ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், டெல்லி ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் பேசிய பேச்சு இன்றைக்கு விவாதப் பொருளாகிவிட்டது. அந்தப்பேச்சில் சில பகுதி...
ரிசர்வ் வங்கி ரகுராம் ராஜன் பேச்சில் குறை நிறைகள்.
****************************************
ஹிட்லர் ஆட்சி தேவையா?
ஹிட்லர் சர்வாதிகார ஆட்சியை , 1975ம் ஆண்டு நெருக்கடி நிலையுடன் ஒப்பிட்டு பேசினார். ‘ஹிட்லர் ஆட்சியில் ரயில்கள் சரியான நேரத்தில் இயங்கின; எல்லா ஊழியர்களும் துல்லியமான நேரத்தில் அலுவலகத்தில் பணி செய்தனர். 1975ல் இருந்து 77 வரை இந்தியாவில் கூட நெருக்கடி நிலையின் போது இப்படித்தான் எல்லாம் சரியாக இருந்தன. ஆனால், ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். இரும்புக்கரம் கொண்ட அரசு தேவைதான்; அதே சமயம், சட்டமும், ஜனநாயகமும் கைகோர்ப்பதாக அமைய வேண்டும். அப்போதுதான் திடமான அரசால் வளர்ச்சியை காண முடியும்’ என்று ‘நச்’ என்று மோடி அரசுக்கு சுட்டிக்காட்டினார்.
***************************
ரகுராம் ராஜன் ஹிட்லரையும், இந்தியாவில் அவசரநிலைப் பிரகடனத்தையும் ஆதரித்துப் பேசியது சரி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. இருப்பினும் அவரது பேச்சில் கவனிக்க வேண்டிய விடயங்கள் உள்ளன.
உரிமைகளைக் கேட்கின்றோம்? நம் கடமைகளைச் செய்கிறோமா? அரசியலைமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் இருப்பதைப் போல, ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படைக் கடமைகள் சொல்லப்பட்டுள்ளன.
இந்திராகாந்தி அவர்கள் காலத்தில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தப்பட்ட அரசுக் கொள்கைகளை செயல்படுத்தி, நெறிமுறைப்படுத்தும் பிரிவுகள் இருப்பதாவது தெரியுமா?
ஒரு உதாரணத்திற்கு, தொழிற்சங்கங்கள் போன்ற பல அமைப்புகளுக்கு உரிமைகள் உண்டு, அதை யாரும் மறுக்கவில்லை. அதை வைத்துக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்தை முடக்க நினைப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? பொதுவாழ்வில் தன்னலமற்ற தலைவர்கள், தகுதியற்றவர்கள் மக்கள் பிரதிநிதிகள், குற்றவாளிகளே பரிபாலனம் செய்யும் அமைச்சர்கள் என்ற நிலைகள் இருக்கும்பொழுது
அமைப்பு ரீதியாக புரையோடிப்போகும். தகுதியே தடை.
நல்லவர்கள் பொறுப்புக்கு வருவதில்லை; ஆமாம் சாமிகள் நிர்வாகத்தில் இருக்கும்பொழுது நிலைமைகள் இப்படித்தான் இருக்கும். ரகுராம் ராஜனின் ஆதங்கம் இதனால் தான் ஏற்பட்டது.
அமைப்பு ரீதியாக புரையோடிப்போகும். தகுதியே தடை.
நல்லவர்கள் பொறுப்புக்கு வருவதில்லை; ஆமாம் சாமிகள் நிர்வாகத்தில் இருக்கும்பொழுது நிலைமைகள் இப்படித்தான் இருக்கும். ரகுராம் ராஜனின் ஆதங்கம் இதனால் தான் ஏற்பட்டது.
கடமையை நேர்மையாகச் செய்; உரிமையை மகிழ்ச்சியாகப் பெறு என்ற இதயசுத்தியான உணர்வு இல்லை என்றால் பாதிக்கப்படுவது நாடு. நாடு இல்லையென்றால் தனிமனிதன் இல்லை.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
01-11-2015.
#FundamentalRights #FundamentalDuties #KSR_Posts #KsRadhakrishnan
No comments:
Post a Comment