#இனிதிமுகவால்_அரசியல்வியாபாரிகளைமட்டுமேஉருவாக்கமுடியும்
——————————————————— பாரதிய ஜனதாவின் ‘’தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’’ தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் நேற்று அண்ணன் துரை மதிவாணன் அவர்களைச் சந்தித்தேன். அவருக்கு இப்போது வயது 97. அன்றைய திருச்சி புதுக்கோட்டை ஒருங்கிணைந்த மாவட்டத்தில் திமுக மாவட்ட செயலாளராக அன்பில் தர்மலிங்கத்தை வெற்றி பெறச் செய்தவர். அண்ணாவிற்கும் சம்பத்திற்கும் மதியழகனுக்கும் கலைஞருக்கும் திமுக ஆரம்பத்தில் அதிகம் நெருக்கமாக இருந்தவர். அதுமட்டுமல்லாமல் திருச்சிச் சிறையில் 1950களில் கலைஞரோடு இருந்தவர். இஙரால் உருவாக்கபட்டவர்தான் அன்றைய அமைச்சர் மறைந்த சுப்பையா. கலைஞர் முதல்வரான பிறகு புதுக்கோட்டை வந்து ரோஸ்வுட் விருந்தினர் இல்லத்தில் தங்கி இருந்த நிலையில் அவரைப் பார்க்க வருமாறு அழைத்தபோதும் அவரைச் சந்திக்கச் செல்லாதவர். அந்த அளவிற்கு சம்பத் மீது பற்று கொண்டவர். அண்ணன் நெடுமாறனால் எனக்கு அறிமுகம்!. இன்று அவரைச் சந்தித்து பல விஷயங்களைப் பேசினேன். அந்தச் சந்திப்பை ஒரு வீடியோப் பதிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் போட இருக்கிறேன். அவரைச் சந்தித்தது ஒரு மகிழ்ச்சி அளித்த நாள்.. இன்றைக்கு அன்றைய திமுக மூத்த அரசியல் தலைவர்களில் மிக முக்கியமானவர் ஆனால் அவரை வெளியே யாருக்கும் தெரியாது. அண்ணாவுக்கும் கலைஞருக்கும் சம்பத்திற்கும் மதியழகனுக்கும் ஆசை தம்பிக்கும் நாவலருக்கும் நட்பாகவும் செயல்த் தலைவராகவும் இருந்தவர். இன்றைக்கு திமுகவில் பலர் இருக்கலாம் செந்தில் பாலாஜி எ.வ. வேலு என்றுஇடையில் வந்த பலரும் வாரிசுகள குப்பை போடும் இடமாகதிமுக இருக்கிறது . ஆனால் அண்ணா காலத்துத் திமுக என்ன என….இவர்கள் எல்லாம் யார் என்றும் தெரியாது! திமுக இப்படியெல்லாம் ஆகும் என்று அன்று அவர்கள்யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். புதுக்கோட்டை மாவட்டம் தோறும் வீடு வீடாக தெருத்தெருவாக சைக்கிளில் சென்று பிரச்சாரம் செய்தவர் தான் அண்ணன் துரை மதிவாணன். அப்படியான தியாகத் தலைவர்களை இனிமேல் திமுகவால் உருவாக்க இயலாது. இன்றைய நிலையில், இனி திமுகவால் அரசியல் வியாபாரிகளை மட்டுமே உருவாக்க முடியும். #திமுக #அண்ணா #dmk #anna #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment