------------------------
புதுடெல்லி, ஜந்தர் மந்தர்
பகுதியில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து 29வது நாளாக நடைபெற்று வருகின்றது.
இன்றல்ல , நேற்றல்ல கடந்த சுதந்திர இந்தியாவின் ஆரம்பம் தொட்டே பல ஆண்டுகாலமாகவே விவசாயிகள் போராட்டம் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றது. 1967 களின் தொடக்கத்தில் விவசாயத்திற்கு மின்சாரம் வழங்குவது 16 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறைக்கப்பட்டது. பம்பு செட்களின் மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியவில்லை. 1957ல் இதை எதிர்த்து நாராயணசாமி நாயுடு தலைமையில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தி 16 மணி நேரம் விவசாயத்திற்கு மின்சாரத்தை பெற்றுத் தந்தார். பசுமை புரட்சி என்று விவசாயத்தில் 1960 காலத்தில் புகுத்தப்பட்ட திட்டம் விவசாயத்தை பாழ்படுத்துகின்ற திட்டமாகத்தான் பிற்காலத்தில் தெரியவந்தது. அதற்கு எதிரான போராட்டம். அதன் பின் மின் கட்டண உயர்வை எதிர்த்தும் போராடினார். கடன் வசூல், ஜப்தி நடவடிக்கையை எதிர்த்தும் ஐயா நாராயணசாமி பல போராட்டங்களை நடத்தியதுண்டு. இந்தப் போராட்டங்கள் விளைவாக தமிழகமே விவசாயிகளை பார்த்தது. கோவை, கோவில்பட்டி போன்ற இடங்களில் கட்டைவண்டி போராட்டங்கள் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.
நியூ யார்க் டைம்ஸ் இந்த மாட்டு வண்டிகளை பார்த்து “இந்திய விவசாயிகளின் பாட்டன் டாங்குகள்” என்று அப்பொழுது எழுதியது. இவற்றை எல்லாம் ஏன் திரும்ப திரும்ப சொல்கின்றேன் எனில் உலக நாடுகளின் கவனத்தை விவசாயிகள் போராட்டம் எப்படி எல்லாம் ஈர்த்தது என்பதை உங்களுக்கு புரிய வைப்பதற்காக மட்டுமே. ஆனால் இன்று நிர்வானமாக போராடியும் ஆளும் மத்திய அரசின் கவனத்தையோ அல்லது அவர்களின் மனித நேயத்தையோ கூட ஈர்க்க முடியவில்லை என்பது வேதனையான விடயம்.
பல்வேறு காலக்கட்டத்தில் போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது எல்லாம் மத்திய, மாநில அரசுகள் " தீர்வுக்குழு , அல்லது கமிட்டி" அமைப்பார்கள். பின்னர் அந்த குழுக்கள் அளிக்கும் அறிக்கையை பெற்றுக் கொண்டு அரசு தரப்பில் அறிக்கை கொடுப்பார்கால். அத்துடன் கிடப்பில் போடுவது வாடிக்கை.
1980 விவசாயிகால் பிரச்சனை தீர்வு காண
சி.நாராயணசாமி நாயுடு, ஆர்.கிருஷ்ணசாமி கவுண்டர், பி.பாலசுப்பிரமணியம், பி.வேலுச்சாமி, சி.வையாபுரி, பி.என்.பரமசிவம், தென்.கோவன், முகுந்த.கோவிந்தராஜன், ஜி.வீரய்யன், எம்.ஆதிமூலம் , முத்துமல்லா ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைக்கப்பட்டது.
எம்.எஸ்.காமராஜ் கமிட்டி-2007
இராதாகிருஷ்ணன் கமிட்டி-2007
ரங்கராஜ் கமிட்டி -2008
எம் . எஸ். சாமிநாதன் கமிஷன்
அறிக்கை
சமீபத்தில் அமைக்கப்பட்ட வறட்சி நிவாரன பரிந்துரை குழு என பல்வேறு குழுக்கள் பரிந்துரைத்த பரிந்துரைகளை அரசுகள் நடைமுறைபடுத்தினால் கூட இன்றைய போராட்டத்திற்கு ஆறுதலான தீர்வு கிடைக்கும்.
#விவசாயிகள் போராட்டம்:
#ksrposting
#ksradhakrishnanposting
கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
12/4/2017
No comments:
Post a Comment