Wednesday, August 14, 2024

இது The Hindu திருRamakrishnan Thyagarajan பதிவு…. Share செய்ய இயலவில்லை

 இது The Hindu திருRamakrishnan Thyagarajan பதிவு…. Share செய்ய இயலவில்லை


•••

ராகுல் காந்தியின் பட்ஜெட் மீதான பேச்சில், "ஹல்வா படத்தில்" பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியிலினத்தினர் மற்றும் பழங்குடியினர் போன்ற பிரிவுகளில் யாரும்  ஏன் இல்லை என்று கேட்டிருக்கிறார்! எனக்கு மிகவும் விந்தையாக இருக்கிறது! 

பட்ஜெட் தயாரிக்கின்ற அணியில் அரசிற்கு நம்பிக்கையான, பொருளாதாரக் கல்வி பிண்ணனியை கொண்ட தகுதிகளை உடையவர்கள் இருப்பதுதான் பாரம்பரியம். அதில் இடஓதுக்கிடு என்பது  புதிய, விந்தையான கருத்து!   இதை எந்த பிரதமராவது மைய  நிதி மந்திரியாவது பின்பற்றினார்களா? இம்மாதிரியான கருத்தை 

ராகுல் மன்மோகன் சிங்-யிடம் விவாதித்தாரா? சிங்  பதினைந்து பட்ஜெட்களை தயாரிப்பதில் - 1991-96 மற்றும் 2004-2014 - முக்கிய பங்கை ஆற்றியவர்.   ராகுலின் நேரடி கவனிப்பில் இருக்கும் நேரடி பணியில் இருப்பவர்கள் இட ஓதுக்கீட்டின் மீது தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்களா?  

ராகுலின் பாட்டி இந்திரா காந்தி 16 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அதுவும் 1966-லிருந்து 1977-வரை அவருடைய முதன்மை தனி செயலாளர்கள் அனைவரும் காஷ்மீர் பண்டிட்-காரர்கள்.  அது மட்டுமின்றி, மிக முக்கிய அரசு பதவிகளிலும் காஷ்மீர் பண்டிட் பிரிவினர் இருந்தனர். அப்பொழுது யாரும் இந்திரா காந்தியை தனது ஜாதியை, அதுவும் அவர் சார்ந்திருந்த பிராமண உட்பிரிவினரையே மிக முக்கியப் பதவிகளில் வைத்திருக்கிறீர்கள் என்று விமர்சிக்கவில்லை. ஏனெனில், பெரும்பாலோனோர்  உயர்கல்வியை பெற்றவர்கள்; பிரதமரின் நம்பிக்கையை பெற்றவர்கள் மேலும் நாட்டின் நலனைப் பற்றி சிந்திப்பவர்கள் என்று அனைவருக்கும்  தெரியும்.

எந்த அரசியல் தலைவரும் யார் மீது  தனிப்பட்ட ரீதியில் நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்களைத்தான் தங்களுடன் பணி புரிய வைத்திருந்தார்கள். வைத்திருப்பார்கள். வைத்திருக்கிறார்கள். இதில் எந்த தலைவரும் விதி விலக்கல்ல! 

 பட்ஜெட்டை விமர்சிப்பதற்கு 1008 காரணங்கள் உள்ளன.  அவற்றை மட்டும் எடுத்து பேசியிருந்தாலும் சிறப்பாகியிருந்திருக்கும்!

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்