#அவளுடே_ராவுகள் (1978 )வேடிக்கையும் உற்சாகமும் நிறைந்த இரவுகள்! புனிதமான வேடிக்கை!! கனவுகளை நனவாக்கும் இரவுகள்!! என்று மலையாள போஸ்டர் வாசகங்கள் அலங்கரித்தன .
எனக்கு நினைவு தெரிந்து ஆபாச படம் என முத்திரை குத்தப்பட்டு வெளிவந்த மலையாள படம் தான் அவளுடே ராவுகள். மலையாள திரையுலகில் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற முதல் படம் என்று பெருமை பெற்ற படம் இது .சிறு சிறு வேடங்கள் க்ரூப் டான்ஸர் என ஆடிக்கொண்டிருந்த .சீமாவை மலையாள சினிமாவுக்கு முழு கதாநாயகியாக அறிமுகப்படுத்தியது. இந்த படத்தின் தாக்கம் அப்போது திரை ரசிகர்களிடம் அதிகம் ஏற்படுத்தி இருந்தது .தமிழில் " அவளின் இரவுகள் ' என பெயர் வச்சி டப்பிங் காது குத்தப்பட்டது . இதன் பிறகுதான் பட விநியோகஸ்தர்களுக்கு மலையாள படங்களுக்கு கவர்ச்சியாக தலைப்பு கொடுத்து ஓட்டலாம் என்று உற்சாக பல்ப்' எரிந்தது .இவ்வகை மலையாள படங்களை வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கும் ரசிகன் பார்வை இந்த படத்தில் இருந்து மாறியது .
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது . புதிய வெளியீடா? மறு வெளியீடா என்று தெரியாது . ஆனால் இந்த படம் மண்ணடி பிராட்வே தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது . அதற்க்கு எதிரில் அந்த ஏரியாவின் பிரபல சென்ட் கேப்ரியல் பள்ளி இருந்தது . சீமா சில்லவுட்டில் படுத்து கொண்டு இருப்பது போன்ற பெரிய விளம்பர போஸ்டர் வைக்கப்பட்டிருந்தது .அந்த ஸ்கூல் கிரௌண்டில் இருந்து பார்த்தால் சீமா படுத்து கொண்டிருப்பது தெரியும் .ஆனால் அங்கே ஸ்கூல் இருப்பது தெரியாமல் சீமாவும் சிருங்காரமாக இருட்டில் படுத்து கொண்டு இருப்பார். இதற்கு பிறகு தான் இந்த பள்ளியின் காம்பவுண்ட் சுவர் எடுத்து உயரமாக கட்டப்பட்டது .
பிராட்வே தியேட்டர் பக்கத்தில் அதன் போட்டி தியேட்டர் பிரபாத் இருந்தது . இவர்களுக்குள் எப்போதும் பட வெளியீட்டில் சுவாரசியமான போட்டி இருந்துகொண்டே இருக்கும் . உதாரணமாக ஒருத்தர் நீயா படம் வெளியிட்டால் அடுத்த தியேட்டர் நாகின் ஹிந்தி படத்தை வாங்கி வெளியிடும். கண்ணீர் விட்டு கதறும் படத்தை போட்டால் அந்த முகாம் குமுறி குமுறி அழுகும் படத்தை போடுவார்கள் ..பாட்டும் பரதமும் " படம் ஒரு தியேட்டர் வெளியிட்டால் அந்த தியேட்டர் மன்னாதி மன்னன் படத்தை வாங்கி வெளியிடும் . இந்த படத்தில் என்ன போட்டி என்கிறீர்களா ..அந்த படத்தில் சிவாஜி கணேசன் பரதம் ஆடிக்கொண்டே யானை வரைவார் . இந்த படத்தில் எம் ஜி ஆர் நாட்டியம் ஆடிக்கொண்டே சிங்கம் வரைவார் . எப்பெடியெல்லாம் யோசிக்கிறாய்ங்க !!
இந்த படம் ஓடிய திரையரங்கில் நுழைய அக்கால இளைஞர்கள் பகீரத பிரயத்தனம் செய்தனர் .ஒன்று மின்னல் வேகத்தில் நுழைந்துவிட வேண்டும் . இல்லை ஊர்ந்தாவது செல்ல வேண்டும் . அல்லது படம் பார்க்க முதல் நாளே திரையரங்கிலேயே பதுங்கி இருக்க வேண்டும் . அவ்வளவு வெட்கம் . என்ன செய்வது அவனும் ஒரு ஆண் தானே . இதுதான் ஆண் பாவம் ! நான் காம்பிளான் சாப்பிடாமலே பெரியவன் ஆனபிறகு எப்போதோ VHS கேசட்டில் பார்த்த நினைவு .
இந்த வகையில் அவளுடே ராவுகள் பிராட்வே தியேட்டரில் ஓடும்போது அவள் ஒரு பச்சைக்குழந்தை " படத்தை பிரபாத்தில் வெளியிட்டார்கள் . அந்த படத்தில் விஜயகுமார் - பவானி காதல் காட்சிகள் படு விரசமாக இருக்கும் . இதன் இயக்குனர் நம்ம எஸ் ஏ சந்திரசேகர் தான் . இவருக்கு இயக்குனராக இதுதான் முதல் படம் . இந்த படத்திற்கு அவளின் ராவுகள் படத்திற்கு Ticket கிடைக்காக ஒரு அண்ணன் சோகத்தில் என்னை அழைத்து கொண்டு போன படம்தான் அவள் ஒரு பச்சைக்குழந்தை . இந்த படத்தின் ஒரு பாடல் வீடியோ பிரதி கூட யூடியூபில் இல்லை . வெட்கம் !
சரி ..படத்திற்கு வருவோம் . எல்லா காலத்திலும் மிகவும் போல்டான' திரைப்படங்களில் ஒன்றாக இன்றும் கருதப்படுகிறது. நடிகை சீமா இந்த படத்தில் நடித்த பிறகு அதன் இயக்குனர் ஐ வி சசியுடன் மேலும் 30 படங்களில் இணைந்தார். பின்னர் வாழ்க்கையிலும் இணைந்தவர் இயக்குனரின் மரணம் வரை அவருடன் பயணித்து வந்தார் சீமா .
கதைப்படி ஒரு இளம்பெண் ராஜி என்ற டீன் ஏஜ் பாலியல் தொழிலாளியைப் பற்றிய திரைப்படம், பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு தனது சிறிய சகோதரனை வளர்ப்பதற்காக தனிமையில் போராடும் .ராஜி பணம் சம்பாதிப்பதற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்.
இவளுடைய வாழ்க்கையில் இவள் சந்திக்கும் மூன்று நபர்கள் சந்திரன் , ஜெயன் மற்றும் பாபு ஆகியோருடன் பிணைத்து நீண்டதுதான் அவளுட ராவுகள் . சந்திரனாக MG சோமன், ஜெயனாக சுகுமாரன் மற்றும் பாபுவாக நடிக்கும் ரவிக்குமார் நடித்திருப்பார்கள் .
கதைக்களம் பாலியல் தொழிலாளியைப் பற்றி என்பதால் ஆங்காங்கே கவர்ச்சி காட்சிகள் தெளிக்க பட்டு இருந்தாலும் அது அடைமழையாக கருதப்பட்ட அந்த காலம் ...அது வசந்த் அன் கோ காலம் . என்ன செய்ய ?
இப்பொது மலையாளம் படம் பார்த்ததை பெருமையாக சொல்வது" ட்ரெண்ட் போல மலையாள படத்தை பார்த்தேன் என்று மூச்சு கூட விடக்கூடாது" என்ற ட்ரெண்ட்
No comments:
Post a Comment