Friday, April 28, 2017

போரி நேரு (Fori Nehru).

போரி நேரு (Fori Nehru).

நேரு குடும்பத்தின் முதல் வெளிநாட்டு வரவும் உறவும் இவர் தான் போரிநேரு(Fori Nehru). நேருவின் நெருங்கிய உறவினரான பி.கே.நேரு வின் மனைவி ஆவார். பி.கே.நேரு அசாம் மாநிலத்தின் கவர்னராகவும், அமெரிக்க தூதராகவும் பணியாற்றினார். பங்களாதேஷ் பிரிவினையின் போது அங்கு பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. பி.கே.நேருவை , போரிநேரு திருமணம் செய்துக் கொண்ட பின்னர் தனது பெயரை ஷோபா நேரு என மாற்றிக் கொண்டார். பிறப்பால் இவர் ஹங்கேரியில் பிறந்த யூதப் பெண்மணி. தனது 109வது வயதில் காலமானார் என்ற செய்தி அறிந்தேன். நான்கு முறை நேரில் சந்தித்து பேசி இருக்கின்றேன். ஒருமுறை நடராஜர் சிலை ஒன்று வாங்கி வரமுடியுமா என கேட்டார். நானும் வாங்கி கொடுத்த போது அதற்கான பணத்தை திருப்பி செலுத்தினார். நான் வாங்க மறுத்து பணத்திற்கு பதிலாக புத்தகம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தேன். அதனை ஏற்றுக்கொண்டு புத்தகம் வழங்கினார். யூத மக்களின் நலன் குறித்து பேசுவார்.
எமர்ஜென்சி காலத்தில் இந்திராகாந்தி குடும்பக்கட்டுபாடு திட்ட நடவடிக்கைகளில் அதிக அக்கறை காட்டினார். அதற்கு மக்களிடம் எதிர்ப்புக் குரல் எழுந்தது. இதனை அது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்திராகாந்தி அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. ஆனால் இந்திராகாந்தியின் முகத்திற்கு நேராகவே மக்களின் கருத்து அழுத்தமாக எடுத்துரைத்தவர் போரிநேரு.
#Forinehru
#Ksrpostings
#KSRadhakrishnanpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-04-2017

No comments:

Post a Comment

Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth.

  Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth. Believing in yourself, ...