இந்த தமிழக வரைபடத்தில் 17 ஆற்றுப்படுகைகள் குறிக்கப்பட்டுள்ளன. இந்த ஆற்றுப்படுகைகள் மூலமாக சமீபத்தில் பெய்த மழைநீர் சரியாக சேமிக்கப்படாத காரணத்தினால், வங்கக்கடலுக்குச் சென்றுவிட்டது.
இந்தப் படுகையில் தடுப்பணைகள், அணைகள், வாய்க்கால்கள் வெட்டி நீர் மேலாண்மை செய்திருந்தால், இந்தப் பருவமழை மூலம் நூற்றுக்கணக்கான டி.எம்.சி நீரை சேமித்திருக்கலாம்.
ஓராண்டுக்குமேல் விவசாயம், பாசனவசதி, குடிநீர் என பலத் தேவைகளை பூர்த்திசெய்திருக்கலாம். அத்தோடு நிலத்தடிநீர்மட்டமும் அதிகரித்து இன்னும் பத்தாண்டு காலத்திற்கு பயன்படும் வகையில் நிலத்தடி நீர்வளமும் பெருகி இருக்கும்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-11-2015.
#KsRadhakrishnan #KSR_Posts #Water
No comments:
Post a Comment