Wednesday, June 14, 2023

பாட்னாவில் நடக்க இருக்கும் எதிர் கட்சிகளின் மாநாடு குறித்து ‘ #*கனவு நனவாகுமா*?’ என்ற எனது கட்டுரை வெளிவந்துள்ளது. #எதிர்க்கட்சிகளின் சேடோ கேபினெட்அமையுமா? கனாக்களும் வினாக்களும்! - வழக்கறிஞர்கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

இன்றைய(14-6-2023) தினமணியில்; பாட்னாவில் நடக்க இருக்கும் எதிர் கட்சிகளின்  மாநாடு     குறித்து ‘ #*கனவு நனவாகுமா*?’ என்ற எனது கட்டுரை வெளிவந்துள்ளது.

#எதிர்க்கட்சிகளின் சேடோ கேபினெட்அமையுமா?
கனாக்களும் வினாக்களும்!
- வழக்கறிஞர்கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
                                                                                                                                             கடந்த ஒன்பது ஆண்டுகளாக மத்தியில்ஆட்சி அதிகாரத்தை இழந்த காங்கிரஸ் கட்சிக்கு சமீபத்தியகர்நாடகச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்துள்ளன. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத்தேர்தலிலும் அதே போன்ற வெற்றிக்கனியைப் பறிக்க முடியும்என்ற நம்பிக்கையில் அக்கட்சி உள்ளது. மேலும், கடந்தஒன்பது ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் பாஜகவைவெல்வது கடினம் என்ற பொதுக்கருத்தைக் கர்நாடகம்புஷ்வாணமாக்கி விட்டது. இந்தத் தேர்தல் வெற்றி வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரானவலுவானதோர் அணியை உருவாக்க அனைத்து பிராந்தியக்கட்சிகளையும் முடுக்கி விட்டிருக்கிறது; முயற்சி எடுக்கத்தூண்டிவிட்டிருக்கிறது. .
ஆனால் ஏற்றமிகுந்த ஓர் எதிரணியை ஒன்றிணைத்துஉருவாக்க வேண்டும் என்பது நாடுதழுவிய ஒரு கனா; முடியுமாஎன்பது ஆகப்பெரிய வினா.
பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஒரேகுடையின் கீழ் கொண்டுவந்து பாஜகவுக்கு எதிரானஎதிர்க்கட்சி அணியை அமைப்பதற்கான திட்டங்களில்தீர்க்கமாக ஈடுபட்டிருக்கிறார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (திரிணாமுல்காங்கிரஸ்), தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் (பாரத்ராஷ்டிர சமிதி) மற்றும் பாஜக அல்லாத பிற கட்சிமுதல்வர்களான கேரள முதல்வர் பினராயி விஜயன் (சிபிஎம்), தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (திமுக), கர்நாடக முதல்வர்சித்தராமையா (காங்கிரஸ்) ஆகியோர் பாஜகவைத்தோற்கடிக்கும் இலட்சியத்திற்குத் தோள்கொடுப்பார்கள் என்றுஎதிர்பார்க்கப் படுகிறது. 
மணிமுடி என்பது எப்போதும் அச்சத்தோடுதான் தலையில்இருக்கிறது என்ற ஷேக்ஸ்பியரின் பொன்மொழி எல்லாக்காலஅரசியலுக்கும், எந்நாட்டு அரசியலுக்கும் பொருந்துவதுதான்(நான்காம் ஹென்றி-பாகம் 2).
முதலில் 2023 ஜூன் 12 அன்று பாட்னாவில் நிதிஷ்குமாரால்திட்டமிடப்பட்டிருந்த கூட்டம் இப்போதுஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்திற்குப் பல்வேறுகட்சித் தலைவர்கள் பிரதிநிதிகளை அனுப்பாமல்நேரடியாகவே வர வேண்டும் என்பது ஒரு கட்டளையாகச்சொல்லப்படுகிறது. மேலும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ்முக்கிய சக்தியாக முன்னிறுத்தப்படுகிறது. ராகுலும் அவரதுதாயார் சோனியா காந்தியும் வெளிநாட்டில் இருப்பதால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூட்டம்ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார், எனவே ஜூன்23-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  
இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசியமாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா ஜூன் 7, 2023 அன்று பெங்களூரில் முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்றஜனதா தள தலைவருமான தேவகவுடாவை சந்தித்தார். இந்தசந்திப்பு எதிர்க்கட்சிகளின் முயற்சிகள் குறித்த ஊகங்களைஎழுப்பியுள்ளது.  இருப்பினும், இந்த சந்திப்புக்கு அரசியல்முக்கியத்துவம் இல்லை என்று அப்துல்லா மறுத்துக்கூறிவிட்டார்.
ஒரு வலுவான எதிர்க்கட்சிப் பாசறையை எழுப்பிக்கட்டமைக்கும் இந்த விடாமுயற்சிகள் தடைகள் கடந்துவெற்றி பெறுமா என்ற ஐயப்பாடு எழுந்து கொண்டேஇருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ்தலைமையில் அந்த அணி உருவாக வேண்டுமா என்றகேள்வியைக் கேட்கிறார்கள் சில எதிர்க்கட்சித் தலைவர்கள்என்பதுதான். 
மமதா, சந்திரசேகர ராவ் போன்ற தலைவர்கள் காங்கிரசைமுன்னிறுத்தும் திட்டத்தை ரசிக்கவில்லை. மோடிக்கு எதிராககாங்கிரஸுடன் கைகோர்க்க வேண்டும் என்று சிலகட்சிகளுக்குச் சொல்லப்படுகிறது. ஆனால் காங்கிரஸும், அந்தச் சில கட்சிகளும் சில மாநிலங்களில் இருதுருவங்களாக சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன.
உதாரணமாக கேரளாவில் காங்கிரஸ்க்கு எதிராக சிபிஎம்இருக்கிறது; மேற்கு வங்கத்தில் திரிணாமூலுக்கு எதிராககாங்கிரஸும் மற்றும் காங்கிரஸுக்கு எதிராக சிபிஎம்-மும், திரிபுராவில் சிபிஎம்-க்கு எதிராக காங்கிரஸும் உள்ளன.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலானஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், சந்திரபாபு நாயுடுதலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் ஒன்றுக்கொன்றுமுரண்பட்டாலும், அவை இரண்டும் பாஜகவை ஆதரிப்பதில்ஒற்றுமையாக உள்ளன. எனவே, பாஜகவுக்கு எதிரான பலமானஅணி நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்பது உறுதியில்லை.  
1999 ஆம் ஆண்டில் தனது சொந்த தேசியவாத காங்கிரஸ்கட்சியை நிறுவிய ஒருகாலத்தில் காங்கிரஸ் அதிருப்தித்தலைவராக இருந்த சரத் பவார்  பாஜகவுக்கு எதிரான அணியைஉருவாக்கும் முயற்சிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.  இருப்பினும், அவர் இறுதியில் என்ன முடிவெடுப்பார் என்பதுஇன்னும் தெளிவாகவில்லை. 
உத்தரப்பிரதேசத்தில் அப்னா தளம் (எஸ்), பஞ்சாபில்அகாலிதளம் மற்றும் தமிழ்நாட்டில் அதிமுக ஆகிய கட்சிகள்பாஜகவின் முதுகில் ஏறி சவாரி செய்பவை. ஆதலால்தேசமெங்கும் எதிரணியைக் கட்டமைக்கத் திரளும்முயற்சிகளுக்கு அந்தக் கட்சிகளின் ஆதரவு முயற்கொம்பே.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இந்த விவகாரத்தில்உறுதியாக  இல்லாமல் கழுவிய நீரில் நழுவும் மீனாக அவர்இருக்கிறார்.
இதேபோல் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசியஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும்சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர்காங்கிரஸ் தலைமையிலான எதிரணியில் இணைந்துஓரணியாக நிற்க மாட்டார்கள். ஏற்கனவே அந்தக் கட்சிகள்பல்வேறு சூழல்களில் காங்கிரஸைக் காட்டமாகவிமர்சித்திருக்கின்றன.
எனவே காங்கிரஸ் தலைமையிலான கனமானஎதிர்க்கட்டமைப்பு என்பது கானல் நீராகி விடுமோ என்றசந்தேகங்கள் ஊர்வலம் வருகின்றன.
ஆனாலும் இம்மாதிரியான அரசியல் சூழல் இந்தியாவுக்குப்புதிதல்ல. சரித்திரத்தைச் சற்றே திரும்பிப் பார்த்தால் சரியானமுன்னுதாரணங்கள் சடுதியில் வெளிவரும். 
காங்கிரஸ் எதிர் கம்யூனிஸ்டுகள்
நாடு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியகாலத்திலிருந்தே நேரு தலைமையிலும், பின்னர் இந்திராகாந்தியின் தலைமையிலும் காங்கிரஸ் ஏகபோக உரிமையாகஅதிகாரம் செலுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே. 
1950-களில் சர்வ வல்லமை படைத்த காங்கிரஸ், வேறு எந்தக்கட்சியும் தனக்கு சவாலாக உருவெடுக்காமல் பார்த்துக்கொண்டது.  எனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிஎஸ்பி-எஸ்எஸ்பி (சோசலிஸ்ட்) மற்றும் இந்து மகாசபா போன்றகட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தது.
சொல்லப்போனால், மகாத்மா காந்தி தலைமையில் சுதந்திரப்போராட்டத்தின்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டுசில கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட் தலைவர்கள் வியர்வை சிந்திப்போராடினார்கள்.
எனவே, சோஷலிஸ்டுகளை சமாதானப்படுத்துவதற்காக, அப்போதைய பிரதமர் நேரு 1955 ஆம் ஆண்டில் அகில இந்தியகாங்கிரஸ் கமிட்டியின் 70-ஆவது அமர்வில் நாட்டின் சோசலிசபாணி ஆட்சி குறித்த தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.  
பின்னர், கம்யூனிஸ்டுகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், ரஷ்ய கம்யூனிசத்தின் அம்சங்களைக் கொண்ட தனதுபொருளாதாரக் கொள்கையை நேரு வகுத்தார்.  
காங்கிரஸ் ஏகாதிபத்தியம் எவ்வாறு முறியடிக்கப்பட்டது?
1970-களின் முற்பகுதியில் ’இந்திராவே இந்தியா, இந்தியாவேஇந்திரா’ என்ற உரத்த முழக்கம் ஓங்கி ஒலித்ததுதேசமெங்கும். காங்கிரஸ்க்கு மாற்றும் இல்லை; வேறெந்தகட்சிக்கு ஆற்றலும் இல்லை என்று விதந்தோதப்பட்டது. 
சூழ்நிலைகளைப் பொறுத்து எப்போது மிருகமாகச் செயல்படவேண்டும், எப்போது மனிதனாக இருக்க வேண்டும் என்பதைஒரு புத்திசாலி ஆட்சியாளருக்கு அறிவுறுத்தும் இத்தாலியவித்தகர் மாக்கியவெல்லியின் அரசியல் கோட்பாட்டை(’இளவரசர்’ புத்தகம் – 16-ஆம் நூற்றாண்டு) அப்போதையபிரதமர் இந்திராகாந்தி முழுமையாகப் பின்பற்றினார்.  
காங்கிரஸ் கோலியாத்தைப் போல தோற்றமளித்தாலும், சிலடேவிட்டுகளும் தோன்றத்தான் செய்தனர்.
1970-களில், ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் ஜே.பி.கிருபளானிநிறுவிய நவ நிர்மாண் இயக்கம் (நிதிஷ்குமார், லல்லு பிரசாத்யாதவ் மற்றும் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் இதில்உதயமானவர்கள்தான்) வட இந்தியாவில் காலூன்றத்தொடங்கியது, மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன் ராம், சரண்சிங், வாஜ்பாய், அத்வானி, மதுதண்டவதே, ஜார்ஜ் பெர்னாண்டஸ், ராஜ் நாராயண் மற்றும் பலர் உட்பட அனைத்து இந்திராஎதிர்ப்பாளர்கள் ஒன்றிணைந்து கைகோர்த்தார்கள். இவ்வாறுகாங்கிரஸ் (ஓ), இந்திய சோசலிஸ்ட் கட்சி, பாரதிய ஜனசங்கம்(பாஜகவின் பழைய அவதாரம்), லோக் தளம் உள்ளிட்டகட்சிகளின் கூட்டணி பிறந்தது. ஜனதாக் கட்சி என்றுபெயரிடப்பட்ட அந்தக் கலவை அணி, அதுவரை வெல்லமுடியாத காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து தூக்கிஎறிந்தது. இந்த முன்னணிக்கு திமுகவும், சிபிஎம் கட்சியும்ஆதரவு தெரிவித்தன.
1975 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி கொண்டுவந்தஅவசரநிலைப் பிரகடனமும், அது உருவாக்கிய அத்துமீறல்அலைகளும், தலைவர்களை வேட்டையாடியதயவுதாட்சண்யமற்ற அடக்குமுறைகளும், ஜனதா கட்சியின்சரித்திர வெற்றிக்கு முக்கிய ஊக்கிகளாக இருந்தன. முதன்முதலில் காங்கிரஸ் அல்லாத கட்சியொன்றுஆட்சிக்கட்டிலில் அமர்வதை ஆச்சரியத்துடன் பார்த்ததுபாரதம்.  
ஆனால் துரதிர்ஷ்டவசமா, பின்னர் ஜனதா கட்சியில் கருத்துவேறுபாடுகள் வெடித்தன, அதிகார ஆசைகளும், ஆணவமுரண்களும் ஆட்சியில் மண்ணை அள்ளிப் போட்டன.  மொரார்ஜியின் ஜனதா அரசாங்கம் கவிழ்ந்து, லோக்தள்தலைவர் சரண்சிங் பிரதமராக தமிழகத்திலிருந்து அதிமுகஆதரவையும் பெற்றது.
இந்த நிலையில் முதன்முதலாக தமிழகத்தில் திராவிடஇயக்கத்தைச் சேர்ந்த சத்தியவாணி முத்து, நண்பர் பாலாபழனூர் கேபினெட் அமைச்சர்களாக மத்தியில்பொறுப்பேற்றனர். அதுவும் ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கமுடியாமல் சரண்சிங் அரசும் கவிழ்ந்தது. 
ஆதலால் 1980-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஜனதாவைசறுக்க வைத்து சரித்திரம் படைக்கும் அளவுக்கு இந்திரா தன்தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை மீட்டெடுத்தார்.
பின்னர் 1984 வரை இந்திரா காந்தியாலும் (1984-ல் படுகொலை செய்யப்பட்டார்), அவரது மகன் ராஜீவ்காந்தியாலும் (1991-ல் படுகொலை செய்யப்பட்டார்) வழிநடத்தப்பட்ட காங்கிரஸ்க்கு மாற்றாக தேசிய முன்னணி(என்.எஃப்) உருவாக்கப்பட்ட 1989 வரை ஒற்றைக் காங்கிரஸ்ஆட்சி தொடர்ந்தது.  தேசிய முன்னணி (1989-91) ஜனதா தளம்தலைமையிலான கட்சிகளின் கூட்டணியால்உருவாக்கப்பட்டது, இதில் என்.டி.ராமராவ் (தெலுங்கு தேசம்) தலைவராகவும், வி.பி.சிங் ஒருங்கிணைப்பாளராகவும் நாட்டின்பிரதமராகவும் இருந்தனர். பின்னர் சந்திரசேகர் (ஜனதா தளத்தலைவர்) வி.பி.சிங்கிற்குப் பிறகு பிரதமரானார். தமிழகத்தில்திமுக, ஒருங்கிணைந்த ஆந்திராவில் என்.டி.ஆர் மற்றும்அசாமில் அசாம் கன பரிஷத் போன்ற பிராந்திய கட்சிகள்தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தின, இடதுசாரிகட்சிகள் காங்கிரசின் மேலாதிக்கத்தை தகர்க்கும் சக்தியாகஅந்த முன்னணியை ஆதரித்தன.
பின்னர் ஆளும் கட்சிக்கு எதிராக ஐக்கிய முன்னணி (1996-98) என்ற அமைப்பு ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, திமுக, தெலுங்கு தேசம், ஏஜிபி, இடதுசாரிகள், திரிணாமுல்காங்கிரஸ் போன்ற கட்சிகளால் உருவாக்கப்பட்டது. பதின்மூன்று கட்சிகளைக் கொண்ட அந்தக் கூட்டணிதான்தேவகவுடாவை (ஜனதா தளம்-எஸ்) பிரதமராக்கியது, பின்னர்ஐ.கே.குஜ்ராலை பிரதமராக்கியது.  
1996 பொதுத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சி என்றஅந்தஸ்தைப் பெற்ற போதிலும், 13 நாட்கள் மட்டுமே நீடித்ததனது அரசாங்கத்தைத் (வாஜ்பாய்) தக்கவைக்கத் தேவையானபெரும்பான்மையை அந்தக் கட்சியால் பெற முடியவில்லை. எனவே, பல கட்சிகளின் கலவையான UF அதிகாரத்தில்அமர்த்தப்பட்டது, இருப்பினும் அதன் ஆட்சி 1998 இல்கவிழ்ந்தது.
1984-ல் வெறும் இரண்டு எம்பி-க்களை மட்டுமே கொண்டிருந்தபாஜக, இப்போது 303 எம்.பி.க்களைக் கொண்ட அளவுக்குவளர்ந்துள்ளது. 1999-ல் ஆளும் கட்சியாக தனது கணக்கைத்தொடங்கிய அக்கட்சி, 2004-ல் காங்கிரஸிடம் அதிகாரஅந்தஸ்தை இழந்தது. பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி 2014-ல் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கபத்தாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 
எட்டு ஆண்டுகாலப் படுதோல்விக்குப் பின்பு 2004-ம் ஆண்டில்மீண்டும் அரியணை ஏறிய காங்கிரஸ் இப்போது கிட்டத்தட்டஒரு தசாப்த காலமாக அரசியல் வனாந்தரத்தில் உள்ளது. 2024-ம் ஆண்டில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா? எதிர்க்கட்சிகள், குறிப்பாக பிராந்திய கட்சிகளுக்கு இடையிலானபேச்சுவார்த்தைகள் எப்படி முடியும் என்பதைப் பொறுத்ததுஅந்தக் கேள்விக்கான விடை. 
பாஜகவுக்கு எதிரான அணியை வழிநடத்த காங்கிரஸ்வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதுதான் இன்றையதேசிய அரசியலைத் திணறடித்துக் கொண்டிருக்கும் வினா.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஜனநாயகம் உயிர்வாழகுறைந்தபட்சம் இரண்டு சமமான சக்திவாய்ந்த கட்சிகள்தேவை.  பாப் ஹோப் என்ற்
புகழ்பெற்ற அமெரிக்க நகைச்சுவை நடிகர் பாப் ஹோப்பின்வார்த்தைகள் இந்த இடத்தில் மிகவும் பொருத்தமானவை: “எந்த ஒரு கட்சியாலும் எல்லா மக்களையும் எல்லாநேரத்திலும் முட்டாளாக்க முடியாது; அதனால்தான்எங்களுக்கு இரண்டு கட்சிகள் உள்ளன." 
காங்கிரஸ்-பாஜக யுத்தத்தைப் பார்க்கும் போது, மத்தியகாலஇத்தாலியில் கியூயெல்ஃப் மற்றும் கிபெல்லைன் கட்சிகளுக்குஇடையில் நிகழ்ந்த சண்டைகள் ஞாபகத்திற்கு வருவதைத்தவிர்க்க முடியவில்லை. 
ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் குரல் சேடோ கேபினெட்குரல் என்று அழைப்பதுண்டு. இந்த பாட்னா மாநாடு வலுவானசேடோ கேபினெட்டை உருவாக்குமா என்பது மில்லியன்டாலர் வினாவாகும்.
                                                    -அரசியலாளர்.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSR_Post
14-6-2023.


No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...