நவம்பர் 26ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் அரசியலமைப்புச் சட்டத்தின் தினம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இன்றைக்கு (26-11-2015) இந்திய அரசியலமைப்பு (Constitution Day) தினமாகும்.
26-நவம்பர் 1949அன்று இந்திய அரசியலமைப்பு சபையின் பரிந்துரைகளை ஏற்று நமது அரசியலமைப்புச் சட்டம் இறுதி படுத்தப்பட்டு நமக்கு நாமே என உருவாக்கிக்கொண்டோம். மக்களின் உணர்வுகளையும், அபிலாசைகளையும், உரிமைகளையும், வேட்கைகளையும் என அனைத்து எண்ணப்பாடுகளையும் ஒருமுகமாக பிரதிபலிப்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம்.
இதுகுறித்து பல பத்திகள் தினமணி, தி இந்து போன்ற நாளேடுகளில் எழுதியுள்ளேன். இருப்பினும் இதுகுறித்தான சிந்தனைகளையும், பிரச்சனைகளையும் இந்த ஒரு பத்தியில் அடக்கிவிடமுடியாது.
இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், எனக் கொண்ட பன்மையில் ஒருமை என்ற அடிப்படையில் பல வட்டாரங்கள் இணைந்து வாழ்கின்றோம்.
சமஸ்டி அமைப்பின் வேகத்தையும் தாக்கத்தையும் மத்தியில் ஆளும் மத்திய அரசு உணரவேண்டும்.
மாநிலங்களுக்கிடையே பாரபட்சமில்லாமல் சம உரிமைகளோடு, மாநில சுயாட்சி பெற்றிடும் வகையில் நம்முடைய பணிகளும், நம் அணுகுமுறைகளும் இருக்கவேண்டும்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-11-2015.
#IndianConstitutionDay #KsRadhakrishnan #KSR_Posts
No comments:
Post a Comment