Wednesday, April 26, 2017

சட்டைப்பை அரசியலும்,சாதுர்யமும்

சட்டைப்பை அரசியலும்,சாதுர்யமும்
-------------------------------------

நேற்று சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்தின் ( Bar association) தேர்தல் நடைபெற்றது. நானும் வாக்களிக்க  சென்றிருந்தேன். அப்போது அங்கு உறுப்பினராக இருக்கும் ஒரு வழக்கறிஞரை காண நேர்ந்தது. இன்று நேற்றல்ல பலகாலமாக அவரை பார்த்து வருகின்றேன். ஆனால் அவரை பார்க்கும் போதெல்லாம் அவரது சட்டைப் பாக்கெட்டை பார்க்க தூண்டும்.

ஆரம்பத்தில் ஜெயலலிதா படத்தை வைத்திருந்தார், பின்னர் பன்னீர்செல்வம் படத்தை பையில் வைத்திருந்தார்.  அதன் பின்னர் சசிகலா-ஜெயலலிதா படத்தை வைத்திருந்தார். பின்னர் தினகரன் படத்தை வைத்திருந்தார். நேற்று பார்த்தேன் எடப்பாடி படத்தை வைத்திருந்தார்.

தலைவர்கள் என்பவர்கள் கொள்கை பிடிப்பால் மனதை தொட்டவர்கள் என்ற நிலை மாறி , கொள்ளையடித்து சட்டைப்பையை நிரப்பும் வியபார யுக்தியாக இருக்கின்றார்கள் என புரிந்துக் கொண்டேன்.
பெட்டி அரசியலுக்கு இப்படி பிழைக்கத் தெரிந்தவர்கள் தான் சாணக்கியர்கள்.

முன்னாள் அட்டார்னி ஜெனரல் டி.கே.டி ( வி.கே.திருவேங்கடாச்சாரி) அவர்களை தன்னை சந்திக்குமாறு காமராசர் தகவல் அனுப்புகின்றார். அதற்கு வி.கே.திருவேங்கடாச்சாரி  ," வேண்டுமானால் காமராசரை என்னை வந்து பார்க்க சொல்லுங்கள்" என தலைமை செயலாளர் மூலமாக பதில் கூறினார். காமராசரும் வருத்தம் தெரிவித்து வி.கே.திருவேங்கடாச்சாரி யை சந்தித்து பேசினார்.

வழக்குரைஞர் தொழிலை "நோபல் புரொபஷன்( உன்னதமான தொழில்)' என்று ஆங்கிலத்தில் சொல்வதோடு, வழக்குரைஞர்களை "லேனர்ட் ஃபிரெண்ட்' என்றும் அழைப்பதுண்டு. இப்படியான கீர்த்தி வாய்ந்த தொழிலுக்கு இப்படிப்பட்டவர்களால்  தான் சவாலாக விளங்குகின்றார்கள்.
வழக்குரைஞர் தொழில் செய்பவர்கள் கண்ணியத்துடனும் நிதானத்துடனும் செயல்பட வேண்டும். இது தான் இந்த உன்னதமான வழக்குரைஞர் பணிக்கு இலக்கனமாகும்.

#KSRadhakrishnanpostings
#ksrpostings
#பச்சோந்திஅரசியல்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-04-2017

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...