Monday, June 12, 2023

*முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழக உரிமைகளதிராவிடக் குடும்பத்தின் நிலப்பரப்பில் உள்ளகேரளம், கர்நாடகம், ஆந்திரம் மாநிலங்ளோடு பேசி தீர்க்கட்டும்… இது இவரின் முதற் கடமை ஆகும்*

*முதல்வர்  ஸ்டாலின் அவர்கள் தமிழக உரிமைகளதிராவிடக் குடும்பத்தின் நிலப்பரப்பில் உள்ளகேரளம்,  கர்நாடகம்,  ஆந்திரம் மாநிலங்ளோடு பேசி தீர்க்கட்டும்… 
இது இவரின் முதற் கடமை ஆகும்*
—————————————
பூம்புகார்  திரைக்கதை வசனம் எழுதி
தயாரித்தவர் கலைஞர். அவர் காலத்தில் 
கண்ணகி  கோவிலுக்கு விமோசனம்
கிடைக்கவில்லை. அவர் மகன் முதல்வர் 
ஸ்டாலினின்  நேச  கேரள மாநில  முதல்வர்  பினராயிவிஜனுயுடன்  கலந்து  கோவிலுக்கு 
பாதையும் கோவிலை சீர்திருத்தி கண்ணகி
யை தரிசிக்க பக்தர்களுக்கு எளிமையான வழி முறைகளை வழங்கி கலைஞருக்கு பெருமைசேர்க்கவேண்டும்.கலைஞருக்கு
விழா  எடுக்கும் இந்த ஆண்டில் இதைசெய்தால் அவருக்கு பெருமை.

முதலில் தமிழக எல்லையான பளியன்குடி வழியாக  சாலை   அமைக்கப்பட்டு போக்குவரத்து  மற்றும் சேவைகள் தொடங்கினால் மட்டுமே தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் வரும். இல்லை என்றால் ஒவ்வொரு ஆண்டும் கேரள மாநிலத்தின் உதவியுடன் மட்டுமே வழிபட வேண்டிய சூழ்நிலை தொடரும். இந்த ஆண்டு கோவில்க்கு செல்ல 850 ஜுப் இடுக்கி வனத்துறை  மூலம்  இயக்கப்பட்டது, ஆனாலும் கூட கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தமிழக எல்லையில் தான் கோயவில் உள்ளது என சர்வே கூறுகின்றன,  இதை கேரள அரசும் ஒப்பு கொண்டு உள்ளது. இந்த கோவில் வரலாற்று சின்னம்  என்பதை நினைவில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்தால் மிக நல்லது.

கண்ணகி கோவில் பிரச்சனை மட்டுமல்ல, தமிழக முதல்வர் ஸ்டாலினின் உற்ற சகோதரர்  கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் குமரி மாவட்ட நெய்யாறு அணைப் பிரச்சனை, அடவி நயினார் நீர்ப் பிரச்சனை, செண்பகவள்ளி தடுப்பணை, அழகர் அணை, முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டப்பிரச்சனை, பாண்டியாறு – புண்ணம்புழா சிக்கலும், பம்பாறு, சிறுவாணி என 16 நதீநீர்ப் பிரச்சனைகள் மற்றும் அட்டப்பாடி தமிழர் பிரச்சனை, தமிழக எல்லையில் கேரளாவின் குப்பைகளைக் கொட்டுதல் போன்றவற்றை முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய நெருங்கிய நட்பால் அவருடைய சகோதரர் பினராயி விஜயனிடம் பேசி இவைகளைத் தீர்க்கலாம். தீர்க்கப்படவும் வேண்டும். ஏனெனில் முதல்வர் ஸ்டாலின் கம்யூனிஸ்டுகள் மீது வாஞ்சையோடு கேரளத்தில் நடந்த சி.பிஎம் மற்றும்  சி.பி.ஐ  கட்சி மாநாடுகளில் உணர்வுப்பூர்வமாகக் கலந்து கொண்டு பினராயி விஜயன் உட்பட கம்யூனிஸ்ட் தலைவர்களை ஆரக் கட்டித் தழுவிய மகிழ்ச்சியான தருணங்கள் எல்லாம் செய்தித்தாள்களில் செய்தியாக வந்ததெல்லாம் இன்றும் நினைவில் உள்ளன. இந்தச் சூழ்நிலையில் இந்தப் பிரச்சனைகளை எல்லாம் ஸ்டாலின் மனது வைத்தால் நொடிப் பொழுதில் தீர்க்கலாம். விடியல் திராவிட மாடல் ஆட்சியில் இந்த உரிமைகள் தமிழகம் மீட்க வேண்டும். ஸ்டாலின் நிச்சயம் செய்வார், செய்யவும் வேண்டும்.

அதுபோலவே,  கர்நாடக   சட்டமன்ற
தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று சித்தராமையா முதலமைச்சராகப் பொறுப்பேற்ற  விழாவிற்கு அகமகிழ்ச்சி
யோடு  முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டார். இந்த நிலையில் தன்னுடைய  அருமைச் சகோதரர் ராகுல், சித்தராமையா மூலமாக காவேரிப் பிரச்சனை, மேகேதாட், தென்பெண்ணை ஆற்றுச் சிக்கல், ஒக்கேனக்கல், கர்நாடகத்தில் மழைக் காலத்தில் வெள்ளமாகச் சேர்ந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டக் குளங்களுக்கு வரும் நீர் வரத்தை தடுத்தது குறித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனது வைத்தால் இந்தத் தமிழக உரிமைகளுக்கு தீர்வு காணலாம். ஏனெனில் காங்கிரஸ் தோழமை மட்டுமல்ல ஸ்டாலினுடைய  சகோதர பாசத்தையும் கொண்டது.  

இன்னும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சியோடு தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து  கொண்டு, அங்கு  தெலுங்கில் அந்தரிகினி  நமஸ்காராலு  என்று  பேசி தன்னுடையபாசத்தைவெளிப்படுத்திய
தெல்லாம் உண்டு. இதன் வெளிப்பாடாக ஜெகன் மோகனிடம் பாலாறு பிரச்சனை அதோடு  கணேசபுரத்தில்  இருந்து தடுப்பணைகள் கட்டுவதை நிறுத்தவும், வேலூர் மாவட்டத்திற்கு பயன்படும் பொன்னி ஆறு நீர்வரத்தும்,  பழவேற்காடு  ஏரிப் பிரச்சனையும் தமிழகத்தின் நீண்ட கால பிரச்சனைகளை தன்னுடைய சகா ஜெகன் மோகன் ரெட்டியிடம் முதல்வர் ஸ்டாலின் தாராளமாகப் பேசலாம்.   தமிழக பிரச்சனைகளையும் தீர்க்கலாம்

அண்டை மாநில முதல்வர்கள் மூவருமே ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை வைத்தால் நிச்சயமாக தீர்க்கக் கூடிய அளவில் சூழ்நிலைகள்  இருக்கும்  பொழுது தாராளமாக   நல்ல பயன்யுள்ள   முடிவுக்குக் கொண்டுவரலாம்.  திராவிடக் குடும்பத்தின் நிலப்பரப்பு மூன்று  மாநில முதல்வர்களுடன் இவ்வளவு சகோதர நேயம் கொண்ட ஸ்டாலின் அவர்கள் இதை இறுதிப்படுத்த மனது வைக்க வேண்டும்.

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிடக் குடும்பத்தின் நிலப்பரப்பு தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி நிற்கிறது என்றும், 2024 தேர்தலில் வெற்றிபெற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல் பட வேண்டும் என நெகிழ்வாகவும் ஸடாலின் கறினார். 
எனவே, ஸ்டாலின் தமிழக உரிமைகள
திராவிடக் குடும்பத்தின் நிலப்பரப்பில் உள்ள
கேரளம்,  கர்நாடகம்,  ஆந்திரம் மாநிலங்ளோடு பேசி தீர்க்கட்டும்…

#கேரளா_மாநில_தமிழகபிரச்சனைகள்
#கண்ணகி_கோவில்_பிரச்சனை
#நெய்யாறு_அணைப்பிரச்சனை, 
#அடவிநயினார்_நீர்ப்பிரச்சனை, #செண்பகவள்ளி_தடுப்பணை, 
#அழகர்_அணை, #முல்லைப்பெரியாறு, #பரம்பிக்குளம்_ஆழியாறு_திட்டப்பிரச்சனை_PAP #பாண்டியாறு_புண்ணம்புழா_சிக்கலும், #பம்பாறு, #சிறுவாணி 
#அட்டப்பாடி #கேரளா_குப்பைகளை_தமிழகெல்லையில்_கொட்டல்

#கார்நாடக_தமிழக_சிக்கல்கள
#காவேரிப்பிரச்சனை, #மேகேதாட், #தென்பெண்ணை_ஆற்றுச்சிக்கல், #ஒக்கேனக்கல், #கர்நாடகத்தில்மழைக்காலத்தில்_வெள்ளமாகச்_தருமபுரி_கிருஷ்ணகிரி_மாவட்டக்குளங்களுக்கு_வரும்நீர்வரத்து

#தமிழக_ஆந்திர_பிரச்சனைகள்
#பாலாறு_பிரச்சனை   #கணேசபுரத்தில்_தடுப்பணைகள் #பொன்னி_ஆறு,  #பழவேற்காடு_ஏரி

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
K.S.Radha Krishnan 
#கேஎஸ்ஆர்_போஸ்ட்
#KSR_Post
12-6-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...