Saturday, April 22, 2017

மதிப்பிற்குரிய ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள் நெருக்கடி நிலை பேச்சு (1975)

மதிப்பிற்குரிய ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள் நெருக்கடி நிலை( 1975) காலத்தில் பேசிய பேச்சு ஒன்றினை இன்று வாசிக்க நேர்ந்தது.

 " அறிவற்றவர்களும், ஆற்றலற்றவர்களும், நேர்மை அற்றவர்களும்  நமக்கு அமைச்சர்களாக,அரசியல் தலைவர்கள் ஆக வருவார்கள்". என்பது தான் அந்த பேச்சின் சிறுபகுதி. இன்றைய காலகட்டத்திற்கும் சரியாக பொருந்தி வருகின்றது.
'இம்பூட்டு அறிவு கொண்ட அமைச்சர்கள் ஆளும் மாநிலத்துல நாமளும் இருக்கோங்கறத நினைச்சா பெருமிதத்துல கண்ணு வேர்க்குது'

அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாக்கோல் கொண்டு நீர் ஆவியாதலை தடுக்க முயற்சி செய்வதும், நாற்பதாண்டு கால அரசியல் வரலாறு கொண்ட பன்னீர்செல்வம் நிபந்தனை வைத்து செய்வதும், அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறையின் விசாரணைக்கு படியேறுவதும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் 1975ஆம் ஆண்டு  பேச்சுக்கு இன்றைய உதாரணங்கள்.

#KSRadhakrishnanpostings
#KSRpostings
#ஜெயப்பிரகாஷ்நாராயணன்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-04-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...