Wednesday, June 28, 2023

#திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின். அவர்களே, இதில் நியாயம்(fairness) சொல்லுங்கள்

#திமுக  தலைவர்முதல்வர்   ஸ்டாலின். அவர்களே, இதில் நியாயம்(fairness) சொல்லுங்கள்
—————————————————————
1)கடலூர் மக்களவை திமுக எம்.பி.யான டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் முந்திரி வியாபாரி ..கோடிஸ்வரர்..அதிமுக ஆதரவாக இருந்தவர்..பணம் ஒரே காரணத்தால் எம்.பி சீட் வாங்கினார்..திமுகவினருக்கே தெரியாது இவர் யார் என்று…கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி. இவருக்குச் சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் பணியாற்றிவந்த, மேலமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில். கோவிந்தராசு குடும்பத்தினர் கொலை வழக்காக மாற்றம் வேண்டும் என கோரிக்கை விடுத்தநிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதில் முதல் நபராக குற்றம் சாட்டப்பட்டிருந்த ரமேஷ், கடந்த ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அதே ஆண்டு நவம்பர் 19-ம் தேதி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது.




2) திமுக திருநெல்வேலி எம்பி ஞான திரவியம்(ரியல் எஸ்டேட் வியாபாரம்) குற்றவியல் வழக்கு பதிவு ஆகிவிட்டது.

3) தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் குரல் பதிவுகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், இந்த விவகாரம் தி.மு.கவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய,
 "உதயநிதியும், சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார்கள். இப்போது அதனை மறைக்க முடியாமல் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்கள்," என்று நிதியமைச்சர் கூறுவதைப் போல இருந்தது. (அதன் உண்மைத்தன்மை சுயாதீனமான முறையில் உறுதிப்படுத்தப்படவில்லை.)

இதன் மீது எந்த நடவடிக்கள் திமுக எடுக்க வில்லை. இப்படி பல,பலர் திமுகவில்…

முள்ளிவாய்க்கால் ரணம் -டெசோ ஐநா-லண்டன் பயணங்கள் , கலைஞர் நள்ளிரவு கைது (2001 சூன் 30), அண்ணாநகர் ரமேஷ் குடும்பம் தற்கொலை பிரச்சனை,
ஆண்டிபட்டி-சைதை இடைத்தேர்தல்கள், நள்ளிரவில் வேளச்சேரி ஸ்டாலின் வீட்டில் காவல் துறை அத்து மீறிய நடந்து அவரின் கைது, ஜெயல்லிதா ஊழல் வழக்கு கர்நாடகத்துக்கு மாற்ற ஆரம்ப பணிகள், கனிமொழிக்கு உதவியது மற்றும் தூத்துக்குடி தேர்தல் பணிகள் எனது பல செயல்பாடுகள் இருந்த என்னை இடை நீக்கம்… இதுவும் எனக்கு நல்லதான். For me, it is peaceful and tranquility…..

ஆனால்,

டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ், ஞானதிரவியம், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என அவர்களின மீது என்ன கட்சி நடவடிக்கை எடுத்தது? திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே, தங்களின் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.M. K. StalinCMOTamilNadu Kanimozhi Karunanidhi

#முள்ளிவாய்க்கால்_டெசோ 
#திமுக_ஐநா_லண்டன்_பயணங்கள் , #கலைஞர்_நள்ளிரவு_கைது (2001 சூன் 30), 
#அண்ணாநகர்_ரமேஷ்_குடும்பம்_தற்கொலை_பிரச்சனை,
#திமுக_ஆண்டிபட்டி_சைதை_இடைத்தேர்தல், 
#நள்ளிரவில்_வேளச்சேரி_ஸ்டாலின்_கைது
#ஜெயல்லிதா_ஊழல்_வழக்கு, #கனிமொழிக்குஉதவியது_மற்றும்_தூத்துக்குடிதேர்தல்

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
 #கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
28-6-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...