Saturday, November 21, 2015

தில்லானா மோகனாம்பாள்


தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தை இயக்கும்பொழுது நடந்த நிகழ்வுகள் குறித்தான காணொளிக்காட்சி. ரசிக்கக்கூடிய அளவில் உள்ளன.  அந்த காணொளிக்காட்சி.



தில்லானா மோகனாம்பாள் 1968 ஆம் ஆண்டு வெளிவந்தது.ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, தங்கவேலு, டி. எஸ். பாலையா, சுந்தரிபாய், நாகேஷ், மா. நா. நம்பியார், மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர். புகழ்பெற்ற தமிழ் வார இதழான ஆனந்த விகடனில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய கதையை ஏ. பி. நாகராசன் திரைப்படமாக இயக்கினார்.

நாதஸ்வரம் வாசிப்பதில் மிகவும் புகழ்பெற்றவரான சண்முக சுந்தரம் (சிவாஜி கணேசன்) எதையும் நேர்பட பேசக்கூடியவர். பரதநாட்டியம் ஆடுவதில் மிகவும் திறமைசாலியான மோகனாம்பாள் (பத்மினி) இருவரும் தங்களது முதல் சந்திப்பிலேயே ஒருவரின் மேல் ஒருவர் காதல் காதலில் விழுகிறார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் இருவரும் சண்டையிட்டுப் பிரிகிறார்கள். அவர்கள் மீண்டும் எவ்வாறு இணைகிறார்கள் என்பதே இத்திரைப்படத்தின் மீதக் கதையாகும்.

சிவாஜி கணேசன் 'சிக்கல்' சண்முகசுந்தரம்
பத்மினி மோகனாம்பாள்
டி. எஸ். பாலையா 'கலியுக நந்தி' முத்துருக்கு
கே. ஏ. தங்கவேலு நட்டுவனார், முத்துக்குமார சுவாமி
மனோரமா கருப்பாயி / 'ஜில் ஜில்' ரமாமணி
நாகேஷ் 'சவடால்' வைத்தி
மா. நா. நம்பியார் 'மதன்பூர்' மகாராஜா
கே. பாலாஜி மைனர் சிங்கபுரம், செல்லத்துரை
சித்தூர் வி. நாகையா சண்முகசுந்தரத்தின் நாதஸ்வர ஆசிரியர்
ஏ. வி. எம். ராஜன் தங்கரத்தினம், சண்முக சுந்தரம் குழுவில் நாதஸ்வரம் வாசிப்பவர்
கே. சாரங்கபாணி 'கோடை இடி' சக்திவேல், சண்முக சுந்தரம் குழுவில் தவில் வாசிப்பவர்
ஏ. கருணாநிதி சண்முக சுந்தரம் குழுவில் மிருதங்கம் வாசிப்பவர்.

1969 - சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது - குடியரசுத் தலைவரின் வெள்ளி பதக்கம்
தமிழக அரசின் விருதுகள்
1970 - சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது - இரண்டாவது இடம்
1970 - சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் திரைப்பட விருது - நடிகை பத்மினி.
1970 - சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் திரைப்பட விருது - மனோரமா ஆகிய விருதுகளும் கிடைத்தது.


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-11-2015.

#தில்லானாமோகனாம்பாள் #KsRadhakrishnan #KSR_Posts 

No comments:

Post a Comment

When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*

*When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*. But always remember so are You. Belive the stren...