Wednesday, November 18, 2015

ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு சல்யூட் - Salute to Harvard University



ஹார்வர்டு பல்கலைக்கழகம் (Harvard University) ஐக்கிய அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ளது, ஐவி லீக் குழுமத்தில் ஒன்றாக உள்ள இப்பல்கலைக்கழகம் உலகத்தின் மிக பிரபலமான, பாரம்பரியமான பல்கலைக்கழகம்.

ஹார்வர்டு பல்கலைக்கழகம் 376ஆண்டுகளுக்கு முன், அதாவது 1639ல் ஜான் ஹார்வர்டு என்னும் மதகுரு ஒருவரால் தொடங்கப்பட்டது. 1869 முதல் 1909 ஆம் ஆண்டு வரை பல்கலைக்கழகத்தின் தலைவராக விளங்கிய சார்லஸ் இலியாட் உலகின் தலைசிறந்த ஆராய்ச்சி நிறுவனமாக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நூலகம் தான் உலகத்திலேயே மிகவும் அதிக நூல்கள் கொண்ட கல்லூரி நூலகமாக விளங்குகிறது. பொது நூலக வரிசையில் உலகில் நான்காவது பெரிய நூலகமாக விளங்குகிறது.

தமிழுக்கும் இருக்கை அமைத்து சிறப்பித்துள்ளமைக்காக இந்தப் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு நன்றிகூறக் கடமைப் பட்டுள்ளோம். சமஸ்கிருதத்திற்கு ஒரு இருக்கை இங்கு உள்ளது. இது நாள் வரை ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் இரண்டு சமூகங்கள் தான் தம் மக்களின் முயற்சியால் இருக்கைகள் நிறுவியுள்ளன. நூற்றுக்கணக்கான பிற இருக்கைகள் எல்லாம் பெரும் செல்வந்தர்களாலும், அரசாங்கங்களாலும் ஏற்படுத்தப்பட்டவை.

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை உலகத்தின் அறிவு மையம் என்று சொல்வார்கள். அறிவும் ஆற்றலும் உள்ள முதல்தரமான பேராசிரியர்களை இப்பல்கலைக்கழகம் ஈர்க்கும். அதேசமயம் உலகத்து பல நாடுகளிலிருந்தும் ஆர்வமான, தரமான மாணவர்கள் தமிழை கற்பதற்கும் ஆராய்வதற்குமாக ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தையே நாடுவார்கள்; உலகத் தரத்தில் ஆராய்ச்சிகளும் பயிற்றுவித்தலும் இங்கு நிகழும்.

இங்கே நிறுவப்பட்ட ஆய்வு முறைகளும் ஒப்பியல் முறைகளும் உலக அங்கீகாரம் பெற்றவை; மதிப்பு வாய்ந்தவை. அதனால் தமிழ் ஆராய்ச்சிகளின் பயன் பலரையும் சென்றடைகிறது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-11-2015.


#KsRadhakrishnan‬ ‪#KSR_Posts‬ ‪#HarvardUniversity

No comments:

Post a Comment

You'll be surprised by how consistently things will show up exactly as you need them to, and not a moment before. When it's time to act, the energy will come.

  You'll be surprised by how consistently things will show up exactly as you need them to, and not a moment before. When it's time t...