழ்ந்துள்ளது. கிழக்கு பகுதியில் 670மீட்டருக்கு கடற்கரை உருவாகியுள்ளது. ஆண்டிற்கு 8மீ கடலரிப்பு நிகழும் பழவேற்காடு ஏரி காணமல் போகும்
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
24-01-2021

No comments:

Post a Comment

Yoga day column by VP

  Yoga day column by VP @CPR_VP in Tamil Dinamani, today 20- 6-2026 @narendramodi @PMOIndia @AmitShah @nsitharaman @NitinNabin @...