Saturday, February 18, 2017

தமிழக சட்டமன்றம்

தமிழக சட்டமன்றத்தில் கடந்த 
28/1/1988 ல் நடந்ததை குறித்த அன்றைய பேரவை தலைவர் பி.எச்.பாண்டியன்  வெளியிட்ட பத்திரிக்கை குறிப்பு.
அன்றும் பெரும் கலவரம், அசெம்பிளி மைக்கிகள் கையால் எடுத்து கொண்டு எம்.எல்.ஏகள் ரௌடிகள் போன்று வெளியே வலம்வந்தனர் ..
வி.என.ஜானகி 28/1/1988ல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது , பிரதான எதிர்க்கட்சி காங்கிரஸ் அவையில் இல்லை . மொத்தம் இருந்த 234 எம்எல்ஏக்களில் வெறும் 110 எம்எல்ஏக்கள் மட்டுமே அவையில் இருந்த நிலையில் தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.வி.என். ஜானகி வென்றதாகவும் அறிவிக்கப்பட்டது . ஆனால் கவர்னர் குரானா பரிந்துரை படி இரண்டு நாளில் ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலானது . அப்போதும் கூட சபை 2  முறை ஒத்திவைக்கப்பட்டது.
......................
இதே சசிகலா,எம்.எல்.ஏவாக இல்லாத போது 1992ல் சட்டமன்றத்தில் துணை சபாநாயகர் இருக்கையில் அமர ஜெயலலிதா அனுமதித்தார்.பேரவை தலைவர் தனது காலில் விழவும் ஜெயலலிதா  அனுமதித்தார். சட்டமன்றத்தின் மாண்பு பறி போனது.

#தமிழகசட்டமன்றம்

#KSRPost 

#KSRadhakirushnanpost 
கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
18/2/2017




No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...