Wednesday, September 4, 2024

“என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் கொண்டு

 “என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் கொண்டு என்னுடைய தொழிலை வரையறுக்க விரும்பவில்லை. நான் சமூக வலைதளங்களில் இல்லை. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி நான் அதிகம் பகிர்ந்து கொண்டதில்லை.


ஆனால், நான் ஏன் என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்வதில்லை என கேள்வி எழுப்புகிறார்கள். அதனாலேயே நான் விவாகரத்து பெற்று தனிமையில் இருக்கிறேன் என நினைக்கிறார்கள். இருந்துவிட்டு போகட்டும். அவர்கள் நினைப்பது தவறு என்று நான் ஏன் அவர்களுக்கு நிரூபிக்க வேண்டும். அதற்காக நான் ஒவ்வொரு முறையும் என்னுடைய கணவரிடம் சென்று வாருங்கள், நாம் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து கேள்வி எழுப்புபவர்களுக்கு காட்டலாம் என சொல்லிக் கொண்டிருக்க முடியாது” 


-நடிகை பாவனா

நன்றி: இந்து தமிழ் திசை



No comments:

Post a Comment

புத்தாண்டு2025 #ஆர்நல்லகண்ணு100 சற்று முன் அவருடன் சந்திப்பு

#புத்தாண்டு2025 #ஆர்நல்லகண்ணு100  சற்று முன் அவருடன் சந்திப்பு ———————————————————- புத்தாண்டு 2025 உதயத்தின் சில மணித்துளிகள் முன்  ஆர்நல்ல...