நெருக்கடி நிலைக்கு காரணமான இந்திராகாந்தியை பதவியில் இருந்து இறங்க வைத்த ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களின் சீடருமான, மக்கள் சிவில் இயக்கத்தின் தேசிய துணை தலைவர்களில் ஒருவரான,சோஷலிஸ்ட் தலைவருமான, மொராஜிதேசாய் அவர்களின் தளபதி என போற்றப்பட்டவர் சுரேந்திர மோகன்.
அப்போது அவர், "இராமாயணம், மகாபாராதம், கெளடில்யம், மாக்கியவல்லி, Rise and fall of Rome, மொகலாய வரலாறுகளை படியுங்கள். அது அரசியலின் சூட்சுமங்களை கற்றுக் கொடுக்கும்" என்றார்.
அவர் கூறியவாறு நன்கு வாசித்தேன்.
அவர் கூறியதை புரிந்துணர்ந்தேன் ஆனால் எனக்கு கிடைத்தது எல்லாம் நிராகரிப்பும், இரணங்களும் தான்.
சுரேந்திர மோகன் நல்ல சிந்தனையாளரும், எழுத்தாளரும் கூட. அவரைச் சுற்றி ஒருக்கூட்டம் இருந்துக் கொண்டே இருக்கும். அதற்கு காரணம் அவர் பிரச்சனைகளை கையாளும் முறைகளும், கருத்துக்களும் தான். அத்தனை அனுபவபூர்வ பாடமாக இருக்கும். இதனால் 58 வயதை நெருங்கும் அவரை ஏறத்தாழ 25வயது மதிக்கத்தக்க, மிக அழகான சகோதரி ஒருவருக்கு அவர் மீது ஈர்ப்பு எற்பட்டு, அவரை துரத்தி, துரத்தி காதலித்து கரம் பிடித்தார்.
காதலுக்கு கண்ணில்லை என்பார்கள் ஆனால் அவரது மனைவி சுரேந்திரமோகன் அவர்கள் மீது கொண்டது அறிவு சார்ந்த ஈர்ப்பு அதன் வளர்ச்சி காதல் வடிவமானது.
ஏனோ இன்று அவர் என் நினைவுகளில்...
#சுரேந்திரமோகன்
#சோஷலிஸ்ட்
#KSRadhakrishnanposting
#KSRadhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
No comments:
Post a Comment