எம்.எல்.ஏக்களுக்கு ரூ. 1,05,000/-மாக சம்பளத்தை உயர்த்திவிட்டனர்.
————————————————-
பிரதமர்பி.வி.நரசிம்மராவ்,1993-ல் மத்தியில் தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி என்று பணத்தை 1 கோடியை ஒதுக்கினார். அதுவும் ஓரே நாளில் 8 மணி நேரத்தில் மசோதாவை நடாளுமன்றத்தில் வைத்தவுடன் அது ஒப்புதலும் பெற்றது. இந்திய வரலாற்றில் அபத்தமான முடிவாக அன்றைக்கு விமர்சிக்கப்பட்டது.
பல மசோதாக்கள் வருடக்கணக்கில் நிலுவையில் இருக்கும் போது எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு மசோதா மட்டும் 8 மணி நேரத்தில் நிறைவேற வேண்டிய அவசரம் என்ன? ஏனெனில் நரசிம்மராவ் தன் அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக எம்.பிக்களுக்கு அந்த சலுகையை வழங்கினார்.
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள எம்.எல்.ஏக்களுக்கு ரூ.1,05,000/-மாக சம்பளத்தை உயர்த்தியுள்ளார். இன்றைய தமிழக சூழ்நிலையில் இது தேவை தானா?
•கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.•
10/01/2018
No comments:
Post a Comment