Sunday, April 16, 2017

காளான் கட்சிகளையும், உப்புமா பார்ட்டிகளையும்:தேர்தல்சீர்திருத்தம்...

காளான் கட்சிகளையும், உப்புமா பார்ட்டிகளையும்:
------------------------------------------

தேர்தல் ஆணையம் காளான் கட்சிகளையும், உப்புமா பார்ட்டிகளையும் காலி செய்ய தயாராகிவிட்டது. ஏற்கெனவே கடந்த வருடம் தேர்தலிலே போட்டியிடாத 150 கட்சிகளை அங்கீகாரமின்றி அப்புறப்படுத்தியது. இன்றைய சுயநல, வணிக, ஆதாய அரசியல் களத்தில் தேர்தல் கமிஷனின் இந்த முடிவை பாராட்ட வேண்டும்.
புதுடெல்லி வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகள் தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டாத கட்சிகளை அரசியலை விட்டு வெளியேற்ற வேண்டும் என நாடாளுமன்ற குழு பரிந்துரைந்துள்ளது.
தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் என பட்டியலிடப்பட்ட 255 அரசியல் கட்சிகளின் நிதி விவகாரத்தை ஆராயும்படி வருமான வரித்துறைக்கு அண்மையில் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது. அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற குழு இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2005 முதல் தேர்தலில் போட்டியிடாத பல்வேறு அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டது. அதில் 255 கட்சிகள் போட்டியிடாதவை என பட்டியலிட்டிருந்தது. கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிக்காகவே அந்த கட்சிகள் இயங்கி வருவதாக தேர்தல் ஆணையம் நம்புகிறது. ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் இருந்தாலும், எந்தவொரு கட்சியின் பதிவையும் ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்படவில்லை.
இதை கருத்தில் கொண்டே வெறும் சலுகைகளை பெறுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என நாடாளுமன்ற குழு பரிந்துரைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து சட்ட துறைக்கான நாடாளுமன்ற நிலை குழு அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், அரசியல் கட்சிகளின் பதிவு விவகாரங்களை மேலும் கடுமையாக்கப்பட வேண்டும். வருமான வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை மட்டும் அனுபவிக்கும், லெட்டர்பேடு கட்சிகளின் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, பார்லிமென்ட் குழு பரிந்துரை செய்துள்ளது.
பா.ஜ.,  காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, திரிணமுல் காங்., இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூட், தேசியவாத காங்கிரஸ் ஆகிய, ஏழு தேசிய கட்சிகள் மற்றும் 58 மாநில கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.
இதைத் தவிர, அங்கீகாரம் பெறாத 1,780 கட்சிகள், தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கட்சிகளை பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், பதிவை ரத்து செய்வதற்கு எந்த அதிகாரமும் இல்லை.
இதனிடையில், பதிவு செய்துள்ள, 255 கட்சிகள், கடந்த, 2005ல் இருந்து எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. அதே நேரத்தில் வருமான வரிச் சலுகை போன்றவற்றை பெற்று வருகின்றன. இந்தக் கட்சிகளை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளோம்.
அவர்களுக்கான நிதி ஆதாரங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என, வருமான வரித் துறைக்கு, தேர்தல் கமிஷன் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது.
இந்த நிலையில், இந்த பிரச்னை குறித்து ஆராய்ந்த, சட்டத் துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழு, தன் பரிந்துரையை அளித்துள்ளது. அதில் கூறியுள்ளதாவது
* அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், பெயரளவுக்கு மட்டும் சிலர் கட்சியை நடத்தி வருகின்றனர், தேர்தல் நேரத்தில் மட்டும் செயல்படுகின்றனர்.
* இதனால், அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது.
* வருமான வரிச் சலுகை உட்பட பல்வேறு வசதிகளை பெறுவதற்காகவே சில கட்சிகள் உள்ளன.
* இது போன்ற மோசடிகளை தடுக்கும் வகையில், அரசியல் கட்சிகள் பதிவு செய்வதற்கான நடைமுறையை கடுமையாக்க வேண்டும்.
 
 #தேர்தல்சீர்திருத்தம்
கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
16/4/2017
#ksrposting
#ksradhakrishnanposting

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...