Monday, June 26, 2023

#யாழ்ப்பாணம் #ஈழம் #Jaffna #Eelam

யாழ்ப்பாணம் என்ற பெயரிற்கான சரித்திர ஆவண அடிப்படையிலான பழைய வடிவங்களை கி.பி 1435 தொடக்கம் 18ம் நூற்றாண்டு வரையுள்ள ஆதாரங்களைத் திரட்டி பேராசிரியர் இந்திரபாலா 30 ஆதாரங்களைப் பட்டியலிட்டுள்ளார். 

இதில் 10 ஆதாரங்கள் இராம நாதபுரம் அல்லது இராம நாட்டு சேதுபதிகளின் செப்புப் பட்டயத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. 

சேதுகாலவன் என்ற பெயரும் யாழ்ப்பாணத்து அரசர்களால் பாவிக்கப்பட்டிருக்கிறது. 

யாழ்ப்பாண இராச்சியத்திற்கும் சேதுபதிகளுக்குமுள்ள தொடர்புகள் பற்றி யாராவது ஆராய்ந்தார்களா என்று தெரியவில்லை! 

ஆதாரம்: கா.இந்திரபாலா,  
யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம், 1972.

#யாழ்ப்பாணம் #ஈழம்
#Jaffna #Eelam.


No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...