இன்று உழவர் வாழ்வுரிமை போராளி நாராயணசாமி நாயுடு பிறந்த நாள்.அவர் தலைமையேற்ற நடத்திய விவசாய சங்கத்தின் மாணவர் அமைப்பை 1972-82 வரை கட்டியெழுப்பியவன் என்ற வகையில் அவரை பற்றி பல நினைவுகள்....
விவசாய கடன்கள் ,ஜப்திகளை குறித்து 1975 ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கு;1972ல்
கோவில்பட்டியில் துப்பாக்கி சூட்டில் 3 பேர் மறைந்த துயரம் , 31.12.1980 ல் என்னுடைய கிராமத்தில் 8 விவசாயிகள் விவசாய பந்த் அன்று காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர் .
விவசாய சங்கவழக்குகள்1970-80களில் சென்னைஉயர்நீதிமன்றத்தில்நடத்தி
அவருக்கானசுமையைகுறைத்தேன் .
சென்னைக்கு வந்தால் என் வீட்டிற்கு வந்து என்னோடு தங்கயிருந்த விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனிடம் எனக்கோரு துப்பாக்கி கொடு தம்பி என்று கேட்பார். அதற்கு பிரபாகரன் நீங்களே போராளி,துப்பாக்கி உங்களுக்கு எதுகய்யா துப்பாக்கி என இருவரும் பேசிக்கொண்டதை ரசித்ததும் உண்டு .
மேடையில் கம்பீரமான தோற்றத்துடன் எளிமையாக , எதார்த்தமாக பேசுவார் .எளிமையாகவும் ,சுத்தமாகவும் ஆடைகளைஉடுத்த வேண்டும் என்று சொல்வார்.அவருடைய பிறந்த நாளில் இந்த எண்ணங்கள் இன்று மனதில் தோன்றின .
#நாராயணசாமிநாயுடு #விவசாயசங்கம்
#Ksrpost #KSRadhakirushnanpost
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
6/2/2017
No comments:
Post a Comment