Thursday, November 12, 2015

இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும் பி.என்.ராவும் - Sir Benegal Narsing Rau




இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும் பி.என்.ராவும் - Sir Benegal Narsing Rau _________________________________________________ அரசியல் சட்ட நிர்ணய சபையில் இறுதியாக டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டது, “அரசியல் சட்டத்தைத் தயாரித்ததில் எனக்குத் தரப்படும் பாராட்டுகள் உண்மையிலே எனக்கு மட்டுமே உரியது அல்ல. ஓரளவுக்கு இந்தப் பாராட்டு இந்த அவையின் ஆலோசகராக இருந்த பி.என்.ராவ் அவர்களுக்கும் போய்ச் சேர வேண்டும். அவர்தான் அரசியலமைப்புச் சட்டத்தின் மசோதா வரைவுப் படிவத்தை தயாரித்தார். அவருடைய உழைப்பும் இந்த தருணத்தில் நினைவுகொள்ள வேண்டும். இந்த மசோதாவை 141நாட்கள் விவாதித்து பல்வேறு கருத்துகளை ஏற்றுக்கொண்டு, இந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டது. எஸ்.என்.முகர்ஜியின் பணியும் போற்றத்தக்கது” இவ்வாறு பி.என்.ராவ் அவர்களைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். 1947, ஆகஸ்ட் 29 -ல் அரசியல் நிர்ணய சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee)உருவாக்கப்பட்டது. பி.ஆர். அம்பேத்கர் கோபால்சாமி ஐயங்கார் அல்லாடி கிருஷ்ணமூர்த்தி கே.எம். முன்ஷி சையது முகமது சாதுல்லா மாதவராவ் டி. பி. கைதான் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக இக்குழுவில் இடம்பெற்றனர். இந்திய அரசியல் நிர்ணய சபை, தன்னுடைய முதல் கூட்டத்தை 1946ம் வருடம் டிசம்பர் 9 ஆம் தேதி கூட்டியது. டாக்டர் இராஜேந்திர பிரசாத், இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். துணை தலைவராக ஹரேந்திர குமார் முக்கர்ஜி பொறுப்பேற்றார். சர் பி. என். ராவ் அரசியல் நிர்ணய சபையின் சிறப்பு ஆலோசகராக செயல்பட்டார். அரசியல் நிர்ணய சபை ஐந்து கட்டங்களாக செயல்பட்டது. முதலில், அரசியலமைப்புச் சட்டம் உருவாக்க தேவையான அடிப்படை கூறுகள் என்னென்ன என்று முடிவு செய்ய வேண்டும். இதற்காக மற்ற நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்கள் பரிசீலனை செய்யப்படவேண்டும். இரண்டாவதாக அடிப்படை கூறுகள் முடிவுசெய்யப்பட்ட பிறகு, அதற்கான முன்வரைவை அரசியல் நிர்ணய சபையின் சிறப்பு ஆலோசகரான டாக்டர் பி.என்.ராவ் தயாரிக்கவேண்டும். மூன்றாவதாக டாக்டர் பி.ஆர்.அம்பேத்காரின் தலைமையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவு மசோதா தயார் செய்யப்படவேண்டும். பின்னர் அதை பொது மக்கள் விவாதத்திற்கு உட்படுத்தி விமர்சனங்களைப் பெறவேண்டும். நான்காவதாக அரசியல் சாசன வரைவு மசோதாவில் தேவையான சட்டத் திருத்தங்களை கொண்டு வரவேண்டும். ஐந்தாவதாக அரசியலமைப்புச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். இந்திய அரசின் சட்ட ஆலோசகராக இருந்த பி.என்.ராவ் இந்திய நிர்வாகப் பனியில் நீண்டகாலம் பணியாற்றினார். சட்டத்துறையிலும் பலபணிகளை மேற்கொண்ட அவர் தன் அனுபவத்தையும், அறிவாற்றலையும் கொண்டு மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் பயணங்கள் மேற்கொண்டு, சிந்திக்கத்தூண்டும் நிறைய குறிப்புகளை எழுதி அம்பேத்கருக்கும் அவரது குழுவினருக்கும் கொடுத்தார். எஸ்.என்.முகர்ஜி ராவின் உதவியாளராக இருந்தார். மிகவும் சிக்கலான விஷயங்களுக்கு மிக எளிமையாகவும், மிகத் தெளிவாகவும் சட்டவடிவம் கொடுப்பதில் ராவ் அவர்களின் திறமைக்கு ஈடு இணை இல்லை. இந்த அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கும் நேரத்தில் ஒரு நாளைக்கு இரண்டுமணி நேரம் தான் ராவ் அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும். இவ்வாறு அரும்பணிகள் ஆற்றிய ராவ் அவர்களை எத்தனை பேர் எண்ணிப்பார்க்கின்றார்கள். ராவ் அவர்களுடைய கைவண்ணம் அரசியலமைப்புச்சட்டத்தை மெருகேற்றியது. இப்படியான நவ இந்தியா சிற்பிகளை நாம் எண்ணிப்பார்ப்பதே இல்லை என்பதுதான் வேதனையான செய்தி. -கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 12-11-2015. Sir. Benegal Narsing Rau, CIE, (26 February 1887 – 30 November 1953) was an Indian civil servant, jurist, diplomat and statesman known for his key role in drafting the Constitution of India. He was also India's representative to the United Nations Security Council from 1950 to 1952. His brothers were Governor of the Reserve Bank of India Benegal Rama Rau and journalist and politician B. Shiva Rao. One of the foremost Indian jurists of his time, Rau helped draft the constitutions of Burma in 1947 and India in 1950. As India's representative on the United Nations Security Council (1950–52), he was serving as president of the council when it recommended armed assistance to South Korea (June 1950). Later he was a member of the Korean War post Armistice United Nations Command Military Armistice Commission (UNCMAC). A graduate of the Universities of Madras and Cambridge, Rau entered the Indian civil service in 1910. After revising the entire Indian statutory code (1935–37), he was knighted (1938) and made judge (1939) of the Bengal High Court at Calcutta (Kolkata). His writings on Indian law include a noted study on constitutional precedents as well as articles on human rights in India. He served briefly (1944–45) as Prime Minister of Jammu and Kashmir state. From February 1952 until his death, he was a judge of the Permanent Court of International Justice, The Hague. Before his election to the court, he was regarded as a candidate for secretary-general of the United Nations. Early life and education Narsing Rau was born in Mangalore on 26 February 1887 in a family of intellectuals. His father Benegal Raghavendra Rau was an eminent doctor. Narsing Rau passed Matriculation in 1901 from the Canara High School, Mangalore, topping the list of students of the entire Madras Presidency. He stood first in the entire University in the F.A. (Intermediate) examination and gained his degree with First Class marks in English, Sanskrit, and Mathematics. On a scholarship, he proceeded to Trinity College, Cambridge, and took his Tripos in 1909, just missing the Senior Wranglership. Bureaucratic career B. N. Rau passed the Indian Civil Service Examination in 1909 and returned to India, posted to Bengal. Doing well on the Executive side, in 1909 he moved to the Judiciary. His distinguished work brought him a Companion of the Order of the Indian Empire (CIE) in the 1934 New Year Honours list and a knighthood in 1938. An example of his outstanding thoroughness untiring industry, and sincerity was the manner in producing the Indus Waters Commission report to settle a dispute between Punjab and Sind. In preparation for the challenging assignments, he mastered Statistics within a short time, and then went on to understand the intricate problems of irrigation. Rau retired from service in 1944. After retirement from the Indian Civil Services, Rau was appointed as the Prime Minister of the princely state of Jammu and Kashmir. Role in drafting the Constitution of India B. N. Rau was appointed as the Constitutional Adviser to the Constituent Assembly in formulating the Indian Constitution. He was responsible for the general structure of its democratic framework of the Constitution and prepared its original draft. The Constituent Assembly's resolution setting up the Drafting Committee, under the chairmanship of B. R. Ambedkar, declared that it was being set up to "Scrutinise the Draft of the text of the Constitution prepared by the Constitutional Adviser giving effect to the decisions taken already in the Assembly and including all matters ancillary thereto or which have to be provided in such a Constitution, and to submit to the Assembly for consideration the text of the Draft Constitution as revised by the Committee." There already was a Draft in existence when this Committee was set up. The President of the Constituent Assembly Rajendra Prasad, before signing the Constitution on 26 November 1949, thanked Rau for having "worked honorarily all the time that he was here, assisting the assembly not only with his knowledge and erudition but also enabled the other members to perform their duties with thoroughness and intelligence by supplying them with the material on which they could work." Rau was not a member of the assembly but was perhaps as important in the framing of the Constitution. Diplomatic career Rau served India as a representing delegate in the United Nations. From 1949 to 1952 he was India's Permanent Representative to the UN, till he was appointed as a Judge of the International Court in The Hague. He also served as the President of the United Nations Security Council in June 1950. #KsRadhakrishnan #KSR_Posts #SirBenegalNarsingRau #ConstitutionAssembly

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...