இலங்கை திரிகோணமலையில் சித்ரவதைக் கூடத்தில் தமிழர்கள் வதைக்கப்பட்டு, கொல்லப்பட்டதற்கான சாட்சியங்களும், தரவுகளும் கிடைத்துள்ளதாக ஐ.நா நியமித்த மூவர் குழு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்தவாரம் என்னுடைய பதிவில் முழுமையாக எழுதியிருந்தேன். இதுகுறித்து இந்தவார நக்கீரன் இதழில் வெளியான என்னுடைய பேட்டி வருமாறு...
*********
திரும்பவும் இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்க அரசியலமைப்பு அவை அமைக்கப்பட இருப்பதாக ரணில் கூறியுள்ளார் என்று அன்பு நண்பர், பத்திரிகையாளர் பி.கே.பாலச்சந்திரம் கொழும்பிலிருந்து தகவல் சொன்னார்.
நகல் அரசியலமைப்பில் சிங்களர்களுக்குச் சாதகமாக அனைத்துப்பிரிவுகளும் இருக்கும் என்று தெரிகிறது. இது மேலும் தமிழர்களுக்கு எதிராக பெரிய கேடு விளைய காரணமாகி விடுமோ என்று அனைவரும் அச்சப்படுகின்றனர்.
இந்த அவையின் தலைவராக நாடாளுமன்றத் தலைவர் இருப்பார் என்று சொல்லப்படுகிறது.
- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-11-2015
#KsRadhakrishnan #KSR_Posts #SrilankaTamilsIssuesUNPanal
No comments:
Post a Comment