இலங்கையில் காணாமல்போனவர்களைக் குறித்து விசாரிக்கச் சென்ற ஐ.நா குழு பத்துநாட்கள் இலங்கையில் பயணம் செய்து பல தடயங்களையும், நடந்தேறிய கொடுமைகளைக் குறித்த விபரங்களையும் அறிந்துள்ளது.
2009லிருந்து தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்ற ஆதாரங்கள் இந்தக்குழுவினரிடம் கிடைத்துள்ளது. திரிகோணமலையில் சித்திரவதைக்கூடம் அமைக்கப்பட்டி, தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு சாகடிக்கப்பட்டதாகவும் இக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அக்கூடத்தின் சுவர்களில் இரத்தக்கறைகளும், கைரேகைகள் மூலம் ஈழத்தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு சாகடிக்கப்பட்டிருப்பார்கள் என்ற தடயங்கள் கிடைத்துள்ளன. இதுபோல பல இடங்களில் சித்திரவதை முகாம்கள் அமைத்து இலங்கையில் உள்ள தமிழர்கள் வதை செய்யப்பட்டிருப்பார்கள் என நம்பப்பட்டுகிறது.
கனடாவின் பெர்னார்டு துஹைம் மற்றும் அர்ஜென்டைனா நாட்டின் ஏரியல் துருக்கி, தென்கொரியாவின் தவ்-உவ்-பெய்க் ஆகியோர் அடங்கிய இந்த மூவர்குழு இதுகுறித்து மேலும் முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று கூறி உள்ளனர்.
இந்த மூவர் குழுவினர் அறிந்தவகையில் 20ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் காணாமல் போயிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையுடன் ஒத்துழைப்புக்கள் குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இதற்கான வலியுறுத்தலை விடுத்துள்ளது. இந்த அமைப்பு தென்னாபிரிக்காவின் மனித உரிமை நிதியத்துடன் தொடர்புகளை கொண்டுள்ளது. இந்த அமைப்பின் மாநாடு கடந்த 6-7 தேதிகளில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு அடியேன் அழைக்கப்பட்டேன்.
ஐநா மூவர் குழு இலங்கையில் சர்வதேச அரசாங்கங்கள், இலங்கை கடற்படையுடனான உறவு குறித்து மீளாய்வு செய்யவேண்டும் என்று குறித்த அமைப்பு கோரியுள்ளது.
20ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் காணாமல் போயிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அதற்கும் மேலான எண்ணிக்கையில் தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கணவனை இழந்த விதவைகள், தந்தையை இழந்த பிள்ளைகள் ஆயிரக்கணக்கில் ஈழத்தில் பரிதவிக்கின்றனர்.
முள்ளிவாய்கால் கொடூரத்தின் போது சரணடைந்தவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நண்பர் பேபிசுப்பிரமணியம், பாலகுமாரன் போன்றோர்கள் தென் இலங்கையில் பாதாள இருட்டறையில் கைதிகளாக இருப்பதாகச் செவி வழிச்செய்திகள்.
2009யுத்தத்தின் இறுதியில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் காரணங்களால் தான் சர்வதேச சுதந்திரமான நம்பகமான விசாரணை நடத்தப்படவேண்டுமென்று உலக சமுதாயம் வலியுறுத்தி வருகிறது. ஐநா குழுவும் திரிகோணமலை சித்திரவதைக்கூடத்தையும், அங்கு நடந்தேறிய கொடுமைகளையும் கண்டறிந்துள்ளனர்.
இதன்பிறகாவது, ஈழத்தமிழருக்கு நியாயங்கள் கிடைக்கவேண்டாமா?
ஐ.நா அமைத்த மூவர் குழுவின் தெரிவித்த கருத்துகளின் ஆங்கில சாரம்....
(Washington, DC; November 20, 2015) The UN Working Group on Enforced or Involuntary Disappearances (UN WGEID) confirmed Wednesday what Tamils in Sri Lanka have known for many years: the Sri Lankan state runs secret detention camps in which it holds and tortures Tamil detainees.
The UN WGEID’s announcement that it had discovered a “secret underground detention cum torture center” during its recent visit corroborates reports by Tamil victims and human rights groups that the Sri Lankan authorities are operating several secret camps to torture Tamils.
Since the new government of Sri Lanka has emphasized its willingness to positively engage with the international community on accountability for violations of human rights law and humanitarian law, the international community must press the government to take immediate and decisive action on these secret detention and torture camps.
First, the government must disclose the locations of all detention centers being operated by its security forces and affiliated paramilitaries, publish the names of all those who are or have been held in these camps, and account for the present whereabouts of these individuals.
Second, the government must end its use of torture and prosecute all military, paramilitary, and police personnel responsible for operating and perpetrating abuses in these camps. To fully put its pledges into practice, the government must prosecute leaders of the camps, under the internationally accepted doctrine of command responsibility, and other personnel involved in their operation. It is impossible that the upper and highest echelons of the Sri Lankan military and government were unaware of the existence of these camps. Therefore, it is imperative that they are held accountable for their involvement in the commission of grave human rights violations in the detention centers.
Third, with a view to future prosecutions of the military personnel involved, the government must immediately provide witness protection to the victims of torture in the camps. It is of extreme concern that Tamils who spoke with the UN group are already being subjected to threats and intimidation.
Despite claims by President Sirisena and his government of making radical changes from the previous government of President Mahinda Rajapaksa, the UN WGEID’s findings demonstrate that there are significant continuities between these regimes. The new government cannot continue the policies and practices of its predecessor and expect the Tamil people to take seriously its assurances about implementing an internationally credible accountability mechanism on wartime and post-war atrocities and abuses, following the findings of the UN (OISL) investigation. As such, the implications of the UN WGEID’s discovery of secret torture camps are wide-ranging and profound.
The need for decisive action on secret detention and torture camps is all the more pressing amid the government’s continued occupation of the Northeastern Tamil region with a vast military presence, which enables such abuses to continue. Demilitarization is a long-standing demand by the public in this region and also one that has long been refused by the Sri Lankan authorities. This cannot continue.
Sri Lanka has asked for and, despite the deep scepticism of victims and witnesses of abuses, received time and space by the international community to address questions of impunity, accountability , and rights protections. The UN WGEID’s discovery demonstrates that victims’ doubts are well founded. Due to the Sirisena government's failures to act on long-standing abuses, the international community cannot continue to heed its requests for second chances. Instead, the international community must rethink and recalibrate its present engagement with the government so as to compel its compliance. If the government is serious about reforms, it would act swiftly on disclosing the existence of further secret detention camps and initiate criminal proceedings against perpetrators at all levels.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-11-2015.
#UNConfirmTrincomaleeTortureCamp #KsRadhakrishnan #KSR_Posts
No comments:
Post a Comment