Wednesday, August 14, 2024

 #கதைசொல்லி_38வதுஇதழ் 

—————————————

கதை சொல்லி இதழின் படைப்பாளர்களுக்கும் வாசகர்களுக்கும் அன்பு வாழ்த்துகள்.

இந்த ஜூலை மாதம் வந்துள்ள கதை சொல்லி 37 வது இதழாக  மலர்ந்திருக்கிறது! கதை சொல்லியின்

முதல் 10 இதழ்களைக் கி ரா அவர்கள் மற்றும் பேரா. பஞ்சாங்கம், கழனியூரான் மிகச் சிறப்பாக  நடத்தினார்! 

அதன் பிறகு என் பொறுப்பில் 27 இதழ்கள் இதுவரை வந்துள்ளன!! ஆக மொத்தம் கடந்த ஆண்டுகளில் 37 இதழ்கள்.

இந்த இதழில் இடம் பெற்ற படைப்பாளிகள் அனைவருக்கும் இதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

38 வது இதழை வரும் தைப்பொங்கல் நாளில் வெளியிடலாம் என்று ஆசிரியர் குழுவில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.. 

குறிப்பாகச் சிறுகதைகள் நாட்டார் மண்மம் சுமந்த வாழ்வியல் கதைகள்

மற்றும் பலவான வாய்மொழி வழக்காறுகள் அதிகம் இடம் பெற வேண்டும் என்பதில் கதை சொல்லி ஆர்வமாய் இருக்கிறது.

தனித்திறனும் எளிமையான வாழ்வியல் அவதானங்களும்  மிகுந்த கிராமப்புற மக்களின் உண்மைக் கதைகள் கவிதைகள் அவை சார்ந்த கட்டுரைகள் வேண்டப்படுகிறது. 

நவீனம் மற்றும் பின் நவீனம்  சார்ந்த தத்துவார்த்தப் பார்வையின் நடைமுறைகள் அவை சார்ந்த படைப்புகளும் மொழிபெயர்ப்புகளும்  கதை சொல்லிக் கான புதிய நோக்கில் வரவேற்கப்படுகிறது. புதிய இளம் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை  அனுப்பலாம்..

சென்ற 37வது கதை சொல்லி இதழ் இணையதளத்தில் வாசிக்க கிடைக்கிறது. நூலாகப் பெற விரும்புபவர்கள்.

புத்தகா டிஜிட்டல் மீடியா

 +91 96865 09000 திரு ராஜேஷ் 

அவர்களை தொடர்பு  கொள்ள வேண்டுகிறேன்

அடுத்த கதை சொல்லி 38 வது இதழுக்கான படைப்புகளை மனமுவந்து எழுத்தாளர்கள் கதை சொல்லிகள் கவிஞர்கள் யாவரும் 

 அனுப்பித்தருமாறு இதன் மூலம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

 “கதை சொல்லி” வாசிக்க

kathaisolli.in

படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி 

rkruruji@gmail.com

yavanikaramasamy@gmail.com

#கதைசொல்லி

#kathaisoll

#கிரா #கிராஜநாராயணன்

#kira

கே. எஸ். இராதா கிருஷ்ணன்

#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

5-8-2024

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...