Saturday, April 22, 2017

நகசல் பாரி இயக்கம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன, நினைவூட்டல் பதிவு.


நகசல் பாரி இயக்கம் தொடங்கப்பட்டு இன்றுடன்  ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன,  நினைவூட்டல் பதிவு.
---------------------------
1967 நக்சல் பாரி எனும் கிராமத்தில் விமல் கேசன் எனும் ஆதிவாசி நிலத்தை உழுவதற்கு சட்டத்துறை அனுமதி வழங்கியது. ஆனால் அங்கு வசித்து வந்த நிலக்கிழார்கள் அவரை துன்புறுத்தி சித்ரவதை செய்தனர். இதனை எதிர்த்து கிளர்ந்தெழுந்த காரணத்தால் தான் அந்த குழுவிற்கு நக்சல் பாரி இயக்கம் என பெயர் பெற்றது.

நக்சல் பாரி இயக்கத்தின் பொதுசெயலாளர் சாரு மஜூம்தார்.  கம்யூனிச தோழர்கள் , புத்தக வாசிப்பு பழகம்மற்ற பலருக்கும்  பலருக்கும் இப்பெயர்  புதிதாக இருக்கும்.  சுதந்திர இந்தியாவில் அரசுக்கு எதிரான புரட்சிக்கு வித்திட்டவர் எனலாம்.  நக்சல் பாரி இயக்கத்தின் பொது செயலாளர்.  இதனை பதிவு செய்வதின் நோக்கம் சாரு மஜூம்தாரின், அல்லது நக்சல் பாரி இயக்கத்தின் சித்தாந்தத்தை நியாயப் படுத்தவில்லை.  ஆனால் அந்த இயக்கம் ஏற்படுத்திய எழுச்சியும் , புரட்சியும்  வரலாற்றில் அழியாத தழும்புகளை மறுக்கவோ மறைக்கவோ இயலாது.  இயக்கத்தை சார்ந்த குழுவினருக்கு ஒரு வேலையை அளிப்பார்கள். அந்த பணியில் உயிரிழந்தால் அதற்கு இழப்பீடு வழங்கமாட்டார்கள்..அவ்வாறு வழங்கினால் அது கூலிப்படை என்று  கூறப்பட்டு வரலாற்றில் தியாகங்களாக நிலைத்து இருக்காது. ஓரிடத்தில் பணியை நிறைவேற்ற வேண்டுமெனில் அந்த இடத்தில் கூலி வேலையை தேடி தங்களது அத்தியாவசிய தேவைகளை அவர்கள் தான் தேடிக் கொள்ள வேண்டும்..

ரஷ்ய புரட்சியாளரான லெனின் பிறந்தநாளன்று ஏப்ரல் 22-1967 அன்று  கல்கத்தாவில்  பொதுக்கூட்டத்தில் புரட்சி உரையாற்றி " அழித்தொழிப்பு " முழக்கதை முழங்கி ஐம்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில்  தொழிற்சங்கங்கள் தொடங்கி இடது, வலது கம்யூனிஸ்ட்டுகளாக வளர்ந்து கட்டெரும்பாக தேய்ந்துவிட்டன.
#naxalbari#maoist
#நக்சல்பாரிஇயக்கம்
#சாருமஜூம்தார்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18-04-1967
22-04-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...