Monday, November 16, 2015

ஸ்பெயின் அரசி இசபெல்லா - Isabella I of Castile



சர்ச்சைக்குரிய ஸ்பெயின் நாட்டு அரசி இசபெல்லாவைப் பற்றிய நூலினைப் படித்து வருகின்றேன்.

இன்றைய ஸ்பெயின் நாட்டின் காஸ்டைலின் அரசியாக இருந்தவர் இசபெல்லா். நாடுகளைக் கண்டறிய கடற்பயணம் மேற்கொள்ள கொலம்பஸுக்கு உதவியவர் இவரே.

மூன்று வயதாக இருக்கும் போதே அரகானின் அரசனான இரண்டாம் ஜானின் மகன் ஃபெர்டினாண்டுக்கும் இசபெல்லாவுக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் இசபெல்லாவின் தந்தை ஹென்றி ஆறு வருடம் கழித்து இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்தார்.

இசபெல்லாவுக்குத் தகுந்த மணமகன்களாக பலர் தேடப்பட்டார்கள். ஆனால் அனைத்து தடைகளையும் கடந்து ஃபெர்டினாண்டையே கைப்பிடித்தார் இசபெல்லா.

ஆரம்ப கட்டத்தில் கொலம்பஸின் நாடுகண்டடையும் கடற்பயணத்தை எதிர்த்தாலும் ஓரிரு ஆண்டுகள் கழித்து, பெரும் பொருட்செலவுடன் கூடிய கொலம்பஸின் பயணத்துக்கு
தேவையான பொருளுதவிகளைச் செய்தார். கண்டுபிடிக்கும் தீவுகளுக்கு அவரே ஆளுநர் என்றும், அலைகடலின் தளபதி என்றும் கொலம்பஸுக்கு பட்டமும் சூட்டி வழியனுப்பி வைத்தார்.

தன் கணவன் பெர்டினாண்டுடன் புரிந்துணர்வுடனும் சம உரிமையுடனும் இவர் ஆட்சி நடத்தினார். கிரனடாவில் உள்ள அரண்மனையில் இவர்களது சம உரிமைச் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது. அமெரி்கா வெளியிட்ட அஞ்சல் தலையிலும், நாணயத்திலும் இடம் பெற்ற முதல் பெண்மணி இசபெல்லா தான். இசபெல்லாவின் அஞ்சல் தலை பல ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் போயின.

பெண்ணும் ஆணும் சமம் என்ற கோட்பாட்டை உறுதியோடு கடைபிடித்தவர் இசபெல்லா.



"As she stood in the sun in Segovia that winter afternoon, however, she showed no trace of fear or hesitation. Inspired by the example of Joan of Arc, who had died just two decades before Isabella was born and whose stories were much repeated during her childhood, Isabella similarly began to fashion herself as a religious icon."

—Isabella The Warrior Queen by Kirstin Downey

An engrossing and revolutionary biography of Isabella of Castile, the controversial Queen of Spain who sponsored Christopher Columbus's journey to the New World, established the Spanish Inquisition, and became one of the most influential female rulers in history.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-11-2015

#KsRadhakrishnan #KSR_Posts #IsabellaIofCastile

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...