தேவேகவுடா கர்நாடகத்தில் கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்புக்கு அனுப்ப பணம் பெற்றுக் கொண்டு தமிழக்தினைச் சேர்ந்த எம்.ஏ.எம். இராமசாமி, ஏமாற்றுப் பேர்வழி விஜய் மல்லைய்யா போன்றவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார். முன்பெல்லாம் நாடாளுமன்றத்திற்கு நல்லவர்கள், நேர்மையாக பணியாற்றிவர்களை ஜாதி, மதம் கடந்துதகுதியான,தரமானவர்களை அனுப்பினார்கள். இன்றைக்கு எந்தவித அரசியல் பணிகளையும் ஆற்றாமல் தங்களுக்கு ஊழியம் செய்பவர்களை எல்லாம் பணத்திற்க்கு விற்று கண்டவரகளையும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்து நாடாளுமன்றத்தின் மாண்பையே கெடுத்துவிட்டனர்.
இப்போது கெஜ்ரிவாலும் பணம் பெற்றுக் கொண்டு தங்களது ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு பதவி வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இனி ஜாதி, துட்டு, கிரிமினல்கள், புஜப்பலம் ஆகியவைதான் அரசியல் தகுதிகள்.
*கே.எஸ். இராதாகிருஷ்ணன்*
07-01-2018
No comments:
Post a Comment