ஐ.நா பொதுக்குழுவின் ஆண்டறிக்கை;அணிலாக இருந்திருக்கின்றேன்
---------------------------
கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா சபையில் தாக்கல் செய்தோம். அதன் தொடர்ச்சியாக இருமுறை நேரடியாக சென்று தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தேன். அத்துடன் நிற்காமல் பழைய தீர்மான நகலுடன் இலங்கை தமிழர்களின் நிலையையும் அங்கு நிலவும் சூழ்நிலைகளை விளக்கியும் மாதம் தோறும் மின்னஞ்சல் அனுப்புவதை வாடிக்கையாக கொண்டிருந்தேன். முயற்சிகளின் பலனாக எங்களது கோரிக்கைகள் குறித்து ஐ.நா பொதுக்குழுவின் ஆண்டறிக்கையில் செய்தியாக வெளியிட்டுள்ளது அடியேனுக்கு மிக்க மகிழ்ச்சி. தமிழ் மண்ணுக்கும் இனத்திற்கும் கடமையை செய்ய அனிலாக இருந்திருக்கின்றேன் என்பதில் திருப்தி அடைகின்றேன். நல்ல வாய்ப்பை நல்கிய தலைவர் கலைஞருக்கும் நன்றிகள்.
#KSRadhakrishnanpostings
#ksrpostings
#unitednationcouncil
#Teso
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
21-04-2017
No comments:
Post a Comment