Friday, June 30, 2023

#*Taminadu Governor* #*Dmk Government*

#*Taminadu Governor*
#*Dmk Government*
#*அண்ணாவின் ஆட்டுக்குதாடி என்பது நேரத்தை பொறுத்து மட்டுமே*…
—————————————
1)M. Karunanidhi vs Union Of India on 20 February, 1979. Governor’s
satisfaction paramount in running cabinet system. India on 20 February, 1979- Supreme Court 
(citations: 1979 AIR 898, 1979 SCR (3) 254 /SC-6 Judges 
Author: S M Fazalali
Bench: Chandrachud, Y.V. ((Cj), Bhagwati, P.N., Untwalia, N.L., Fazalali, Syed Murtaza, Pathak, R.S.)

2) 1980 ஆம் ஆண்டு நாடளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றிப்பெற்றவுடன் 1977-ல் தேர்ந்தெடுக்கப்பட்டு நடந்துக்கொண்டிருந்த எம்ஜிஆர் ஆட்சியை இந்திரா காந்தி பிரதமர் ஆன பின், திமுக விருப்படி அன்றைய தமிழக கவர்னர் எம்.எம். இஸ்மாயிலோ,சாதிக் அலி-யோ என நினைவு. உடனே கவர்னர் அறிக்கையை பெற்று திமுக கோரிக்கையை ஏற்று அன்றைய பிரதமர், பிரிவு 356 படி எம்ஜிஆர் கலைத்தார். 

3)1991இல் கவர்னர் பர்னாலா  அறிக்கை முக்கியம் என அன்றைய பிரதமர் சந்திரசேகர் காங்கிரஸ தலைவர், மறைந்த ராஜீவ் காந்தி , ஜெயலலிதா வேண்டுகோளை ஏற்று பர்னாலா அறிக்கை திமுக ஆட்சி எதிராக தர முடியாது என்ற நிலையில் otherwise என கலைஞர் ஆட்சி பிரிவு 356 கீழ் கலைக்கப்பட்டது. அன்றைய நிலையில் கவர்னரின் அறிக்கை முக்கியம் என்ற கவர்னரின் தேவையை, அதிகாரத்தை பாராட்டியது இதே திமுகதானே.

3) திமுக அரசு 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது பர்னாலாவையும்,  1996 இல்ஆட்சிக்கு வந்தப்போது  ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பாத்திமா பீவியையும் தனக்கு வசதிக்காக கவர்னர் ஆக நியமிக்க வேண்டும் என  விரும்பி அன்றைய பிரதமர்களிடம் கேட்டு நியமனம் செய்ய வைத்தார். அப்படி என்றால், ஆளுநர் பதவி மாநில நிர்வாகத்தில் முக்கியம் அன்று திமுக கருதியது தானே?.

4) ஜெயலலிதா ஆட்சியில் நள்ளிரவில் கலைஞர் கைது காலத்தில் ஆளுநர் ராம்மோகன் சந்தித்து முறையிட்டது, இதே திமுக தானே 

5) கவர்னர் ரோசையாவை சந்தித்து திமுக வின் கோரிக்கைகள் வைத்ததும் இதே திமுகதானே.

6) முதல்வர் எம்ஜிஆர் மீது கப்பல் பேர ஊழல் குறித்து மனுவை ராஜ் பவனுக்கு பேரணியாக சென்று திமுக அளித்தது. அப்போது ஆளுநர் மீது நம்பிக்கை வைத்துத்தானே மனு அளித்தது?

7) ஜெயலலிதா ஆட்சி ஊழல்கள் அடங்கிய மனுவை கவர்னர் எம். சென்னா ரெட்டியிடம் திமுக அளித்தது எதனால், அவர் ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்பதால் தானே.

8)கடந்த ஏப்ரல் 13, 2017-ல் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்ட போது அது தொடர்பாக அப்போதைய தமிழக ஆளுநர் பொறுப்பு வகித்த வித்யாசாகர் ராவிடம் இதே மு.க.ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்ட கடிதத்துடன் துரைமுருகன், உள்ளிட்ட திமுகவினர் மும்பை சென்று முறையிட்டனர். அந்த மனுவில், “முதல்வர் மற்றும் அமைச்சர்களை உடனடியாக ராஜினாமா செய்ய ஆளுநர் உத்தரவிட வேண்டும். *அவர்கள் ராஜினாமா செய்யத்தவறும் பட்சத்தில், அப்பதவிகளை நிர்வகிக்கும் உரிமையை இழந்த அவர்கள் அனைவரையும் ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்*” என்று குறிப்பிட்டபோது ஆளுநருக்கு அந்த அதிகாரம் உள்ளது என்பதை திமுக ஏற்றுக்கொண்டுத்தானே மனு அளித்தது? 

9)கவர்னர் பன்வாரிலால் புரோகித் இருந்த போது அமித் ஷா இந்தி திணிப்பு  அறிவிப்பு செய்து விட்டார்  என அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த இன்றைய முதல்வர் ஸ்டாலின் பெரிய போராட்டத்தை அறிவித்தார். அன்று மாலை ஆளுநர் புரோகித் அழைத்து ஸ்டாலின், துரை முருகன் ராஜ்பவன் சென்று திரும்பிய பின் உடனே இந்தி எதிர்ப்பு போராட்டம் காரணம் எதுவும் சொல்லாமல் கை விடப்பட்டதே ஏன்,  அப்படி என்றால் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனில் போராட்டத்தை ஏன் கிடப்பில் போட வேண்டும்?

10) திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்வை திமுகவுக்காக புறக்கணித்தன. ஆனால், என்ன வேடிக்கை என்றால் திமுக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் எல்லாம் அதில் கலந்துக்கொண்டனர். ஆளுநர் உதவி தேவை இல்லை என்கிற நினைப்பைத்தவிர அதில் கலந்த கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

11)முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஆளுநர் நடவடிக்கை வேண்டும் என அன்று எதிர்கட்சி தலைவராக இருந்த போது ஸ்டாலின் கேட்டார்.

அண்ணாவின் ஆட்டுக்கு தாடி என்பது நேரத்தை பொறுத்து மட்டுமே…

இதே போல பல உதாரணங்கள் ஆளுநர் பதவி அதிகாரம் குறித்து உள்ளன. பல மாநில நிகழ்வுகள் உள்ளன.

#ksrpost
#தமிழகஆளுநர்_திமுகஆடசி
#ஸ்டாலின்திமுகஅரசு_கவர்னர்
#TamilnaduGovernor_Minister_Senthil_Balaji_dismissal 
#Governor_Dmkgovernment
#Dmkrule
#Governor_RN_Ravi
#Rajbhvantaminadu

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
30-6-2023

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...