கொங்கு வட்டாரத்தில் மட்டும் கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக கர்நாடகத்திற்கு எரிவாயுவை குழாய்களை (gas pipelines)விவசாய நிலங்களில் பதித்து மூலமாக அனுப்பும் திட்டத்தை தமிழக விவசாயிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறி கெயில் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட போவதாக செய்திகள் வருகின்றன. தமிழகம் இனியேனும் விழித்துக் கொண்டு விவசாய நிலங்களை காப்பாற்ற முயலாவிட்டால் தமிழர் நாடு பாலைவனம் ஆகிவிடும் .இன்னும் புதியதாகத் திட்டமிடப்பட்ட எரிவாயு குழாய் வழித்தடங்கள் விவரம் வருமாறு.
குழாய் பாதை ஒன்று :
தூத்துக்குடி - ராமநாதபுரம் - சிவகங்கை - புதுக்கோட்டை - திருவாரூர் - நாகப்பட்டினம் - கடல்லூர் - பாண்டிச்சேரி - காஞ்சிபுரம் - சென்னை
குழாய் பாதை இரண்டு:
மதுரை - சிவகங்கை - திருச்சி - அரியலூர் - நாகப்பட்டினம்
குழாய் பாதை மூன்று:
பாண்டிச்சேரி - திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி - பெங்களூர்.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் தாலுகாவில் கீழடி பகுதியில் பூவந்தி, மடப்புரம் உள்ளிட்ட 9 ஊர்களை பயன்படுத்த மத்திய அரசு முடிவு.
இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிப்பதாக இருந்தால், 14-02-2018க்குள் தெரிவிக்கவும் -
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-01-2018
No comments:
Post a Comment