Sunday, April 9, 2017

வணிக (வியாபார)அரசியல்:

வணிக (வியாபார)அரசியல்:
-----------------
தேர்தல்  சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை  கருத்தில் கொண்டு நேற்று புதுடெல்லியில் கருத்தரங்கம் நடைபெற்றது. அந்நிகழ்வில் இந்திய குடியரசு தலைவர், உச்சநீதிமன்ற மன்ற தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதி மன்ற மூத்த நீதிபதிகள் கலந்துக்கொண்டனர்.

உச்சநீதிபதியின் இரண்டாவது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கலந்துக் கொண்டு பேசினார். தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் அளிப்பது குறித்தும், சட்டத்திற்கு புறம்பான பணப்பரிவர்த்தனைகள் செய்யபடுவதும் அப்பணம் தண்ணீர் போல வாரி இரைக்கப்பட்டு வெற்றி பெறும் ஆரோக்கியமற்ற போக்கை கண்டித்து இந்தித குடியரசு தலைவர், உச்சநீதிமன்ற மன்ற தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதி மன்ற மூத்த நீதிபதிகள் என இந்தியாவின் மிகப் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் வேதனையுடன்  வெட்ட வெளிச்சமாக பேசி இருப்பது வேதனைக்குரியது. மக்களாட்சிக்கு ஏற்பட்டுள்ள களங்கம்.

வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கட்சிகளின் பொறுப்பு;
தேர்தல் சமயத்தில் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது அரசியல் கட்சிகளின் பொறுப்பாகும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தெரிவித்தார்.

தேர்தல் காலத்தில் வெளியிடப்படும் அறிக்கைகள், தற்போது வெற்றுக் காகிதங்களாகி விட்டன. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் போவதற்கு, அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்பது போன்ற சாக்குப் போக்குகள் கூறப்படுகின்றன.
தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மறந்து விடுவார்கள் என்று அரசியல் கட்சிகள் கருதுவதாலேயே, தேர்தல் அறிக்கைகள் வெறும் காகிதங்களாக இருக்கின்றன. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசியல் கட்சிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலின்போது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகளில், ஓர் அறிக்கையில் கூட, தேர்தல் முறையில் சீர்திருத்தம் செய்வது, அடித்தட்டு மக்களுக்கு பொருளாதார-சமூக நீதி கிடைப்பதை உறுதி செய்வது தொடர்பான அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை.
தேர்தலில் இலவசங்கள் வழங்குவது தொடர்பாக அறிவிப்புகளுக்கு எதிராக வழிகாட்டுதல்களை உருவாக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்தது.
இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறும் அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கேஹர் கூறினார்.

உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியதாவது,

தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம். அதிகாரத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு  தேர்தல்கள் இடமளிக்க கூடாது. முதலீடு செய்யும் வணிக அரசியல் என்ற  அவல நிலை. எவ்வித குற்றச்சாட்டுக்கும் இடமளிக்காமல் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நன்னடத்தை நெறி, ஒழுக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
#தேர்தல்சீர்திருத்தங்கள்
#வணிகஅரசியல்
#partymanifestos
#Politicalparties
#ksrpost
#ksradhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
9/4/2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...