இன்றைய மணல் கொள்ளை காட்சிகள்:
------------------------------------
இந்த புகைப்படங்களை பார்த்தாலே நெஞ்சு பொருக்கவில்லை . மணல் இயற்க்கையின் அருட்கொடையால் ஆயிரம் ஆண்டுகள் திரண்டு உருவாகி நதி தீரங்களில்பள்ளிகொள்கின்றன.
கொள்ளைக்காரர்கள்,தங்களுடைய லாபத்திற்காக மனசாட்சி இல்லாமல் இப்படி மணலை கொள்ளை அடிக்கின்றனர்.திருட்டுதனமாக மணலை அள்ளும் கொடும்பாவிகளை தேசவிரோதிகள் என்று சொல்லி தூக்கில் போடவேண்டும் .
சாரை சாரையாக லாரிகளில் மணலை கொள்ளையடிப்பதை பார்த்தால் வேதனையும்,ரணமும் ஏற்படுகிறது .தண்ணீரில் உள்ள மணலை கூட விடாமல் நீர் சொட்ட சொட்ட அள்ளும் இந்த திருட்டு பயல்களிடம் எந்த நியாயமும் நேர்மையும் கிடையாது .
அள்ளிய இந்த திருட்டு மணலை மாலத்தீவு , கேரளம் , கர்நாடகம் , ஆந்திரத்திற்கு கடத்துகின்றனர் .
அசைவ உணவு விடுதில் ஈரல் , பாயா,லெக் பீஸ் என விலை பட்டியல் இருப்பதை போல கேரளத்தில் காவிரி மணல் , வைப்பாறு மணல் , தாமிரபரணி மணல் என பட்டியல் போட்டு விலைக்கு விற்கும் கேவலமான நிலைக்கு தள்ளியவர்களை சட்டமும் அரசும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றது.
விதியே விதியே தமிழ் சாதியே.....
#மணல்கொள்ளை
#KSRadhakirushnanpost #Ksrposting
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
No comments:
Post a Comment