Friday, January 19, 2018

முன்பனிக் காலம்.


-------------------------------------
மார்கழி துவக்கத்தில் இருந்து தை மாத இறுதி வரை (Dec - Jan) முன்பனிக் காலமாகும். தமிழ் மாதத்தில் மாசி முதல் பங்குனி வரையான காலம் பின்பனிக் காலம்.
 முன்பனிக் காலத்தில் கடுங்குளிர் இருப்பதால் காலை விடியலில் ஆதவன் மேகங்களாலும், பனி மூட்டத்தினாலும் மறைக்கப்படுகிறது. கடந்த சில வருடங்களாக இந்த பருவத்தில் இதை கவனித்து வருகிறேன். இன்று காலை 6.15 மணியளவில் நடைபயணத்தில் மேகங்களுக்கு நடுவில் ஆதவனுடைய கதிர்கள் சிவப்பாக தெரிந்தன. கதிரவன் முழுமையாக வெளிப்பட சுமார் 7 மணி ஆகிவிடுகிறது. சூரியன் வடக்கில் நிலைபெற்றிருக்கின்ற காலம் இது உத்தராயனம் எனப்படும். வருடத்தில் இறுதியில் கதிரவன் தென் திசையில் நிலைக்கொள்வதால் அக்காலம் தட்சயானம் ஆகும்.உத்தராயனம் துவக்கம் தைத் திருநாள், பொங்கல் திருநாள். ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. இந்த காலக்கட்டங்களில் பனி
மூட்டங்களாலும்,மேகங்களாலும் சூழப்படுகின்றன. இதுவே முன்பனிக் காலம் என்று  அழைக்கப்படுகிறது.
இதைக்குறித்து ரா.பி. சேதுப்பிள்ளை ,
இராமநாதன் செட்டியார். அ. சீனிவாச ராகவன் ஆகியோர் ஆய்வுக்கட்டுரைகள்
வெளி வந்துள்ளன.

ஆறு பருவங்கள்:
தொல்காப்பியத்திலும் இளவேனில், முது வேனில், கார், கூதிர், முன் பனி, பின்பனிக் காலம் என்று ஆறு பருவங்கள் உள்ளன.

பெரும் பொழுதுகள் ஆறு: 
இளவேனில்: சித்திரை, வைகாசி = வசந்த ருது 
முது வேனில்: ஆனி, ஆடி = க்ரீஷ்ம ருது
கார் காலம்: ஆவணி, புரட்டாசி = வர்ஷ ருது
கூதிர்: ஐப்பசி, கார்த்திகை = ஷரத் ருது
முன் பனி: மார்கழி, தை = ஹேமந்த ருது
பின்பனிக் காலம்: மாசி, பங்குனி = சிசிர ருது.

சிறு பொழுதுகள் ஆறு:
வைகறை, காலை, நண்பகல், மாலை, யாமம், ஏற்பாடு.

குறிஞ்சிப் பாட்டில் ஐந்து சிறு பொழுதுகளை ஒரே பாட்டில் காணலாம்:
காலையும், பகலுங் கையறு மாலையும்
ஊர்துஞ்சி யாமமும் விடியலுமென்றிப்
பொழுது………………. (குறுந்தொகை 32)

தொல்காப்பியப் பொருள் அதிகாரத்தில் அகத்திணை இயலில் வரும் சூத்திரம்:“காரும் மாலையும் முல்லை;        குறிஞ்சி


 கூதிர் யாமம் என்மனார் புலவர். 
பனி எதிர் பருவமும் மொழிப. 
வைகறை விடியல் மருதம்; ஏற்பாடு
 நெய்தலாதல் மெய்பெறத் தோன்றும்
 நடுவு நிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே
பின்பனி தானும்  உரித்தென மொழிப”
என்று நிலங்களுக்கு உரிய ஆறு பெரும் பொழுதுகளையும் ஆறு சிறு பொழுதுகளையும் கூறுவார்.

கபிலர் சங்கத் தமிழ் நூலான குறிஞ்சிப் பாட்டில் காலத்தியும்  99 தாவரங்களை பாடியுள்ளார்.

பனிக்காலத்தில் ஓசோன் போன்ற
ஒத்தக்கருத்துக்கள் அகநானூறு, புறநானூறு சொல்கிறது.

ஆறு பருவங்களுக்கு என்று நூலில் எழுதியவன் கவிஞன் காளிதாசன். விக்ரமாதித்தன் காலத்தவனே. காளிதாசனின் ருது சம்ஹாரம் என்னும் நூலைப் படிப்போருக்கு இயற்கை இன்பம் கிட்டும். 

காளிதாசன் தனது ருதுசம்ஹார காவியத்தை கோடையில் துவங்கி எல்லோரும் விரும்பும் வசந்தத்தில் முடிக்கிறான்.

இராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் ஹேமந்த ருது வருணனையும், கிஷ்கிந்தா காண்டத்தில் வசந்த காலம், கார் காலம் பற்றிய வருணனைகளும் வருகின்றன.

#முன்பனிக்_காலம்
#ஜனவரி
 #KSRadhakrishnanPostings
#KSRPostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
19-01-2018

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...