Thursday, April 20, 2017

இதுவா தர்ம யுத்தம்

தர்மயுத்தத்தின் முதல் வெற்றி என ஓ.பன்னீர்செல்வத்தின் கொக்கரிப்பை ஊடகங்கள் வாயிலாக  காண நேர்ந்தது. அத்தனை அநியாயத்தையும் அக்கிரமங்களையும் செய்த  ஜெயலலிதா,  சட்டத்தின் பிடியில்  மாட்டிக் கொண்ட போதெல்லாம் " தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,  முடிவில் தர்மமே வெல்லும் "என்பார்.  அவரின் அடிவருடி பன்னீர்செல்வத்திற்கு தர்மம் என்றால் என்னவென்று  எப்படி தெரியும்? ஆங்கிலத்தில் சைலண்ட் ப்ரொனவுன்ஷேஷன் என்பார்களே அப்படித்தான் அவர்கள்  அதர்மத்தை, தர்மம்   என உச்சரித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

நீதிமன்றத்தில்  இரட்டை இலையை மீட்டு விட்டு தர்மத்தின் வெற்றி என்கிறாரா?
கச்சத்தீவை மீட்டுவிட்டு தர்மயுத்தத்தின்  வெற்றி என்கின்றாரா?
விவசாயிகளின் பிரச்சனையை கையில் எடுத்து உச்சநீதி மன்றத்தில் வென்றுவிட்டு தர்மயுத்தத்தின் வெற்றி என்கின்றாரா?
மத்திய அரசு நீட் தேர்வை, இந்தியை  திணிக்கின்றதே, அதனை தடுத்து சமூகநீதி நிலைநாட்டி விட்டு  தர்மயுத்தத்தின் வெற்றி என்கின்றாரா?

ஒரு களவானி இன்னொரு களவானியை வென்றது எப்படி தர்மயுத்தத்தின் வெற்றியாகும்?  காப்பியங்களிலும், புராணங்களிலும் புனிதமாக உச்சரிக்கப்பட்ட  #தர்மம் என்ற சொல் இவர்களால் களங்கப்பட்டுள்ளது.

#KSRadhakrishnanpostings
#KSRpostings
#தர்மயுத்தம்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
20-04-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...