-----------------------------------
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.
எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்//
என்றெல்லாம் உழவின் சிறப்பை வள்ளுவம் கூறுகின்றது. ஆனால் இந்த மத்திய மாநில அரசுகளின் முன்னால் வள்ளுவம் தோற்றுவிட்டது. அரை நிர்வானத்துடன் சேற்றில் கால் வைத்து சோறுப்போட்ட உழவன் இன்று நம் ராஜபாட்டையில் முழுநிர்வானமாக நிற்கின்றார்கள்.
விவசாயிகள் போராட்டம் இன்றல்ல , நேற்றல்ல காலம் காலம் காலமாக நடந்துக் கொண்டிருப்பது தான். 1974 -1980 காலக்கட்டங்களில் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களுடன் பணியாற்றியவன் என்ற முறையில் சிலவற்றை அறிவேன்.
அவ்வப்போது போராட்டங்கள் நடக்கும், பேச்சுவார்த்தைக்கு அழைப்பாரகள். பேசுவார்கள் பின்னர் மறந்துவிடுவார்கள். இவ்வாறாக போராட்டம் நடந்த போது அன்றைய பிரதமர் இந்திராகந்தி அவர்கள், தலைவர் நாராயணசாமிநாயுடு அவர்களை பேச்சுவார்த்தை நடத்த ராஜபாட்டையான டெல்லிக்கு அழைக்கின்றார் ஆனால் நாராயாணசாமி நாயுடு அவர்கள் இந்திராகாந்தியை தனது சொந்த ஊரான வையம்பாளையத்தில் சந்திக்க வரவேண்டும் என நிபந்தனை விதித்தார். அதன்படி 09-03-1980 அன்று மத்திய அமைச்சர் திரு. ஆர்.வி சுவாமிநாதன் அவர்களுடன் இந்திராகாந்தி அவர்கள் கோவை மாவட்டம், வையம்பாளையம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடதக்கது.
பொதுவாக நாட்டின் மதிப்பை உயர்த்திக் காட்டும் வகையில் ராஜப்பாட்டையில் நிகழ்ச்சிகள் நடக்க்கும். உதாரணமாக சுதந்திரதின, குடியரசு தின அணிவகுப்புகள் பிரமாண்டமாக நடக்கும் போது அண்டை நாடுகள் அதனைக் கண்டு பிரமிக்கும். ஆனால் அதே ராஜபாட்டையில் தான் " விவசாயிகள் வாழும் கிராமத்தில் தான் இந்தியா இருக்கின்றது என்று காந்தியடிகளால் போற்றப்பட்ட விவசாயிகள் அம்மனம் படுத்தப்பட்ட அவலமும் அரங்கேறி இருக்கின்றது இருப்பது வேதனை. விவசாயிகள் விடயத்தில் உலகத்தின் முன் இந்திய அவமானப்பட்டு நிற்கின்றது.
........
நடிகை கவுதமியை சந்திக்க நேரம் ஒதுக்கிய மோடி அவர்களுக்கு
சோறு போடுற விவசாயிய சந்திக்க நேரமில்லை போலும் ....
#விவசாயிகள்போராட்டம்
#டெல்லி
#நாராயணசாமிநாயுடு
#பிரதமர்இந்திராகந்தி
#ksrpost
#ksradhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
10/4/2017
No comments:
Post a Comment