மரியாதைக்குரிய அண்ணாச்சி வைகோ அவர்களுடைய தாயார் 99-100 வயதை எட்டியவர் என்று செய்திகள். இந்த வயதை எட்டிய அன்னையார் அவர்களுடைய மறைவு நிகழ்ச்சியில் துக்கத்தோடு கலந்துகொண்டாலும் அவரின் வாழ்த்துகளும் நல்ல எண்ணங்களும் நமக்குக் கிடைத்ததாகவே கருதுகின்றேன்.
தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரும் சமீபத்தில் இந்தத் துக்கத்தில் கலந்துகொண்டது ஒரு முக்கிய நிகழ்வாகும். அந்த அன்னையாரின் வாழ்ந்துகாட்டிய தடங்கள் நமக்கு பாலபாடங்கள் ஆகும். இன்று (12-11-2015) அந்த அன்னையாரின் நினைவேந்தல் கலிங்கப்பட்டியில் நடந்தேறியுள்ளது.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
12-11-2015.
#KSR_Posts #KsRadhakrishnan
No comments:
Post a Comment