சமீபத்தில் சாத்தூர் - இருக்கன்குடி வழியாக தூத்துக்குடி -அருப்புக்கோட்டை சாலைக்கு செல்லும்போது அரசு பணத்தில் கட்டப்பட்ட தடுப்பணையும், வாய்க்காலும் பயனற்றுப் போன நிலையை கண்டேன். 30 ஆண்டுகளுக்கு மேலாக திட்டமிட்டும் இருக்கன்குடி அணைத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. அரசு பணம் விரையமாகி நடுத்தரகர்கள் சுருட்டிக்கொண்டு சென்றுவிட்டனர் என்பது வேதனையான விடையம்.
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் வைப்பாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டது. இதன் நோக்கமே தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தலாபுரம் முதல் விளாத்திகுளம் வரை பாசனம் நடக்க வேண்டும் என்பதுதான். ஆனால், அணை கட்டியதிலிருந்து ஒரு நாள்கூட இந்த பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. கோரிக்கை வைக்காத நாளே இல்லை, நடத்தாத போராட்டமும் இல்லை. எனினும், நடவடிக்கை இல்லை.
No comments:
Post a Comment