மாப்பிள்ளை சம்பாதூய மல்லி சம்பாகண்டசாசிகப்புகவுனிசித்திரக்காலிவாலான்சிறைமீட்டான்மணல்வாரிசெஞ்சம்பாகருஞ்சூரைசீரகச்சம்பாமுத்துவிளங்கிமலைமுண்டன்பொற்பாளைநெடுமூக்கன்அரிக்கிராவிமூங்கில் சம்பாகத்தூரிவாணன்காடைக் கழுத்தன்இரங்கல் மீட்டான்கல்லுண்டைபூம்பாளைபாற்கடுக்கன்வெள்ளைபுத்தன்கருங்குறுவைபுனுகுச் சம்பாகஸ்தூரி சம்பாகுணாசம்பாகுண்டுமணி சம்பாகொத்தமல்லி சம்பாதூய்யமல்லி சம்பாகீர சம்பாகல்லன் சம்பாகட்டு குறுவாஇடார்ப்ப குறுவாஇமி குறுவாகரி குறுவாகுல குறுவாபனம் குறுவாஅறுவாள் குறுவாசொர்ணவாரிகாடகழுத்தான்விலங்கன்மானாவாரிமருதவேளிகரிமுலாக்கிஜீரகமுலாக்கிஎவன்ன முலாக்கிமஞ்சமுலாக்கிகாற்றாடி முத்தான்காற்றுகாரிமைணன்விரியன்கருத்த அரிவிக்குருவிசிறலாகிகுறுவகழையான்கொட்டாரஞ்சம்பாஆனகொம்பன்புழுதிபெரட்டி- இவையெல்லாம் நம்முடைய பாரம்பரிய நெல்வகைகள். பார்த்துப் பார்த்து விதைத்த நம் முன்னோர்களின் வேளாண்மையின் காலங்கடந்த இச்சொத்துகள் இன்றைக்கு மறைந்துகொண்டு வருகின்றன.இருப்பினும், ஒருசிலர் பாரம்பரியமாக இவ்விதைகளை வீட்டு உபயோகத்திற்காக இயற்கைவேளாண்மை முறையில் சாகுபடி செய்துவருகின்றனர்.2006ம் ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் மே கடைசி வாரத்தில் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 18 ஆயிரம் விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் வகைகளை விநியோகித்துள்ளார்கள் என அறியப்படுகிறது.நட்வர் சாரங்கி (77 வயது) எனும் ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தின் நரிசு கிராமத்தின் ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியர் சுமார் 400 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு, பாதுகாத்துள்ளார்.இவை விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.தமிழ்நாடு மற்றும் கேரளா விவசாயிகள் இவரிடம் இருந்து மருத்துவ குணம் கொண்ட நெல் ரகங்களைப்பெறுகின்றனர்.உளுந்தூர்பேட்டை, ஸ்ரீசாரதா ஆசிரமம், ‘அக்ஷய க்ருஷி கேந்திரா’ (வேளாண்மை மையம்) பாரம்பரிய நெல் வகைகளில் 150 வகைகளை சேகரித்து, விழுப்புரம் மாவட்டத்து விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைநெல் இலவசமாக வழங்கிப் பயிரிட ஊக்குவிப்பதன் மூலமாகவும் பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாத்து வருகின்றது.[8][9][10][11]இதன் மூலம் பாரம்பரிய நெற்பயிரை 120 கிராமங்களைச் சேர்ந்த 1,500 பெண்விவசாயிகள் பயிரிட்டு பலனடைந்துள்ளனர்.கர்நாடகத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ஸ்ரீனிவாசமூர்த்தி, இயற்கை விவசாய முறையின் உதவியுடன் பாரம்பரியமான 200 நெல் வகைகளைப் புதுப்பித்துள்ளார். புதுக்கோட்டைப் பகுதியில் வறட்சி மற்றும் நோய்த்தாக்குதலைத் தாக்குபிடிக்கும் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் பணியில் புதுக்கோட்டை இயற்கை விவசாயிகள் 24 வகையான பாரம்பரியமான நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம் செங்கற்பட்டு பகுதியைச் சேர்ந்த முகுந்தன், அரியன்னூர் ஜெயச்சந்திரன், திருவண்ணாமலை கலசப்பாக்கம் மீனாட்சி சுந்தரம் முதலானோர் கிச்சலிச்சம்பா, பெருங்கார் சீரகச்சம்பா ஆகிய பாரம்பரிய நெல் வகைகளைக் காப்பாற்றியுள்ளனர்.இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம் தொண்டு நிறுவனம் நூற்றுக்கணக்கான அரிய பாரம்பரிய விதை நெல் கொண்ட விதை வங்கியை சீர்காழியில் அமைத்துள்ளது.ஒடியாவில் இருந்து பெற்ற நெல் விதை உதவியோடு தஞ்சையில் விதை வங்கியை மாரியம்மன் கோயில் கோ.சித்தர் அமைத்துள்ளார்.தமிழ்நாடு வேளாண் பல்கழைக்கழகம் பாரம்பரிய நெற்பயிர்களில் எந்த பயிர் எந்த பகுதியில் செழித்து வளரும் என்பது போன்ற தகவல்களை வழங்குகின்றது.-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.26-11-2015#KsRadhakrishnan #KSR_Posts #Paddy
Friday, November 27, 2015
நமது பாரம்பரிய நெல் வகைகள் - Paddy.
Subscribe to:
Post Comments (Atom)
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
No comments:
Post a Comment