மறதி என்னும் கல்லறையில்
உயிருடன் உறங்குபவர்கள்தானே
நாம்….*tk . Kalapriya*
#செந்தில்பாலாஜி மனு தள்ளுபடி
28ம் தேதிவரை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை என சொல்லிவிட்டது நீதிமன்றம், இனி மருத்துவர்களை அருகில் வைத்து கொண்டு ஈடி அமைப்பு விசாரணை நடத்தலாம் என்பது நிலை
அதாவது இனி அவர் தமிழக அமைச்சர் பதவிக்கு திரும்புவது சாத்தியமில்லை , சாத்தியம் என்றாலும் மறுபடி தண்டனை அறிவிக்கபட்டால் பதவி இழப்பு உறுதி
இவ்வளவு நடந்தும் இன்னும் அவர் பதவிக்கு மாற்றுநபர் அறிவிக்கபடாதது ஆச்சரியம்
செந்தில் பாலாஜி ஒன்று கலைஞருடன் கட்சி வளர்த்த்வர் அல்ல, மிக மூத்த திமுக தலைவரும் அல்ல
மிசா காலத்தில் அவர் கைகுழந்தையாக இருந்தவர் அப்போதும் போராட வரவில்லை
ஆனானபட்ட எங்களை போன்ற பலர் உள்ள கட்சி திமுக, அங்கே புதுமுகம் ஒருவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன், ஒரு காலத்தில் திராவிட கழகத்தார் பிரிட்டிஷ் மன்னருக்கு கொடுத்த மரியாதை ஏன் என்பதுதான் ஆச்சரியம்
அந்த அளவு அவர் ஏன் முக்கியம் என்பதுதான் மக்களின் வினா?
அவர் இல்லையென்றால் கொங்கு மண்டலம் கட்சியினை விட்டு போய்விடும் என வாதத்துக்கு சிரிக்காமல் சொன்னாலும், அப்படியானால் பெரியார், அண்ணா, கலைஞர் உழைப்பெல்லாம் வெறும் உருட்டலா, திராவிட கொள்கை கொங்கு மண்டலத்தில் செந்தில்பாலாஜி வடிவில்தான் நிற்கின்றது என்பதெல்லாம் என்பது எவ்வளவு பெரும் வீழ்ச்சி?
இப்படி எந்த பின்புலமும் இல்லா ஒருவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம், அவர்மேல் அப்படி என்ன பயம் என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை
இனியாவது அவர் இலாகா மாற்றபடும் என எதிர்பார்ப்போம், இன்னும் அவரை மந்திரி பதவியில் நீட்டிக்க செய்வதெல்லாம் நாடே சிரிக்கும் விஷயம்
ஏன் தயக்குகின்றார்கள் என்பது தெரியவில்லை
ஒருவேளை புதிய அமைச்சர் என்றால் ஆளுநரிடம் சொல்லவேண்டும், அவரிடம் இப்படி ஊழல் காரணமாக எங்கள் அமைச்சர் சிக்கிவிட்டார் அதனால் அவரை மாற்றுகின்றோம் என சொல்ல வெட்கபடுகின்றார்களோ என்னவோ?
நேற்று காலை முதல்வர் விசாரனை கைதி_பாலாஜி யை 'சந்தித்து' பேசிய பொழுது அவர் முழு ஆரோக்கியத்துடன் இருந்தார். வழக்கமாக தீவிர சிகிச்சையில் இருக்கும் இருதய நோயளிகள் ஆக்ஜிசன் மாஸ்க்குடன், டிரிப்ஸ் கொடுக்கபட்டு படுத்திருப்பார்கள், ஆனால் இவரோ எந்த உதவியும் இன்றி உட்கார்ந்து இருக்கிறார்.
முதல்வர் பேசிவிட்டு சென்ற பிறகு ஆஞ்சியோகிராம் எடுக்கபட்டு இருதயத்தில் அடைப்பு இருப்பதாகவும், பைபாஸ் சர்ஜரி தேவை எனவும் செய்தி வெளியிடபட்டது, பின்னர் சிகிச்சைக்காக அமைச்சர் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்க பட்டது.
நேற்று மாலை 4 மணி முதல் தமிழ்நாடு சிறைத்துறையின் முழு கண்காணிப்பு வளையத்திற்குள் வந்து விட்டார் செந்தில் பாலாஜி, அமலாக்கதுறை அதிகாரிகளும் துணை ராணுவமும் வெளியேறிவிட்ட நிலையில் அவருக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும், அவர் யார் யாரை சந்திக்கலாம் என அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு மட்டுமே இருக்கிறது.
- இந்நிலையில் உடனடியாக பைபாஸ் சர்ஜரி தேவை என செய்தி வந்து 24 மணி நேரமாகியும் இதுவரை ஏன் அறுவை சிகிச்சை தொடங்கவில்லை ?
- கலைஞர் இறப்பதற்கு முன் சிகிச்சையில் இருந்த காவேரி மருத்துவமனை தான் வேண்டும் என அடம்பிடிப்பது ஏன் ?
- காவேரி மருத்துவர்கள் தான் கைதியின் விருப்ப மருத்துவர் என்றால் கூட அவரால் அரசு மருத்துவமனைக்கு வந்து அறுவை சிகிச்சை அளிக்க முடியாதா ? அதற்கு ஏன் அரசு முயற்சி எடுக்கவில்லை ?
- அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வது அவருக்கு பாதுகாப்பானது இல்லையா ? அப்படி என்றால் பொதுமக்கள் எப்படி அங்கு சிகிச்சை எடுத்துகொள்ள முடியும் ?
என்பன போன்ற பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது.
அதிகாரத்தில் இருந்து கொண்டு அந்த அதிகாரத்தை துஷ் பிரயோகம் செய்து ,அடாவடி அரசியல் நடத்தி ஆயிரக்கணக்கான கோடி பணம் சம்பாதிக்கவும் ,அந்த பணத்தை வைத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கவுமான வித்தைகளிலே கைதேர்ந்தவர் செந்தில் பாலாஜி என்பதால்தான் திமுக அவரை தூக்கிப் பிடிக்கிறது. இப்போதைக்கு திமுகவின் அரசியல் "தாதா "செந்தில் பாலாஜி. அதனால் தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் முதலமைச்சர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அமைச்சரவையும் முதலமைச்சரின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அங்கே முகாமிடும் சூழ்நிலை உருவானது. அமைச்சரவையிலே இடம் பெற்றுள்ள ஜூனியர் அமைச்சர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டு இருந்தால், ஒட்டுமொத்த அமைச்சரவைக்கும் பதைபதைப்பும் பதற்றமும் ஏற்பட்டு அங்கே முகாமிட்டி ருப்பார்களா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.அரசியலில் இது மிகவும் ஆபத்தான விஷயம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரும் காலம் வரும்.
No comments:
Post a Comment