தமிழ் நாட்டில் பலத்த மழையினால் எங்கும் வெள்ளம். நாடே மிதக்கின்றது. முதலமைச்சர் ஜெயலலிதா வெள்ளச் சேதங்களை வேனிலிருந்தே 30நிமிடங்கள் பார்வையிட்டுவிட்டு ஒலிப்பெருக்கியில் பேசிவிட்டு திரும்பிவிட்டார்.
தி.மு.கவினர் வெள்ள நிவாரணப் பணிகளை அங்கங்கு முடக்கிவிட்டு மக்களுக்கு உதவியாக உள்ளனர். தளபதி.மு.க.ஸ்டாலின் வெள்ளப் பகுதிகளை கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக
பார்வையிட்டு மக்களுக்கு உதவிகளையும், நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.
இதேப்போல அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும் வெள்ளப்பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து, ஆறுதலாக அவர்களிடம் நிவாரணப் பொருட்களையும் வழங்கினர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செம்மரக்கடத்தல் பிரச்சனையில் நடந்துகொண்ட முறையில் நமக்கு அவர்மீது கோபங்களும் உண்டு. கடுமையான கண்டனங்களும் அவர்மீது தெரிவித்ததுண்டு.
ஆனால், அவர் தன்னுடைய மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களுக்குச் சரியாக நிவாரணப் பணிகளும் புணரமைப்புப் பணிகளும் நடக்கவில்லை என்று அரசு அதிகாரிகளை கடுமையாகச் சாடுவதை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
அவருடைய பேச்சில் மக்கள் உங்களை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என்று அரசு அதிகாரிகளைப் பார்த்து மக்களை அலட்சியப் படுத்தாதீர்கள் என்று கடுமையாகச் சொல்வதையும் கவனிக்கின்றோம்.
இந்த அணுகுமுறை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வரவில்லை என்பதுதான் நம்முடைய வினா?
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-11-2015.
#Floods #KsRadhakrishnan #KSR_Posts #ChandrababuNaidu
No comments:
Post a Comment