Thursday, June 1, 2023

#*யாழ் நூலக எரிப்பு 42 வது நினைவு ஆண்டு*.



—————————————
யாழ்ப்பாணம் நூலகத்தை தீயிட்டு சிங்களர்கள அழித்த இடத்தில் இந்திய அமைதி படை-1988 




தமிழரின வரலாற்று புள்ளி யாழ் நூலகத்தை தீயிட்டு சிங்களர்கள அழித்த இடத்தில் இந்திய அமைதி படை-1988.
1981 யாழ்ப்பாண நகரம் எரிப்பு அல்லது பொதுவாக யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு (Burning of Jaffna Public Library) என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1-6-1981  ஆம் தேதி இரவு சிங்களர்கள் மூலம் நடந்தது.

1981 மே 31 இரவு ஆரம்பமான இந்த வன்முறைகளின் போது யாழ்ப்பாண நகரில் உள்ள முக்கிய சந்தை, வணிக நிறுவனங்கள், ஈழநாடு அலுவலுகம், யாழ்ப்பாணப் பொது நூலகம், ஆகியன முற்றாக எரியூட்டப்பட்டன. இந்நிகழ்வு 20ம் நூற்றாண்டின் இன, கலாச்சார அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது.

யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் சிங்கள அமைச்சர் காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியூ உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர்.

(யாழ் நூலகத்தை தீயிட்டு சிங்களர்கள அழித்த இடத்தில் இந்திய அமைதி படை-1988 )

#ksrpost
1-6-2023.

No comments:

Post a Comment

*Sometimes you might feel like giving up on everything*.

*Sometimes you might feel like giving up on everything*. You might have both good  and bad days, but more bad than good or so it seems. Ever...