Thursday, January 18, 2018

உச்ச நீதிமன்றம் வாடிக்கை

உச்ச நீதிமன்றம் வாடிக்கை
————————————
Image may contain: 4 people, people smiling, people standing, suit and textடெல்லியில்,உச்ச நீதிமன்றத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் நீதிபதிகள் அனைவரும் மதியம் ஒன்றாக உணவு உட்கொள்வது ஓர் வாடிக்கை. அதாவது இந்தவாரம் தமிழக நீதிபதிகள் தமிழக உணவை விருந்தளிப்பார்கள். அடுத்தவாரம் இன்னொரு மாநில நீதிபதிகள் என ஒவ்வொரு புதன்கிழமையும் ஒரு மாநில உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டே உணவு உட்கொள்வது வழக்கம்.

நீதிபதி வி.இராமசாமி, நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் ஆகிய தமிழகத்தை சேர்ந்த நீதிபதிகளை சந்திக்க நன்பகலில் அவர்களின் சேம்பருக்கு சென்று இருந்தேன். அன்று புதன்கிழமை என்பதால் மேற்காணும் முறையை எடுத்து சொல்லிவிட்டு கிளம்பினார்.
இதனை ஏன் இன்று சொல்கின்றேன் எனில் கடந்த வாரம் நடந்த சர்ச்சைக்குரிய நான்கு நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஆகியோர் ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொள்கின்றார்கள்.
இந்த சந்திப்பில் அணுக்கம் ஏற்பட்டு நல்ல முடிவை எட்டும் என நம்புகிறேன். நாட்டின் மூன்றாவது தூணாக விளங்கும் நீதித்துறை பாரபட்சமின்றி துலாக்கோல் நிலையில் செயல்பட்டு மக்களுக்கு நம்பிக்கையை அளிக்க வேண்டும். நீதி நிலைநாட்டப் படவேண்டும்.மக்களுக்கு
பரிகாரம் வழங்கும் புனித்த் தளம் .


Image may contain: people sitting, table, food and indoor

*கே. எஸ். இராதாகிருஷ்ணன்*
17-01-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...