Saturday, June 10, 2023

#பரம்பிக்குளம்ஆழியார்திட்டம் #PAP #நல்லாறு அணை.

#பரம்பிக்குளம்ஆழியார்திட்டம் #PAP
#நல்லாறு அணை. 
—————————————————————
கடந்த 1950 களில கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந் துள்ள சமவெளி பகுதிகள், போதிய  மழை பெறாத மழை மறைவு பிரதேசமாகும். வானம் பார்த்த பூமியாக மானாவாரி பயிரை நம்பி வாழ்ந்த மக் கள் பெரும் இன்னல்களுக்கு உள் ளாகி வந்தனர். 

மேற்கு தொடர்ச்சி மலையில் ஆனைமலை குன்றுகளில் உற்பத்தி யாகி மேற்கு நோக்கி பாய்ந்து கேரளா  மாநிலம் பெரியாறு, சாலக்குடி மற் றும் பாரதபுழா படுகை வழியாக பெரு மளவு தண்ணீர் அரபிக்கடலில் கலந் தது. மேற்குத் தொடர்ச்சி மலை மீது  ஆறு அணைகள் கட்டி சேகரமாகும்  நீரை கிழக்கில் தமிழ்நாட்டை நோக்கி  திருப்பி விட்டால், மானாவாரி நிலத்தை வளமான விவசாய பகுதி யாக மாற்ற முடிவதுடன், 15 லட்சம்  மக்களுக்கு குடிநீரும் கிடைக்கும் என்ற உன்னத நோக்கத்தில் உருவானது தான் பரம்பிக்குளம் ஆழியார் திட்டம். தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர், கேரளத்தில் பொதுவு டைமை சிற்பி இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் ஆகியோர் ஆட்சியில் இருந்த போது, தமிழ்நாட்டில் மேலவை உறுப்பினராக வி.கே.பழனிச்சாமி, மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொதுவுடமை இயக்கத் தலைவர் பி.ராமமூர்த்தி ஆகியோரின் பெரும் முயற்சியால் உன்னத நோக்கத்தில் உருவான திட்டம் உருவானது. அன்றைய கேரளா மற்றும் தமிழ் நாடு ஆட்சியாளர்களின் கூட்டு முயற்சி, தொலை நோக்கு பார்வை, பொறியாளர்க ளின் சேவை காரணமாக உறுதியான  நம்பிக்கை, கடினமான உழைப்பினா லும் இத்திட்டம் கட்டமைக்கப்பட் டது. இதனால் 60 ஆண்டுகள் கடந்தும்  இரு மாநிலங்களும் பல நன்மைகள்  பெற்று வருகின்றன. இத்திட்டம்  இரு மாநிலங்களின் நல்லுறவையும்,  ஒத்துழைப்பையும் எடுத்துக்காட்டும் மாபெரும் முயற்சியாகும்.  இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட் டில் 4 லட்சத்து 30 ஆயிரத்து 730 ஏக்கர்  நிலம் ஒரு போக புஞ்சை சாகுபடிக் கும், கேரளாவில் 20 ஆயிரம் ஏக்கர்  நிலம் நஞ்சை சாகுபடிக்கும் பயன்பட் டுள்ளது. தமிழ்நாட்டுக்கு 185 மெகாவாட் மின்சாரமும், கேரளாவிற்கு 54  மெகாவாட் மின்சாரமும் கிடைக் கிறது.







தண்ணீரின் நெடும் பயணம் 

இதற்காக மலை மேல் 1) ஆனைம லையாறு 2) மேல்நீர் ஆறு, 3) கீழ்நீர்  ஆறு, 4) சோலையார் 5) பரம்பிக்கு ளம் 6) தூனக்கடவு 7) பெருவாரிப் பள்ளம் ஆகிய ஏழு அணைகள் கட்டு வதற்குத் திட்டமிடப்பட்டு, ஆனை மலையாறு தவிர ஆறு அணைகள் கட்டியுள்ளனர்.  மேல்நீராற்றில் இருந்து கிடைக் கும் நீரும், கீழ்நீராற்றிலிருந்து கிடைக் கும் நீரும் சுரங்கங்கள் மூலம்  சோலையாறு வந்தடைந்து, அங்கி ருந்து பரம்பிக்குளம் அடைந்து, தூனக்கடவு, பெருவாரிபள்ளம் வழி யாக சர்க்கார்பதி மின் நிலையத்திலி ருந்து, ஆழியார் தென்பகுதியில் 50  கிலோ மீட்டர் நீளமுள்ள சம மட்ட கால் வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு வந்து சேருகிறது.  இதில் 60 ஆண்டுகளுக்கு பின்பும்  ஆனைமலை ஆறு அணை அமைக் கப்படாமலேயே நிலுவையில் உ ள்ளது. அதேசமயம் ஆழியாறு மேல்  அணையும், திருமூர்த்தி அணையி லிருந்து பாசனம் பெறும் நிலங்களில் இருந்து கிடைக்கப்படும் வடிநீரை தேக்கி மீண்டும் பயன்படுத்த சம வெளியில் உப்பாற்றின் குறுக்கே உப்பார் அணையும் கட்டி முடிக்கப்பட் டுள்ளன. எனினும் திருமூர்த்தி அணையும் நல்லாறு அணையும் நிரம்பினால் ஒரு மண்டல பாசனத்திற்கு தண்ணீர் போதுமானதாக இருக்கும். மேலும் நீர் மின்சார உற்பத்தி திட்டம் மூலம்  680 மெகாவாட் மின்சாரமும் கிடைக் கும் வாய்ப்புள்ளது.  ஆகவே தான் அளவிட்டார்கள், கல் நட்டார்கள், எல்லை வகுத்தார் கள், அடையாளம் வைத்தார்கள். ஆனாலும் அணைத் திட்டம் மட்டும் 60  ஆண்டுகளாக நிறைவேறவே இல்லை.

மறந்து போன வாக்குறுதி

ஆனைமலையாறு அணை - நல் லாறு அணை வேண்டும் என்ற கோரிக்கை ஒவ்வொரு தேர்தலிலும் எதிரொலிக்கும். ஆனைமலை ஆறு  அணை – நல்லாறு அணை கட்டு வோம் என்ற முழக்கம் எல்லா திசைக ளிலும் ஒலிக்கும். தேர்தல் முடிந்து  ஆட்சி அமைந்தவுடன் ஆட்சியாளர்க ளால் மறந்து போகும் வாக்குறுதி யாக உள்ளது. பற்றாக்குறை நீரால் பரிதவிக்கும்  உழவர்கள் இன்று தனக்கான பங்கு எங்கே என சண்டையிடுவதும், சச்சர வுகள் செய்வதும், ஒருவரை ஒருவர்  குற்றம் சொல்வதும், நீதிமன்றங்க ளில் வழக்குகள் தொடுத்து அலைக்க ழிந்து வருகின்றனர்.  நிலையற்ற தீர்ப்புகள், இடைக் கால உத்தரவுகள் பிறப்பிக்கிறது நீதி மன்றங்கள். இதனால் உழவர் மக்கள்  மாறி மாறி அல்லல்படும் நிலை உள் ளது. நீர் நிர்வாகம் கூட நீதிமன்றங் களே செய்யும் சூழல் சில நேரங்க ளில் ஏற்படுகிறது. இது எதார்த்த நிலைக்கு மாறாக அமைகிறது. விவ சாயிகளை பாதிக்கிறது. இதனால் நீதி மன்ற கதவுகளை பலநூறு விவசாயி கள் தட்டிக் கொண்டே உள்ளனர்.

நிரந்தர தீர்வில் விடிவு பிறக்கட்டும்

நிரந்தர தீர்வாக பரம்பிக்குளம் -  ஆழியார் திட்ட நீர் பாசனம் உறுதி பெற, 15 லட்சம் மக்களின் தாகம் தீர்க் கவும், பல கோடி தென்னை மரங் களை பாதுகாக்கவும், திருமூர்த்தி அணைக்கு பருவ காலங்களில் உடனே நீர் கிடைப்பதே சிறந்த வழி யாகும்.  ”நல்லதோர் வீணை செய்து நலம் கெட புழுதியில் எரிவதுண்டோ?” என்றார் பாரதி. அதேபோல் நல்ல தோர் பரம்பிக்குளம் - ஆழியார் திட் டத்தை நாதியின்றி கவனிக்காமல் விடலாமா? கூடாது! நல்லாறு அணை அமையவும் ஆனைமலையாறு அணை அமைய வும் “நம்ம நல்லாறு நடைபயணம்” 2023 ஜுன் 10, 11, 12 தேதிகளில் நடை பெறுகிறது. ஜுன் 10-ல் பல்லடம் அருள்புரத்தில் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்  துவக்கி வைக்க, 3 நாள் நடைபயணம்  ஜுன் 12-ல் உடுமலைப்பேட்டையில் நிறைவு பெறுகிறது. அங்குள்ள தாஜ்  திடலில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொது கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில  தலைவர் பெ.சண்முகம் சிறப்புரை ஆற்றவுள்ளார். உழவர்கள் ஒன்று பட்டு குரல் எழுப்ப, அனைத்து ஜன நாயக சக்திகளை ஒருங்கிணைக்க அழைக்கிறது ”நம்ம நல்லாறு நடைப் பயண இயக்கம்!” பரம்பிக்குளம் - ஆழியார் திட்டம் பாதுகாப்போம், அனைவரும் அணி திரள்வோம் வாருங்கள்!

நல்லாறு அணை அமைந்தால் நம்ம ஊரு வளமாகும்!

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத் தில் இத்தனை அணைகள் கட்டி முடிக்கப் பட்ட பின்பும் ஏன் நல்லாறு அணை கட்ட விவ சாயிகள் கோருகின்றனர்? பரம்பிக்குளம் -  ஆழியார் திட்டப்பாசனத்தில் 90 சதமான நிலம்  திருமூர்த்தி அணையில் இருந்தே பாசனம் பெறுகிறது.

நல்லாறு அணை ஏன் தேவை?

மேல் நீராற்றில் இருந்து 50 கிலோமீட்டர் மேற்கே சென்று, பரம்பிக்குளம் தொகுப்பு  அணைகளை அடைந்து, 50 கிலோமீட்டர் கிழக்கே காண்டூர் கால்வாய் வழியாக, மொத் தம் நூறு கிலோமீட்டர் பயணித்து திருமூர்த்தி  அணைக்கு நீர் வந்து சேர மூன்று நாட்கள் ஆகி றது. அதுவும் வினாடிக்கு ஆயிரம் கன அடி  தண்ணீர்தான் வந்து சேரும்.  இதனால் அணை  நிரம்ப ஒரு மாத காலம் ஆகிறது. திருமூர்த்தி அணையில் இருந்து 127 கி.மீ  நீளமுள்ள பிரதான கால்வாய் 30 கிலோமீட்டர்  நீளமுள்ள உடுமலைப்பேட்டை கால்வாய் மூலம் நீர் வந்து பகிர்மான வாய்க்கால், கிளை  வாய்க்கால்கள், பிரிவு கால்வாய்கள் உட்பட  1336 கிலோ மீட்டர் தூரம் நீர் பயணித்து பாசனத் திற்குச் செல்கிறது.

அதிகமான நிலப்பரப்பும், சுருங்கிய நீர்ப்பாசனமும்

மேற்காண்ட அணைகள் மூலம் 28 டி.எம்.சி.  தண்ணீர் கிடைக்கும். அந்த நீரை வைத்து  1லட்சத்து 86 ஆயிரத்து 700 ஏக்கர்தான் பயிர்  செய்ய இயலும். சுழற்சி முறையில் நீர் பாய்ச்சு வதால் நிலத்தடி நீர் உயரும் என 2லட்சத்து  50ஆயிரத்து 400 ஏக்கர் பாசன வசதி பெறமுடி யும் என அறிவித்தனர். கிடைக்கும் நீரை வைத்து புஞ்சை பயிர் கள் செய்து, அதில் விவசாயமும் நடைபெற்று  வந்தது. கட்டி முடிக்கப்பட்ட அணைகள் மூலம் 28 டி.எம்.சி. கிடைக்கும் என திட்டமிட்டு,  20 டி.எம்.சி. ஆக குறைந்துவிட்டது. ஆனாலும்  தேர்தல்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்கு என அரசியல் ஆக்கப் பட்டு, பாசனப் பரப்பு விரிவாக்கம் செய்யப் பட்டு மொத்தம் 4லட்சத்து 30ஆயிரத்து 730 ஏக் கர் பாசனமாக மாறியது.  1993ஆம் ஆண்டு அதிமுக அரசு ”பரம்பிக் குளம் ஆழியாறு திட்ட நீர் விநியோக சட்டம்  20/1993” கொண்டு வந்தது. ஆனால் பற்றாக் குறை நீரை வைத்துக் கொண்டு பாசனப் பகு தியை சமாளிக்க 94ஆயிரத்து 200 ஏக்கருக்கு  ஒரு மண்டலம் என 4 மண்டலங்களாகப் பிரித்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை  சுழற்சி முறையில் 135 நாட்கள் தண்ணீர், அது வும் ஏழு நாட்கள் விட்டு ஏழு நாட்கள் அமல்ப டுத்தப்பட்டது. இதனால் எந்த பயிரும் முழு  நிறைவாக சாகுபடி செய்யும் அளவுக்கு நீர்  கிடைக்கவில்லை.

ஒருமடை விட்டு ஒருமடை பாசனம்

ஒரு மண்டலத்தில் பாசன காலம் முடிந்தவு டன் அடுத்த பாசனம் இரண்டு ஆண்டுகள் கழித்து வரும் வரை அக்கம் பக்கங்களில் நீர்  பாய்ச்சுவதில்லை. இதனால் நிலத்தடி நீர்  வற்றிப்போய் குடிநீருக்கே கஷ்டம் ஏற்பட்டு,  தென்னந்தோப்புகளும், இதர பயிர்களும் காய்ந்து போகும் நிலை ஏற்பட்டது. இதற்கு தீர்வாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பாசன விவசாயிகள் தமிழ் நாடு அரசிடம் ”ஒரு மடை விட்டு ஒரு மடை  பாசன முறை மூலம் நிலத்தடி நீரை மேம்ப டுத்த வேண்டும்” என கோரிக்கை வைத்த னர். அன்றைய கலைஞர் அரசு உயர்மட்ட குழு  அமைத்து ஆய்வு செய்தது. அதன் பின்  உலகிலேயே ஒரு புதிய பாசனத் திட்டமாக  ஒரு மடை விட்டு ஒரு மடை பாசன முறையை  2000-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. 20 ஆண்டுகளில் ஓரளவு நிலத்தடி நீர் பெரு கும் திட்டமாக மாறி பயனளித்து வருகிறது.  ஆனாலும் உலகில் ஏற்பட்டுள்ள பருவமழை  மாற்றத்தால் போதிய மழையின்மையும், ஒரே  நேரத்தில் அதிக மழை என பெய்வதும், அந்த  நீர் வீணாக போவதும் என, நீர் பற்றாக்குறை  தொடர்ந்து இருந்து கொண்டேதான் உள் ளது. 

மாற்றுப் பாதை சாத்தியம்

ஆகவேதான் மேல் நீராற்றிலிருந்து குழிப் பட்டி மலை கிராமத்திற்கு மேற்கு பகுதியில்  உள்ள நல்லாற்றை நோக்கி 14.40 கிலோ மீட்டர் நீளம் சுரங்கம் அமைத்து நல்லாற்றின்  குறுக்கே அணை கட்டினால் அங்கிருந்து 3.52  கிலோமீட்டர் நீளத்தில் ஒரு வாய்க்கால் வெட் டினால், திருமூர்த்தி அணைக்கு ஆறு மணி  நேரத்தில் தண்ணீர் வந்து சேரும். அதாவது  நூறு கிலோமீட்டர் பயணம் செய்து திரு மூர்த்தி அணை வந்து சேரும் நீரை 20 கிலோ மீட்டர் பயணத்தில் ஆறு மணி நேரத்தில் கொண்டு வந்து சேர்க்க முடியும். கூடுதல் நீரும் கிடைக்கும். அமையயுள்ள நல்லாறு அணையில் 7 1/2  டி.எம்.சி. தண்ணீர் தேக்க முடியும். ஆண்டுதோ றும் மேல்நீராற்றில் சராசரியாக கிடைக்கும் 9  டி.எம்.சி நீரும், மேல் நீராறு அணையில் இருந்து பிப்ரவரி முதல் செப்டம்பர் மாதம்  முடிய கிடைக்கும் தென்மேற்கு பருவமழை  காலத்தில் உபரியாக கிடைக்கும் நீரும்,  மேற்கே செல்லாமல் வடக்கே திருப்பினால், பயனுள்ளதாக மாற்றம் செய்யும் திட்டமே நல்லாறு அணை திட்டம். 

#பரம்பிக்குளம்_ஆழியார்_திட்டம் #PAP
#நல்லாறு_அணை. 
#தமிழக_கேரள_நீர்பாசனசிக்கல்கள்

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...