இன்றைக்கு சுயராஜ்யாவில் திரு. என்.வி.சுப்பிரமணியம் அவர்கள் எழுதிய “Smaller States” ஆங்கிலப் பத்தியைப் படிக்க வாய்ப்புகிடைத்தது. வாஜ்பாய் பிரதமராக இருந்தகட்டத்தில் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி அவர்கள் இணைந்து இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களை சிறு மாநிலங்களாக நிர்வாக வசதிகளுக்காகப் பிரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
அச்சமயத்தில் தான் உத்திர பிரதேசம், மத்தியபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் பகுதிகள், சட்டீஸ்கர், உத்ராஞ்சல், ஜார்கண்ட் ஆகிய சிறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. சமீபத்தில் ஆந்திராலிருந்து தெலுங்கானா பிரிந்தது.
தற்போதைய இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பூட்டான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருந்த பிரித்தானிய இந்தியா இரண்டு விதமான துணை அரசியல் அலகுகளைக் கொண்டிருந்தது. மாகாணங்கள், வைஸ்ராகளால் நியமிக்கப்பட்ட, ஆளுனர் அல்லது சிறப்பு ஆணையர் தரத்திலுள்ள பிரித்தானிய அதிகாரிகளால் நேரடியாக ஆளப்பட்டு வந்தன.
பிரித்தானிய இந்தியா 15 மாகாணங்களைக் கொண்டிருந்தது: அஜ்மேர்-மேர்வாரா, அசாம், பலுச்சிஸ்தான், வங்காளம், பீகார், பம்பாய், மத்திய மாகாணங்களும், பெராரும், கூர்க், டெல்லி, மதராசு, வடமேற்கு எல்லை, ஒரிசா, பஞ்சாப், சிந்து, மற்றும் ஐக்கிய மாகாணங்கள்.
பிரித்தானிய இந்தியாவில், பல்வேறு அளவுகளில் பல சமஸ்தானங்களும் இருந்தன. இவற்றுள், ஒரு கோடிக்கு மேல் மக்கள்தொகையைக் கொண்ட ஐதராபாத் முதலாக மிகச் சிறிய சமஸ்தானங்கள் வரை அடங்கி இருந்தன. இவற்றை விட வேறு இரு ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவில் சில நிலப்பகுதிகளை ஆண்டு வந்தன.
போத்துக்கீசிய இந்தியா, கோவா, டாமன், டையு, தட்ராவும் நாகர் ஹவேலியும் ஆகிய கரையோரப் நிலப்பகுதிகளையும், பிரெஞ்சு இந்தியா, சண்டர்நகர், ஏனாம், பாண்டிச்சேரி, காரைக்கால், மாகே ஆகிய ஐந்து நிலப்பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தன.
1947ல் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது, மேற்படி மாகாணங்களும், சமஸ்தானங்களும், இரு நாடுகளுக்கும் இடையே பங்கிடப்பட்டன. பஞ்சாப், வங்காளம் ஆகிய இரண்டும் மட்டும், சமய அடிப்படையில் பிரித்து வழங்கப்பட்டன.
ஐதராபாத்தின் இசுலாமிய ஆட்சியாளர் சுதந்திரமாக இருக்க முயன்றார் என்றாலும், இந்தியப் படை தலையிட்டு அதனை இந்தியாவுடன் இணைத்தது. 1950 ல், இந்திய அரசியல் சட்டம் நடப்புக்கு வந்ததுடன், பலவகையான மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. மாகாணங்களாயிருந்த, பிரிவு A மாநிலங்கள், ஆளுனராலும், தெரிவுசெய்யப்பட்ட சட்டசபையாலும் ஆளப்பட்டன.
இந்தப் பிரிவில் அடங்கிய ஒன்பது மாநிலங்களாக, அசாம், மேற்கு வங்காளம், பீகார், பம்பாய், மத்தியப் பிரதேசம் (முன்னர் மத்திய மாகாணங்களும், பெராரும்), மதராஸ், ஒரிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் (முன்னாள் ஐக்கிய மாகாணங்கள்). சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் பகுதிகளை பிரித்து தனியாக ஆந்திர மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையின் ஒருபகுதியாக பொட்டி சிறீராமலு என்பவர் 58 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார்.
பல்வேறு போராட்டங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க 1953 அக்டோபர் 01 ஆம் நாள் ஆந்திரம் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. அதே ஆண்டில் பாசல் அலி தலைவராகவும் பணிக்கர், குன்சுரு போன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் மொழியை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களை சீரமைக்க அறிவுறுத்தியது.
இந்தக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் 1956 ஆம் ஆண்டில் மாநில சீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப் பட்டு, இந்தியா 14 மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதே அடிப்படையில் மகாராஷ்டிராவிலிருந்து குஜராத் (1960) பிரிக்கப்பட்டது.
பின்னர் வந்த ஆண்டுகளில் மேலும் பல மாநிலங்கள் உருவாயின. 1963ல் நாகாலாந்து, 1966ல் அரியானா, 1971ல் இமாச்சலப் பிரதேசம், 1972ல் திரிபுரா, மேகலா மற்றும் மணிப்பூர், 1975ல் சிக்கிம், 1987ல் மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
2000 ஆவது ஆண்டில் சத்தீஸ்கர், உத்திராஞ்சல் மற்றும் ஜார்கண்ட் என மேலும் மூன்று மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2014 ஆவது ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலம் இந்தியாவின் 29 ஆவது மாநிலமாகும்.
இது குறித்து சுயராஜ்யாவில் வந்த ஆங்கிலப் பத்தி..
How much nicer it would be if Bihar, UP, Maharashtra, etc, are split into smaller governable provinces.
This won’t hurt to say with the Bihar elections concluded and the key Uttar Pradesh polls not due till 2017. Bihar and Uttar Pradesh need further subdivision to smaller states having 20 or so Lok Sabha seats. The principle needs extension to other large states as Maharashtra and West Bengal. Tamil Nadu with fewer than 40 seats may be border-line but division won’t harm.
Divisions will be solidly resisted by the political class and especially by regional politicians. Bihar politicians did not easily give up Jharkhand. Its mineral assets were stripped and cashed before every election. Nor was Uttarakhand peacefully carved out of Uttar Pradesh. At the time, the leaderless Uttarakhand agitation seemed destined to fail. The formation of Telangana was long overdue. Laloo Prasad Yadav, Mulayam Singh Yadav, Mamata Bannerjee, etc, will defy fractionation of their states. But smaller states are inescapable.
Smaller states are easier to govern and develop. They may seem unstable from having too few legislators but Manohar Parrikar made an example of Goa with his unvaried thrust to economic growth and development which brought political stability to the state. There is every reason to believe that smaller states fashioned from UP, Bihar, Maharashtra, West Bengal and Tamil Nadu will follow Goa’s stable pattern. In any case, they will each have two to three times more assembly members than Goa.
State elections are consuming too much national time and energies. Frequent elections and the negativities they generate is something all parties should get together and minimize. The damage caused to the national psyche is enormous. But super-sized states and their overweighted politics are also hurting national growth and cohesion. Bihar A and Bihar B with 20 Lok Sabha seats each would consume far less election time and exhaust the nation in half of a united behemoth with 40 seats. Uttar Pradesh divided into three entities will cease having a disproportionate influence on national politics. It is disconcerting that it controls a seventh of the Lok Sabha.
Wouldn’t smaller states come at a cost of a strengthened Centre? That is not so terrible. All the same, the Congress era of sacking state governments at will is over. The Supreme Court is intervening in cases of contentious assembly confidence votes where the speaker is biased. Information transfer is also so fast and far-reaching that a state deliberately neglected by the Centre has a powerful weapon of public opinion to fight back. Public opinion overwhelmingly supports economic growth and development. So the fears of a wilful Centre may be put to rest. But smaller states will definitely mean that they cannot use size to obstruct the national narrative of growth and development. India on the whole will become more governable and amenable to the rule of law.
If a spirited campaign gets underway now, perhaps the country will see more numbers of smaller states with better futures in the years to come. Politics in the states will also become less about power for power’s sake than good governance. (Courtesy : Swarajya |N V Subramanian )
- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-11-2015.
#SmallerStatesInIndia #KsRadhakrishnan #KSR_Posts
No comments:
Post a Comment