இன்றோடு தகவல் அறியும் உரிமைச்சட்டம் நடமுறைக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1996ல் ராஜஸ்தான் மாநிலத்தில் முதன்முதலாக இதற்கான கோரிக்கை முழக்கம் வைக்கப்பட்டது.
லோக்பால் மாதிரி நீண்ட போராட்டத்தின் விளைவாக தகவல் அறியும் சட்டம் மன்மோகன்சிங் ஆட்சிகாலத்தில் நடமுறைக்கு வந்தது. நாடாளுமன்ற குழு அமைத்து பல திருத்தங்கள், பல விவாதங்கள் நடத்தப்பட்டு இந்தச் சட்டம் இறுதியாக செயலுக்கு வந்தது.
இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த பல்வேறு சமூக ஆர்வலர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியை பெருமையோடு நினைத்துப்பார்க்கவேண்டிய கட்டத்தில் உள்ளோம். அருணா ராய் போன்ற போராளிகள் அர்ப்பணிப்பு உணர்வோடு இச்சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வர பல போராட்டங்களைச் சந்தித்தனர்.
ஒரு ஆண்டிற்கு 50லட்சம் தகவல் அறியும் மனுக்கள் நாடுமுழுவதும் அனுப்பப்படுகின்றது. இருப்பினும் சரியான தகவல்களும் குறிப்பிட்ட நேரத்திற்குச் சென்றடைவதில்லை. அதற்கான அரசு இயந்திரங்களும் முனைப்போடும் செயல்படுவதும் இல்லை. இருப்பினும் பத்தாண்டுகளில் இச்சட்டத்தின் மூலம் பல உரிமைகள், தகவல்கள் நிலைநாட்டப்பட்டுள்ளன.
ஏன்? எதற்கு? என்று கிரேக்கத்தில் சக்ரடீஸ் கேட்டதற்கு ஏற்ற வகையில் நமது தகவல் அறியும் சட்டம் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் வந்தபிறகு தகவல் அறியமுனையும் ஆர்வலர்கள் பலரை சமூக விரோதிகள் கொலைசெய்ததும் உண்டு.
இதை ஒரு இயக்கமாகவே கருதவேண்டும். இந்த இயக்கத்தில் பங்கேற்கும் ஆர்வலர்களுக்கு உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலை இந்தியாவில் உள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (Right to Information Act, சட்டம் எண். 22/2005) இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக்க உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். இச்சட்டம் டிசம்பர் மாதம் 2004,[1] ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மே 11, 2005,[1] மக்களவையிலும், மே 12, 2005,[1] ஆம் ஆண்டு மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. ஜூன் 15 2005 குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. ஜூன் 21, 2005, அரசுப் பதிவியழில் வெளியிடப்பட்டு அக்டோபர் 12,2005 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது.இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவின் பிறப் பகுதிகள் அனைத்திற்கும் பொருந்தும். இதன்படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்/மகளும் தகவல் பெறும் உரிமை பெற்றவர்கள்.
அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருப்பதும், ஊழலைக் கட்டுப்படுத்தி தவிர்ப்பதும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள், மக்களுக்குத் தேவையானத் தகவல்களைத் தரக் கடமைப்பட்டுள்ளதை உறுதிசெய்வதும் தகவல் பெறும் சட்டத்தின் நோக்கங்களாகும்.
தகவல் கொடுக்கும் கடமை. அரசாங்கம் சார்ந்த அல்லது அரசு உதவிப் பெறும் நிறுவனங்கள், துறைகள், அலுவலகங்கள் அனைத்தும் தங்களைப் பற்றிய தகவல்களைத் தாமாகவே முன்வந்து மக்களுக்கு கொடுக்க வேண்டும். குறிப்பாக தகவல்களை பெறும் நோக்கோடு மக்கள் தங்களிடம் கேட்கும்பொழுது தகவல்களை அளிக்கவேண்டியது அரசு, நிறுவன அலுவலர்களின் கடமை என இச்சட்டம் கூறுகின்றது.
ஆவணங்கள், குறிப்பாணைகள், மின்னஞ்சல்கள், கருத்துரைகள், அறிவுரைகள், செய்தி வெளியீடுகள், சுற்றறிக்கைகள், ஆணைகள், நாள்விவரக் குறிப்பேடுகள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், தாள்கள், மாதிரிகள், மாதிரிப் படிவங்கள், மின்னியக்க வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளத் தகவல்கள் மற்றும் நடைமுறையில் உள்ள வேறு சட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் (அதிகாரிகள்) மேற்பார்வையிடும் அதிகார வரம்புக்குள் வரும் எவ்விதமான தனியார் குழுமமாக இருந்தாலும் அவைத் தொடர்பான செய்திகளும், தகவல்களும் இதில் அடங்கும்.
தகவல் பெற விரும்பும் நபர் ஆங்கிலம் அல்லது இந்தி அல்லது விண்ணப்பம் செய்யப்படும் நிலப்பகுதியின் அலுவல் மொழியில் எழுத்து வடிவிலோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ தகவலின் விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட பொது அதிகார அமைப்பின் மத்தியப் பொதுத் தகவல் அலுவலர் அல்லது மாநிலப் பொதுத் தகவல் அலுவலர் அல்லது மத்திய உதவிப் பொதுத் தகவல் அலுவலர் மற்றும் மாநில உதவிப் பொதுத் தகவல் அலுவலருக்கோ அனுப்பலாம். தகவல் கோரும் விண்ணப்பத்தாரர், அத்தகவல் பற்றிய விபரங்களையும் அவரைத் தொடர்புக் கொள்வதற்கான முகவரியையும் தவிர வேறு விவரங்கள் எதையும் கொடுக்க வேண்டியதில்லை.
விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதில் அளிக்கவேண்டும். அவசரத் தகவல்கள் என்றால் 48 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்டவர் பதிலளிக்கவேண்டும்
இந்திய குடிமக்கள் எவருக்கும் பிரிவு 8-ன் கீழ் பின்வரும் தகவல்களைக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.
1.இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு நாட்டின் பாதுகாப்பு போர் யுக்திகள், நாட்டின் அறிவியல் மற்றும் பொருளாதார நலன், வெளி நாடுகளின் உறவு இவற்றைப் பாதிக்கும் குற்றம் புரியத் தூண்டுதலாக அமையும் தகவல்கள்,
2. நீதிமன்றம், தீர்ப்பாயம் இவை வெளிப்படையாகத் தடை செய்துள்ளத் தகவல்கள் அல்லது நீதிமன்ற அவமதிப்பை உண்டாக்கும் தகவல்கள்.
3. நாடாளுமன்றம் மற்றும் மாநில சிறப்புரிமைகளை மீறுமை செய்யும் தகவல்கள்.
4. வாணிக நம்பகத் தன்மை, வியாபார இரகசியங்கள், அறிவு சார் சொத்துடைமை இவை வெளிப்படுத்தப்பட்டால் அது மூன்றாம் தரப்பினரின் சந்தைப் போட்டிக்குக் குந்தகம் விளைவிக்கும் தகவல்கள். இத்தகவல்கள் பெரும்பான்மை மக்களுக்கு இன்றியமையாதது என்று தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு மனநிறைவு அடைந்தாலன்றி அத்தகவல்களை வெளியிடக் கூடாது.
5. ஒருவருடைய பொறுப்புரிமை தொடர்பு உறவால் கிடைத்த தகவலை, பெரும்பான்மை மக்களின் நலனுக்கு இன்றியமையாதது என, தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு மனநிறைவு அடைந்தாலன்றி அத்தகவலை வெளியிடக்கூடாது.
6. வெளிநாட்டு அரசுகளிடமிருந்து இரகசியமாகப் பெற்றத் தகவல்கள்.
7. ஒரு நபரின் வாழ்வு அல்லது உடல் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துவதை, தகவலின் மூலத்தை அடையாளப்படுத்துவதை அல்லது சட்டம் நடைமுறைப்படுத்துவதை அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக இரகசியமாக்கஃ கொடுக்கப்பட்ட உதவிக்கு ஆபத்து விளைவிப்பதை ஏற்படுத்தும் தகவல்கள்.
8. புலனாய்வை அல்லது குற்றவாளிகளைக் கைது செய்வதை அல்லது அவர்கள் மீது குற்ற வழக்குத் தொடர்வதைத் தடை செய்யும் தகவல்கள்.
9. அமைச்சரவை செயலர்கள் மற்றும் பிற அலுவலர்கள் (அதிகாரிகள்) கலந்தாய்வுகளின் பதிவேடுகள் உள்ளிட்ட அமைச்சரவை ஏடுகள் வெளிப்படுத்தப்படுவதிலிருந்து விலக்குப் பெறுகின்றன.
( அமைச்சரவை முடிவுகள் எடுத்த பின்னர், அம்முடிவுகள் அவற்றிற்கான காரணங்கள், பின்புலங்கள் இவைகள் தடை செய்யப்பட்ட தகவல்களாக இல்லாதிருந்தால் பொது மக்களுக்குத் தெரிவிக்கலாம்)
10. பொது செயல்பாட்டிற்கு, பொது நலனிற்கு தொடர்பில்லாத தனி நபரின் அந்தரங்கத்தில், நியாமற்ற முறையில் தலையீடு செய்யும் தனிநபரோடுத் தொடர்புடையத் தகவலைத் தெரிவித்தல் கூடாது.நாடாளுமன்றத்திற்கோ, மாநில சட்டப் பேரவைக்கோ மறுக்கப்படாத ஒரு தகவல் தனிநபருக்கும் மறுக்கக்கூடாது.
இச்சட்டத்தின்படி தவறு செய்யும் தகவல் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கும் அதிகாரம் என்பது மத்தியத் தகவல் ஆணையம் அல்லது மாநிலத் தகவல் ஆணையத்திடம் உள்ளது. குறித்த நேரத்தில் தகவல் அளிக்காமை, தவறான தகவல்கள் தருவது அல்லது வேண்டுமென்றே திருத்தப்பட்ட தகவல்களை தருவது ஆகியவற்றிற்காக துறைசார்ந்த நடவடிக்கைகள் எடுக்க நடவடிக்கை எடுக்கலாம். மேலும் தலா 250 ரூபாய் வீதம் 25 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் தகவல் ஆலுவலரிடமிருந்து அபராதம் வசூலிக்கவும் இச்சட்டம் வழிசெய்கின்றது.
Ten years of implementation of the Right to Information Act has spawned a new breed of activism and citizenship
The Right to Information (RTI) Act has completed 10 years of implementation. According to a conservative estimate based on the Information Commission’s annual reports, there are at least 50 lakh RTI applications filed in India every year. The Commonwealth Human Rights Initiative used the data to estimate that just under 1 per cent of the electorate uses the RTI every year. Over the last decade, at least 2 per cent of the Indian population has used the law. For a law that requires proactive initiative, those are extraordinarily high numbers.
Aruna Roy, Nikhil Dey Despite all our justified complaining about poor implementation, bureaucratic resistance, interference, absence of political and administrative support, threats against users, and attempts at dilution, people have fiercely owned the law like no other. They have defended it against every attack and put it to sustained use.
Popularity of RTI
Many people have tried to understand why the RTI has become so popular in India. Why does use of the law continue to spread despite the odds stacked against the users and applicants? What converts individuals into users and users into activists? In the unequal battle of trying to hold power to account, perhaps it is the real empowerment and sense of hope that the RTI offers to every citizen.
People need to hope. About two decades ago, writer Arundhati Roy made a passing comment on why peddlers of salvation, despite their unattainable promises, attract so many people. They actually peddle hope. We want to be reassured that we can do something to set things right. Bollywood films with happy endings, where the single and determined fighter takes on all that is evil, are not only three-hour escapades but indicators of our need to hope. The human desire for dignity, equality, public ethics, and the capacity to enforce these even to some extent needs an outlet. RTI, in many ways, offers that measure of hope.
In the world of democratic politics, people face the bleak scenario of political, economic and social promises being twisted to serve personal profit. Occasionally an election re-infuses great hope. But political leadership apart, the long march of attempting to make constitutional promises of equality and liberty is part of the daily survival of millions of Indians. People struggle every day to establish some reason in dealings in public life with assertions of citizenship, entitlements, and ethics. Discussions and deliberations within such groups and collectives gave birth to the process and principles of the RTI movement. The genesis of the RTI addressed issues of constitutional rights: empowering individuals and collectives to demand answers from a corrupt government.
In 1996, a lawyer, who casually dropped in to talk at the first large RTI dharna in Beawar in central Rajasthan, said, “This is a great cause and issue, but let’s forget about ever getting the law. No corrupt system is going to expose its rotten core.” Let us imagine for a moment that he was proved right, that India had not passed a strong RTI law a decade ago. How different would things be?
The RTI is a law that has spawned a new breed of activism and citizenship. RTI enthusiasts do not only file RTI applications; they also spend countless hours debating sections, cases, applications, and answers. These are ordinary people who have suddenly become obsessed and even possessive about their particular connection to this law. They are RTI’s foot soldiers and, at the same time, its generals, who have used the law to shake India’s officialdom by its roots.
Questioning authority
A decade gives us an opportunity to see what RTI is doing to the much larger processes of change. These are matters not of law, but of culture, of equations of power, and of unquestioned norms. It is very rare that one gets an opportunity to not just ask a question but change the basis of questioning. Without specifically attempting to change relationships in society, the RTI has begun to do just that. Without debating the hierarchies of who can ask questions and who must provide answers, the Act has begun to encourage a culture of asking questions. We are far from being an open society, but the RTI is opening our minds to what such a society might be.
It’s not often that one can see the impact of a law in terms of its social and philosophical implications. The RTI is a process of dismantling illegitimate concentrations of power. We can expose the lies and the cheating, not merely in monetary terms, but unravel the promotion of conflict and exploitation of the poor.
The RTI is messy, untidy, incomplete, and, of course, imperfect. But that is its strength: it acknowledges contention and builds its own theory of relativity. There are many perspectives on each issue. The RTI provides a platform for each view to engage with the other on the basis of a shared logic. It can help us escape from policy paralysis, and build a more informed, equitable and robust decision-making process.
A bureaucrat friend, not particularly enamoured by the RTI, reluctantly conceded to us, “There is one thing I must acknowledge — when any government servant picks up a pen to write on a file, he or she has RTI on their mind. This is one of the best forms of deterrence against wrongdoing we can have.” That was an acknowledgment of incredible universal impact covering everyone at all times. If we want to usher in a paradigm of transparency, it is clear that bureaucrats must have the friendly ghost of the RTI implanted in their psyche. And that is how cultural change begins. As RTI users, we often say that the RTI helps change the mindsets of those asking the questions as well, because the same standards must obviously apply. More importantly, it is very likely that anyone posing a challenge will invite one to themselves — and just a willingness to be prepared for such a situation means that an ethos of questioning is taking birth.
It is widely acknowledged that we are becoming a consumer-oriented, competitive society. In fact our capitalist framework seems to encourage it. Should we not also acknowledge other forces in society that are encouraging us to demand answers of the powerful, use truth as a basis of demand for change, and provide tools that strengthen the weak and make the strong accountable?
Let’s imagine for a moment that India had not passed the RTI a decade ago. What would it be like today? Not just a less accountable, more corrupt, opaque government, but also a far more discouraging and despairing country. Despite what the sceptic said in Beawar 20 years ago, India has passed a strong RTI law. The people of Beawar held a meeting to celebrate ten years of the RTI, and said they had not dreamt how far this would go in 20 years. Subsequently, the Municipal Corporation of Beawar passed a unanimous resolution to build a memorial at the spot at Chang Gate where the 40-day dharna took place in 1996, launching the RTI movement in India. Its foundation stone was laid on October 13 this year. To have a city celebrate a law and identify itself with it is a sign of strong and sustained citizen activism. To have that sense of ownership spread across the country should give the Indian citizen some hope of what the next ten years might bring.
(Aruna Roy and Nikhil Dey are social activists and members of the Mazdoor Kisan Shakti Sangathan and the National Campaign for People’s Right to Information.) Courtesy : The Hindu | 20 -11-2015
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-11-2015.
#KsRadhakrishnan #KSR_Posts #தகவல்அறியும்உரிமைச்சட்டம்2005
#RightToInformationAct2005
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-11-2015.
#KsRadhakrishnan #KSR_Posts #தகவல்அறியும்உரிமைச்சட்டம்2005
#RightToInformationAct2005
No comments:
Post a Comment